உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்; அன்புமணி

செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்; அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ofi749xh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில் காப்பாற்றும் நோக்கத்துடன் பணம் கொடுத்து ஏமாந்த அப்பாவிகள் உள்ளிட்ட 2000 பேரை அந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களாக திமுக அரசு சேர்த்திருக்கிறது. ஒரு வழக்கில் 2000 பேர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டால், வாழ்நாள் முடியும் வரை விசாரணை முடியாது என்பதற்காகத் தான் திமுக அரசு இவ்வாறு செய்ததாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக காவல் துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைகுனிய வேண்டும்.உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்போது தெரிவித்திருக்கும் கருத்தைக் கடந்த காலங்களில் பலமுறை பா.ம.க. தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி செந்தில் பாலாஜி செய்தது ஊழல் என்று என்று பாமக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அவர் செய்தது தியாகம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான்றிதழ் அளித்த முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கினார். இதற்கும் பா.ம.க. கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.ஒரு மக்கள் நல அரசு மக்களுக்கு ஆதரவாகத் தான் செயல்பட வேண்டும். ஆனால், மக்களின் நலன்களை பலி கொடுத்து செந்தில் பாலாஜியை பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் முயல்கிறார். இதற்கு உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமது நீதி தவறிய செயலுக்காக தமிழக மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கிலிருந்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களை நீக்கி விட்டு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

VSMani
ஜூலை 30, 2025 16:35

திமுக ஜெயா வழக்கை கர்நாடக நீதிமன்றம் விசாரிக்க சொன்னதுபோல் பாமக செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்கிறது. சரிதான்.


VSMani
ஜூலை 30, 2025 16:29

செந்தில் பாலாஜி செய்தது ஊழல் என்று என்று பாமக மட்டுமல்ல ஸ்டாலினே குற்றஞ்சாட்டினார். வீடியோக்கள் இன்னும் உள்ளது. இந்த நிலையில், அவர் செய்தது தியாகம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான்றிதழ் அளித்த முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கினார். இது எல்லாம் அரசியலில் சகஜம் தான்ப்பா என்று கவுண்டமணி சொல்வதுபோல்தான். இதேபோல்தான் ராமதாசும். ஜெயா பெட்டி கொடுத்து கூட்டணிவைத்தால் ஜெயாவை ராமதாஸ் அன்பு சகோதரி என்பார். பெட்டி கொடுக்காவிட்டால் ஊழல்காரி கொள்ளைக்காரி என்பார். கருணாநிதி பெட்டி கொடுத்து கூட்டணிவைத்தால் கருணாநிதியை ராமதாஸ் தமிழின தலைவர் என்பார். பெட்டி கொடுக்காவிட்டால் தமிழின துரோகி என்பார். பணப்பெட்டிதான் முடிவு செய்கிறது ஒருவர் ஊழல்வாதியா தியாகியா என்று. இதுதான் அரசியல்.


Arasu
ஜூலை 30, 2025 15:10

உன் மேல உள்ள கேஸையும் வேற இடத்துக்கு மாத்தலாம்


Rameshmoorthy
ஜூலை 30, 2025 14:07

Shame on DMK government and Stalin should have resigned after the court SC remark


Narayanan
ஜூலை 30, 2025 14:00

உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து இந்த வழக்கை டெல்லிக்கு மாற்றி உத்திரவு செய்யவேண்டும் . விரைவில் வழக்கும் முடியும்


SUBRAMANIAN P
ஜூலை 30, 2025 13:19

நீங்க எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளுங்கள். எங்களுக்கு உச்ச நீதிமன்றம் இருக்கு. அங்க எங்க காரியத்தை சாதிச்சுக்கொள்வோம். இதுபோன்ற ஊழல்கட்சிகளின் ஆட்சியை பார்த்து இந்தியமக்கள் , நீதிமன்றங்கள், வக்கீல்கள், நீதிபதிகள் எல்லோரும் தலைகுனிய வேண்டும். வெட்கக்கேடு..


Chandru
ஜூலை 30, 2025 15:59

Well said and right said Subramanian Sir


V Venkatachalam
ஜூலை 30, 2025 19:41

வெட்ககேடா?இது என்ன புதுசா இருக்கே...தீயமுக அகராதியில் எந்த பக்கத்தில் இருக்குங்க?கொஞ்சம் சொல்லுங்க.நான் தேடித்தேடிஅலுத்து போயிட்டேங்க. பிளீஸ்..


புதிய வீடியோ