உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடு: எம்.பி., நவாஸ்கனிக்கு அண்ணாமலை கண்டனம்

மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடு: எம்.பி., நவாஸ்கனிக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, இரு தரப்பினரிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியிருப்பது முற்றிலும் தவறான செயல்; அவரது செயல் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.ஹிந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலையில், அங்குள்ள தர்காவில் ஆடு வெட்ட முயன்ற சிலரை போலீசார் தடுத்தனர். தாங்கள் வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது எனக்கூறி, சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. 'வழிபட தடையில்லை. உயிர்பலி கொடுக்க தான் தடை' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை பொருட்படுத்தாமல், ஜன., 18ல் ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்க போவதாக கூறி, சில முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மலையேற முயன்றனர். போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இம்மலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாக, ஹிந்து அமைப்புகள் போராடி வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1jcegdty&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ் கனி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் பேசியதாகவும், சமைத்த அசைவ உணவை எடுத்து செல்ல தடை இல்லை என போலீஸ் கமிஷனர் கூறியதை அடுத்து சமைத்த அசைவ உணவை எடுத்துச் சென்று மக்கள் உண்டனர் எனக்கூறியிருந்தார்.இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆன்மிக பூமியான தமிழகத்தில், அனைத்து மதங்களைச் சார்ந்த ஆலயங்களுக்கும் அவற்றிற்கான வழிபாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. அவற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும். ஆனால், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை வைத்து நடைபெறும் நிகழ்வுகள் விரும்பத்தகாதவையாக இருக்கின்றன.குறிப்பாக, எம்.பி., நவாஸ் கனி, இரு தரப்பினரிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில், ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் மீது கும்பலாகச் சென்று, அசைவ உணவு உண்டதாக கூறியிருப்பது, முற்றிலும் தவறான செயல் மட்டுமின்றி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுமாகும்.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், உலகில் பல மதங்கள் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தனை ஆண்டு காலமாக, தமிழக மக்கள் சமூக நல்லிணக்கத்துடன், அனைத்து மதங்களுக்குமான வழிபாட்டு முறைகளை மதித்து நடந்து வருகின்றனர். எம்.பி., அதனைக் கெடுக்கும்படி நடந்து கொண்டிருப்பது, முட்டாள்தனமானது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உடனடியாக, இது போன்ற சமூக அமைதியைக் கெடுக்கும் வீண் நடவடிக்கைகளைக் கைவிட்டு, இத்தனை ஆண்டு காலமாகத் தொடரும், சகோதரத்துவமான நடைமுறைகளையே தொடர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

AMLA ASOKAN
ஜன 23, 2025 08:00

முஸ்லீம் மதத்தினர் 400 ஆண்டுகளாக தடை செய்யப்படாமல், காலம் காலமாக நடை பெற்று வந்த ஒரு நிகழ்வை தான் செய்ய விரும்பினார்கள். DMK அரசின் போலீஸ் அதை தடுத்து நிறுத்தி விட்டனர். முஸ்லிம்கள் அதை பெரிதாக்கவில்லை. ஆனால் அந்த சம்பவம் குறித்து எதற்கு இவ்வளவு முஸ்லீம் வெறுப்பு விமர்சனங்கள், அதை ஊதிப் பெரிதாக்கும் முயற்சிகள்? DMK அரசு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள்? மதக்கலவரம் செய்ய யார் முனைப்பு காட்டுகிறார்கள்?


RAMAKRISHNAN NATESAN
ஜன 23, 2025 00:21

புதுச்சேரி முஜீப் அலி செஞ்ச வேலை ........ இன்ஸ்டாகிராம் மூலமாக பழகிய சிறுமியை தனிமையில் வரச்சொல்லி மிரட்டியவன் கைது செய்யப்பட்டுள்ளான் ..... ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி 20-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் விளையாடியவன் ..... மார்க்கத்தவர்கள் ஒரு மார்க்கமாகத்தான் திரிகிறார்கள் .....


M Baskar
ஜன 23, 2025 00:05

நிச்சயமாக அகங்கார மனம் கொண்ட மனிதர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும்.


M Baskar
ஜன 23, 2025 00:04

நிச்சயமாக அகங்கார மனம் கொண்ட மனிதர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும்


UTHAYA KUMAR
ஜன 22, 2025 23:55

ஒற்றுமை இல்லாத ஹிந்து அழிந்து போவான் இதுதான் வரலாறு .....


SAMANIYAN
ஜன 23, 2025 10:16

உண்மை ..


Oru Indiyan
ஜன 22, 2025 23:29

ராணியின் வீட்டில் உள்ள பூஜை அறையில் மாட்டுக்கறி சமைத்து பூஜை பண்ண தைரியம் இருக்கா கனிக்கு


Kumar Kumzi
ஜன 22, 2025 22:59

காட்டுமிராண்டி மூர்க்க ஓட்டு பிச்சைக்காரன் ஓங்கோல் விடியல் கண்டுகொள்ள மாட்டான்


AMLA ASOKAN
ஜன 22, 2025 22:54

மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் , 400 ஆண்டு கால மசூதியில் காலம் காலமாக நடைபெற்று வந்த நிகழ்வு என்ற அடிப்படையில் தான் , சமைத்த அசைவ உணவை எடுத்து செல்ல தடை இல்லை என்று கூறியுள்ளனர் . இதை தான் அந்த MP யும் கூறியுள்ளார் . இது நாள் வரையில் 1000 ஆண்டு கால கோவிலிலும் அங்கு செல்லும் பக்தர்கள் அவரவர் விரும்பிய உணவை தான் சாப்பிட்டும் வந்துள்ளனர் . மசூதிக்கு சென்று ஆடு, கோழியை பலியிடக்கூடாது என்றும் போலீசார் தடுத்து விட்டனர் . எதற்கு இந்த இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு பாதகமான புதிய சர்ச்சை ?


vivek
ஜன 23, 2025 08:07

ஏல கூறு கெட்ட AmLA, பிரியாணி துன்றதுகு கோயில் இடம் தான் கிடைத்ததா....அறிவு கெட்ட கொதடிமையே


Ganapathy
ஜன 22, 2025 22:53

திமுக ஒரு பிணம் தின்னும் கட்சி என்பது பலகாலமாக பலருக்கும் தெரிந்தவிஷயம். மக்களின் கோபத்தை மடைமாற்ற வெளியிடங்களிலிருந்து தனது எம்பிகளை திருப்பரங்குன்றம் வரவழைத்து இஸ்லாமிய தீவிரவாத கட்சியான எஸ்டிபிஐ தூண்டிவிட்டு முஸ்லிம் ஜமாத்துகளை தூண்டிவிட்டு நாலு ஹிந்து பிணம் விழாத இந்த விஷயத்தில் என காத்துக் கிடக்கும் திமுக என்ற அய்யோக்கிய ரவுடி ஸனாதன எதிரி கூட்டமும் அதன் கிறிஸ்தவ பிச்சை தொளபதி முதல்வனும். உள்ளூர் முஸ்லிம் இதுவரை எந்த பிரச்சனையும் உள்ளூர் ஹிந்துகளுடன் செய்யவில்லை என்பது இதில் குறிப்பிடத்தக்க ஒன்று. எல்லா விஷயத்துலயும் தோல்வியுற்று அவமானப்பட்டு தன்மானமிழந்து வெட்கங்கெட்டு மானங்கெட்டு ஆட்சில இருக்கும் திருட்டு களவாணிகழக கட்சியின் கடைசீ ஆயூதம், மதுரையில் முஸ்லீம்களை வச்சு ஹிந்துக்களை கொலை செய்ய வச்சு ஸனாதனத்தின் பிறப்பிடமான கோவில்களை அழித்து அதன் சொத்துக்களை கொள்ளையடிச்சுகிட்டு ஊரை விட்டு வெளிநாட்டுக்கு ஓட வேண்டும் என்பதே


Siva Balan
ஜன 22, 2025 22:10

தமிழ்நாடு முஸ்லிம்களுக்கு சொந்தமானது. தமிழர்கள் இங்கிருந்து வெளியேறவேண்டும்.அல்லது திமுகவினரால் வெளியேற்றப்படுவார்கள்.


புதிய வீடியோ