உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சியைப் பறிக்க சூழ்ச்சி செய்கிறார் அன்புமணி: ராமதாஸ் குற்றச்சாட்டு

கட்சியைப் பறிக்க சூழ்ச்சி செய்கிறார் அன்புமணி: ராமதாஸ் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: ''கட்சியின் வளர்ச்சிக்கு அன்புமணி எதுவும் செய்யவில்லை. கட்சியைப் பறிக்க சூழ்ச்சி செய்கிறார்'' என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=il52a5t2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஐயா என்று சொன்னவர்களை ராமதாஸ் என்று சொல்ல வைத்தவர் அன்புமணி; என் மீது உயிரையே வைத்திருந்தவர்களுக்கு, பணம் கொடுத்து எனக்கு எதிராகத் தூண்டிவிடுகிறார். என்னைச் சந்திக்க வந்ததாக அன்புமணி பொய் சொல்கிறார். அவர் தைலாபுரம் வரவும் இல்லை; நான் கதவை அடைக்கவும் இல்லை. கட்சியின் வளர்ச்சிக்கு அன்புமணி எதுவும் செய்யவில்லை. கட்சியைப் பறிக்க சூழ்ச்சி செய்கிறார். அன்புமணி சார்பாக அதாவது சமாதானம் பேச வந்த கட்சி அதிமேதாவிகள் அனைவரும் இதேபோலவே பாடியதால் தான், கடைசி பேச்சுவார்த்தையின் போது தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

சின்னமும் போச்சு

அதன் பிறகு அன்புமணி அவருடைய அம்மாவை மட்டும் பார்த்துவிட்டு என்னிடம் எதுவுமே பேசாமல் சென்றுவிடுவார். நான் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்று கட்சிக்காரர்கள் மத்தியில் பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு கொண்டிருக்கிறார்.பெரிதாக ஒன்றுமில்லை. நான் சொன்னது கட்சி அங்கீகாரம் இல்லாமல் இருக்கிறது. சின்னம் இல்லாமல் இருக்கிறது. கட்சிக்கு தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் இல்லை. சின்னமும் போச்சு.

கட்சி அங்கீகாரம்

வரும் சட்டசபை தேர்தல் கட்சி கூட்டணி சம்பந்தமாகவும், வேட்பாளர் நியமனம் சம்பந்தமாகவும், கட்சி சின்னம் பெறுவது சம்பந்தமாகவும் கட்சி அங்கீகாரம் பெறுவது சம்பந்தமாகவும் வரும் சட்டசபை தேர்தலை நான் தலைமை ஏற்று வழிநடத்துகிறேன் என்று நிறுவனர் என்ற முறையில் முடிவெடுத்தேன். இதற்கு, 'அன்புமணி முடியாது. நீங்கள் முடிவெடுக்ககூடாது. நான் தான் முடிவெடுப்பேன். நான் தான் கூட்டணியை பேசுவேன். நான் தான் வேட்பாளரை முடிவு செய்வேன்' என்று பிடிவாதம் செய்வது தான் பிரச்னை. அதுமட்டுமல்ல, கட்சியில் உள்ள பொறுப்பாளர்களை மாற்றுவதும் அல்லது புதிதாக போடுவதும் தான் பிரச்னை. அந்த அதிகாரம் எனக்கு தான் இருக்க வேண்டும். நான் உருவாக்கிய கட்சியில் நான் முடிவெடுக்க கூடாது என்று என்னை நிர்பந்தம் செய்ய அன்புமணிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

டம்மியாக...!

அன்புமணியிடம் கட்சியை கொடுத்துவிட்டு, நிறுவனர் ஆகிய நான் டம்மியாக தைலாபுரம் தோட்டத்தில் கதவை சாத்திக்கொண்டு கொள்ளு பேரன்களுடன் விளையாட வேண்டும் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது முடியாது. என்னை உயிர் மேலாக மதிக்கின்ற பாட்டாளி சொந்தங்களை நான் தினமும் பார்க்காமல், அவர்களோடு தொலைபேசியில் பேசாமல் என்னால் இருக்க முடியாது. மக்கள் என்னை வெகுவாக நேசிக்கிறார்கள் என் மேல் உயிரையே வைத்திருக்கிறார்கள். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Easwar Kamal
ஆக 08, 2025 16:44

ஒழுங்கா கட்சியை மவன்காரன் கிட்ட கொடுத்துட்டு ஒதிங்கிக்கலாம். வீர வேசம் பேசிய வைகோ எல்லாம் மவன் சொல்றதை கேட்டுட்டு ஒதிங்கிகளை. அதுதான் மரியாதை அதை விட்டுட்டு எதுக்கு இந்த ஜம்பம் .


சுந்தர்
ஆக 07, 2025 20:45

1000 வருஷத்துக்கு ஐயா இருக்கப் போகிறார். எல்லாரும் நகருங்க... நகருங்க...


Chandru
ஆக 07, 2025 19:23

Old man still clinging to party and post. Pity him


raja
ஆக 07, 2025 18:42

இவருக்கு இருந்த மதிப்பு மரியாதையை இவரே கெடுத்துக்கொண்டார் இவரை நம்பின பாட்டாளிகளை இவர் மதிக்கவில்லை இவர் வளர்த்த கட்சிதான் ஆனால் இப்போது இவர் நடந்துகொள்ளும் விதம் பாட்டாளிகளை அதுவும் பல இன்னல்களை சந்த்தித்து பாமகவை ஆதரிக்கும் மக்களுக்கு துரோகம் செய்வதாகவே நினைக்க தோன்றுகிறது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 07, 2025 18:33

தொலைக்காட்சி மெகா சீரியல் போல் உள்ளது அப்பா மகன் விவகாரம்.


suresh guptha
ஆக 07, 2025 16:14

EVEN IF U GIVE FREE,NOBODY WILL TAKE ORLEAD UR PARTY,IF U COME AFTER SIX MONTHS PARTY WILL BE THERE NO BODY WILLHIZACK,BECAUSE ITIS WASTE OF TIME ANDMONEY


panneer selvam
ஆக 07, 2025 16:13

Respected Ramdass ji , you have crossed 86 years , at this age , better to relax in your luxurious farm house and swim in inbuilt swimming pool with your great grand kids and not to needle the work of your 58 years old son . You may continue with your daily morning news reading which no one is bothered to look at it . At least it is good time pass for you . Please give away just to gain respect on your age and experience .


Loganathan Balakrishnan
ஆக 07, 2025 16:01

இங்கே அமெரிக்கா கோமாளி செய்யற விஷயம் நாட்டுக்கு என்ன ஆகுமோ தெரியல இங்க இவங்க வந்து நடுவுல காமெடி பண்ணி கொண்டு இருக்கிறார்கள் ரெண்டு பெரும் பேசி சமாதானம் ஆகுங்க சீக்கிரம்


ராஜூ
ஆக 07, 2025 15:00

இன்னும் முடியாகவில்லையோ பெட்டி யாருக்கு என்று ?


Jack
ஆக 07, 2025 14:56

இனிமே என்ன புதுசா மக்களுக்கு செய்து விடப்போகிறார் ..அந்த பக்கம் பிரேமலதா விஜய்காந்த் படத்தை யாரும் பயன்படுத்த கூடாது என்று சவுண்டு விடுகிறார் …


சமீபத்திய செய்தி