உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனிம வளங்கள் கொள்ளையை அரசு வேடிக்கை பார்ப்பதாக அண்ணாமலை புகார்

கனிம வளங்கள் கொள்ளையை அரசு வேடிக்கை பார்ப்பதாக அண்ணாமலை புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதை, தி.மு.க., அரசு வேடிக்கை பார்க்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கை:அனுமதியின்றி கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்தியதாக, கோவை மதுக்கரை தி.மு.க., நகராட்சி தலைவர் நுார்ஜகானின் மகன் ஷாரூக்கானுக்கு சொந்தமான, இரண்டு டாரஸ் லாரிகள், கோவை மாவட்ட கனிமவள துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுதும் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. முழுக்க முழுக்க தி.மு.க.,வினரால் நடத்தப்படும் இந்த கொள்ளையால், தமிழக வளங்கள் பறிபோகின்றன. தமிழக மக்களுக்கு தேவைப்படும் கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றன. இதனால், அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தி.மு.க.,வினர் பணம் சம்பாதிக்க, மாநிலத்தையே சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம், தி.மு.க., அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுதும் கனிமவள கடத்தலில் ஈடுபடும், பல்லாயிரக்கணக்கான லாரிகளில் சிக்கியது இரண்டு மட்டுமே. கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, என கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது, தி.மு.க., அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Barakat Ali
மார் 17, 2025 15:43

அண்ணே ..... டி எம் கே ஃபைல்ஸ் 3, ரிலீஸ் எப்பண்ணே ????


Mario
மார் 17, 2025 09:40

முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க


மலை நேசன்
மார் 17, 2025 15:27

அவர் வருங்கால பிரதமர். திராவிடத்தை தோலுரிக்கும் அண்ணாமலை வாழ்க. வாய் சொல் வீனர்களின் கொட்டத்தை அடக்கும் அண்ணாமலை வாழ்க வளர்க


Barakat Ali
மார் 17, 2025 15:41

சொல்லி வைத்தது போல அனைத்து திமுக கொத்தடிமைகளும் இப்படித்தான் பதிவிடுகிறார்கள் .... ஊழல், அராஜகத்தைத் தட்டிக்கேட்க சாதாரண குடிமகனாக இருந்தால் போதும் ....


ஆரூர் ரங்
மார் 17, 2025 09:21

உச்ச உயர் மன்றங்கள் மாறும் வரை ஊழல் சுரண்டலை நிறுத்த மாட்டார்கள். கனிம வள வழக்கில் மந்திரி எப்படி தப்பிக்கிறார் பாருங்க. திருடன் கையில்தான் போலீஸ்.


अप्पावी
மார் 17, 2025 09:18

சாட்டையாலாடிச்சிக்கிட்டு கவனற்றை ஈர்க்கலாமே? பஞ்சானாலும் பரவாயில்ல.


Mettai* Tamil
மார் 17, 2025 10:40

எதை வச்சு எவ்வளோ அடிச்சாலும் உங்களைபோன்றவர்களுக்கு சொரணை வரவா போகிறது .....ரூ 1000 கோடி ....


vivek
மார் 17, 2025 11:15

உன்னை வீட்டுல சேர்த்து கொள்கிறார்களா கொவாளு


Rajarajan
மார் 17, 2025 09:15

ஆமா, இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்ன, தமிழகத்தில் மணல் கொள்ளைனு, satellite வெச்செல்லாம் ஆதாரம் தந்தீங்க. அது சம்பந்தமான தமிழக அமைச்சர், மர்மமா டெல்லிக்கு ராத்திரியோட ராத்திரியா போயிட்டு வந்தாரு அவசரமா. யாரை சந்திச்சாரோ, என்ன பேசினாரோ தெரியல. அதுக்கு அப்பறம் உங்க சத்தத்தையே காணோம்.


ராஜா
மார் 17, 2025 08:36

தென்காசி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான டராஸ் வண்டிகளில் கனிமங்கள் கொள்ளை போகுது கேட்க தடுக்க ஆள் இல்லை


orange தமிழன்
மார் 17, 2025 07:39

இவ்வளவு ஊழல் புகார் தெரிவித்து கொண்டே இருந்தால் என்ன உபயோகம்.. மத்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டாமா? அதை தானே மக்கள் எதிர் பார்க்கிறார்கள் இப்படியே போனால் உங்கள் அறிக்கை எல்லாம் வெத்து அறிக்கை ஆகி விட கூடாது என்று ஆதங்க படுகிறோம்..


G Mahalingam
மார் 17, 2025 08:27

மத்திய அரசு நடவடிக்கை எடுத்தாலூம் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அவர்களை அமைச்சர் பதவியில் மீண்டும் உட்கார வைக்கிறது. அதற்கு பருத்தி மூட்டை அங்கேயே இருந்து இருக்கலாம். மக்கள் வரிபணமாவது மிச்சம் ஆகும்.


Iyer
மார் 17, 2025 06:39

கேஜ்ரிவாலும் அவரது மந்திரிசபையில் பெரும்பாலோனோர் - சிறை சென்ற உத்தமர்கள். அதே கதிதான் ஸ்டாலின் மற்றும் அவரது மந்திரிசபையினருக்கு வரப்போவுது.


अप्पावी
மார் 17, 2025 06:37

பிரதான் மந்திரிக்கீ கனிம வள கொள்ளை தடுப்பு யோஜனா கொண்டாரச் சொல்லுங்க. மும்மொழி மாதிரி.


M R Radha
மார் 17, 2025 07:52

200 ரூவாவுக்கு மாரடிக்கும் நீயே ஏன் ஓர் புகார் மனுவை அளிக்க கூடாது?


Mettai* Tamil
மார் 17, 2025 10:44

எல்லாமே அவங்க தான் பாக்கோணும் ....நமக்கு 200 கிடச்சா போதும் .....


Iyer
மார் 17, 2025 06:37

"தி.மு.க., அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது." - வேறு என்ன செய்யமுடியும். முதல்வரே முழுக்கொள்ளை. மத்த மந்திரிகளை எந்த முகம்வைத்து CONTROL செய்யமுடியும்.


முக்கிய வீடியோ