உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சியில் காரசார விவாதம் நடப்பது சகஜம்: தந்தையை சந்தித்தபின் அன்புமணி பேட்டி

கட்சியில் காரசார விவாதம் நடப்பது சகஜம்: தந்தையை சந்தித்தபின் அன்புமணி பேட்டி

புதுச்சேரி: 'ஜனநாயக கட்சியில் விவாதம் நடப்பது சகஜம் தான்' என தந்தையை சந்தித்த பின், நிருபர்கள் சந்திப்பில் அன்புமணி தெரிவித்தார்.புதுச்சேரி அருகே பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று பா.ம.க., சார்பில், '2024க்கு விடை கொடுப்போம்; 2025ஐ வரவேற்போம்' என்ற தலைப்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மேடையிலேயே அக்கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனான கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையே, நேரடியாக நடந்த காரசார பேச்சு மோதல், ஏற்பட்டது. குடும்ப உறுப்பினரான முகுந்தன் பரசுராமனுக்கு இளைஞர் அணி தலைவர் பொறுப்பு வழங்கும் விவகாரத்தில் இருவரும் மோதிக் கொண்டனர். ராமதாஸ், ''நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். புரிகிறதா... யாராக இருந்தாலும், நான் சொல்வதை கேட்கவில்லை என்றால், யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது' என கோபமாக தெரிவித்தார். இதையடுத்து அன்புமணி, தனியாக பனையூரில் அலுவலகம் தொடங்கி இருப்பதாகவும், தன்னை அங்கு வந்து சந்திக்கலாம் என்றும் பொதுக்குழுவில் அறிவித்தார்.இந்த பிரச்னை கட்சியினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, தந்தை - மகன் இடையே சமரசம் பேசினர். ராமதாஸ் -அன்புமணி இடையே மோதல் வெடித்த பிரச்னைக்கு காரணமாக கருதப்படும் முகுந்தன், 'தனக்கு எந்த பதவியும் வேண்டாம். நான் பிரச்னைக்கு காரணமாக விரும்பவில்லை' என்று கூறி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், இன்று (டிச.,29) தைலாபுரம் தோட்டத்தில் தந்தையை அன்புமணி சந்தித்தார். இருவரும், குடும்பத்தினர் முன்னிலையில் பிரச்னை பற்றி நீண்ட நேரம் பேசினர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், அன்புமணி கூறியதாவது: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உடன் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம். பா.ம.க., வளர்ச்சிப் பணிகள் குறித்து ராமதாஸ் உடன் பேசினேன். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல், ஜாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து குழுவாக பேசினோம். இந்தாண்டு எங்களுக்கு முக்கியமான ஆண்டு, மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் போட்டுள்ளோம். இதற்கு ஏற்ப எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் தலைமையில் விவாதித்தோம். எங்கள் கட்சி ஒரு ஜனநாயகம் கட்சி. ஜனநாயக கட்சியில் நடக்கின்ற பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது சகஜம். எங்களுக்கு ஐயா, ஐயா தான். இன்றைக்கு ஐயாவிடம் பேசி கொண்டு இருந்தோம். எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்னை குறித்து, நீங்கள் பேசுவதற்கு ஏதும் தேவையில்லை. எங்களுடைய உட்கட்சி பிரச்னை. நாங்கள் பேசி கொள்ளுவோம். இவ்வாறு அன்புமணி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

rama adhavan
டிச 29, 2024 19:49

நேற்று கூட்டத்தில் பலர் முன்னாடி குடிமிப்புடி சண்டை போட்டு விட்டு இன்று வீட்டில் சிலர் முன்னிலையில் அரசியல் பேச்சாம். நம்புபவன் கிறுக்கு? எப்படி வளரும் இக் கட்சி?


KRISHNAN R
டிச 29, 2024 19:30

தேசிய அளவிலும், இங்கு மாநில, மற்ற மாநில..கட்சிகள்.. பதவிகள் எல்லாம்,, வாரிசு க்கு..மட்டும்.. தான்.. செயல் படுவது ஒரே.... குரூப்க்கு. மட்டும். இதன் பெயர்.. ஜனநாயக அமைப்பு...... நல்லா வருவீங்க


V வைகுண்டேஸ்வரன்
டிச 29, 2024 17:31

// கட்சியின் உட்கட்சி பிரச்னை குறித்து, நீங்கள் பேசுவதற்கு ஏதும் தேவையில்லை// இதே நிலைப்பாட்டைத் தானே பிற கட்சிகளின் பிரச்சனை குறித்தும் எடுக்க வேண்டும்? ஆனால் அன்புமணி, "திமுக ஏன் இவரை துணை முதல்வர் ஆக்கலை? அவரை ஏன் ஆக்கியது " என்று பேசலாமா? யோசியுங்கள்.


Arul Dev
டிச 29, 2024 19:51

துணை முதல்வர் - கட்சி பதவி அல்ல. அது அரசு பதவி...


திராவிட மாடல் பற்றாளர், kk nagar
டிச 30, 2024 07:18

அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்? உன் daleevaru சொன்னது. போய் முட்டு குடு. இன்னும் எவ்ளோ காலத்திற்கு உன் இனத்திற்கு எட்டப்ப வேலை செய்யும் உன் குணம்....?


ko ra
டிச 29, 2024 17:27

பெயர் பலகை தமிழ் வேணும் என்று போராட்டம் செய்வார்கள். ரயில் நிலையத்தில் தார் போட்டு அழிப்பார்கள். ரிலையன்ஸ் முன்பு போராட்டம் செய்வார்கள். வீட்டில் ஹிந்தி பெயர் வைப்பார்கள். வீட்டு கூர்கா வாக தமிழனை நம்பி வைக்க மாட்டார்கள். Highy selfish political party. Hypocrates.


venugopal s
டிச 29, 2024 16:33

ஆமாம், நான் அவரைக் கேவலமாகப் பேசுவேன், அவர் என்னைக் கேவலமாகப் பேசுவார். இதெல்லாம் எங்கள் கட்சியிலும் குடும்பத்திலும் சகஜம் என்கிறாரா?


nisar ahmad
டிச 29, 2024 16:08

மக்கள் விரோத அரசு இதை அகற்றுவோம் என்றால் 15/இட ஒதுக்கீடு தந்தால் ஆதரிப்போம் என்றீர்களே 15/தந்தால் மக்கள் விருப்ப அரசாக மாறொ விடுமா?.


Anantharaman Srinivasan
டிச 29, 2024 15:47

இனி சொத்து பிரிக்கும் போதுதான் பெரிய தகராறு வரும்.


அப்பாவி
டிச 29, 2024 14:59

கட்சி கூட இல்ல. குடும்பச் சொத்து பிரிக்கிற விவகாரம் மாதிரி இருக்கு. ரொம்ப சண்டை போட்டுக்காதீங்க.


Svs Yaadum oore
டிச 29, 2024 14:58

இதெல்லாம் திட்டமிட்ட நாடகம்...வாரிசு அரசியல் குடும்ப கட்சி என்ற விமர்சனங்களை தவிர்க்கவே இந்த நாடகம் .....


Barakat Ali
டிச 29, 2024 14:53

இது சகஜம் .... உட்கட்சி பிரச்னை .... நாங்க பார்த்துக்குறோம் ன்னு சொல்றீங்க .... நியாயமான பேச்சு .... ஆனா பொதுவாழ்க்கை ன்னு வந்துட்டா நீங்களா அடிச்சு குத்திக்கிட்டு ரத்தக்களரி ஆனா நாலு பேரு வந்து விலக்கி உடத்தான் செய்வாங்க .... யாரும் வராதீங்க. இது எங்க பர்சனல் மேட்டர் ன்னா "அதை ஊட்டுக்குள்ளாற வெச்சுக்குங்க .... இப்படி பப்லிக்கா நாறக்கூடாது ன்னு சொல்லி உமிழ்ந்துருவாங்க ... பார்த்து செய்யுங்க .....


சமீபத்திய செய்தி