உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்கள் மகன் கற்கலாம், ஏழை எளிய பிள்ளைகள் கற்கக்கூடாதா; அமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

உங்கள் மகன் கற்கலாம், ஏழை எளிய பிள்ளைகள் கற்கக்கூடாதா; அமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; உங்கள் மகன் மும்மொழி கற்கலாம், ஏழை எளியோரின் பிள்ளைகள், மும்மொழிகள் கற்கக் கூடாது என்று தடுக்கிறீர்களே? என்ன நியாயம் இது? என்று அமைச்சர் மகேஷ்க்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் தமது எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில், 'அறிவியல் மொழிதான் எங்களின் மூன்றாவது மொழி, தமிழகத்தின் கல்வி முறைதான், இந்திய கல்வி முறைக்கே தாயாக உள்ளது' என்று குறிப்பிட்டு இருந்தார்.அவரை இந்த பதிவை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து, அதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது: 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் (ICT) பாடத்தினைக் கற்றுக் கொடுக்க, மத்திய அரசு வழங்கிய நிதியை ஏப்பம் விட்டுவிட்டு, வாட்சப்பில் வருவதை எல்லாம் பேச வெட்கமாக இல்லையா உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரே? அண்டை மாநிலமான கேரளாவில், ICT பாடத்திட்டம் தமிழ் உட்பட மும்மொழிகளில் கற்பிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் வெறும் வாய்ப் பேச்சு மட்டும் தான், செயலில் ஒன்றும் இல்லை. உங்க மகன் மட்டும் மும்மொழிகள் கற்கலாம், ஆனால் ஏழை எளியோரின் பிள்ளைகள், மும்மொழிகள் கற்கக் கூடாது என்று தடுக்கிறீர்களே? என்ன நியாயம் இது?இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

ஜெய்ஹிந்த்புரம்
மார் 17, 2025 23:33

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக கற்று கொடுக்க ஒன்றிய அரசுக்கு அரசாணை போட சொல்லுங்க பார்க்கலாம்.. நீங்க, ஒங்க அமித்சா தானே சொல்றீங்க, தாய் மொழியை கட்டாயமாக்கணும்ன்னு. ஆனா கேந்திரிய பள்ளிகளில் அது நடக்கிறதா?


பல்லவி
மார் 17, 2025 19:26

அதி புத்தி சாலி வடக்கன்ஸ் மூன்று அல்ல முப்பது கூட கற்கலாம் ஆனால் நம்ப ஆளுங்க அம்புட்டு பேரும் தமிழ் தானே தத்து குட்டிங்க பாவம்


பல்லவி
மார் 17, 2025 18:56

வடக்கன்ஸை தமிழ் கத்துக்க சொல்லுங்க அப்புறம் தமிழ் நாட்டில் அரசியல் பேசலாம்


நிக்கோல்தாம்சன்
மார் 19, 2025 21:10

தமிழர்களின் மக்களே பத்தாம் வகுப்பில் போனவருடம் இன்றைய துணை முதல்வரின் மார்க்கை வாங்கினார்கள் மறந்து விட்டதா


பேசும் தமிழன்
மார் 17, 2025 08:20

வரும் தேர்தலில் இந்த பிரச்சினை பெரும் பங்கு வகிக்கும்.. யாரெல்லாம் மூன்று மொழியில் படிக்க கூடாது என்று கூறுகிறீர்களோ.. அவர்களின் குழந்தைகள் இரு மொழியில் அரசு பள்ளியில் படித்து வந்தால்.. அவர்கள் பதில் சொல்லி இருப்பார்கள்.. ஆனால் அவர்களின் வீட்டு பிள்ளைகள்.. தனியார் பள்ளிகளில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மொழியில் படிக்கிறார்கள் என்பதே உண்மை.


pmsamy
மார் 17, 2025 07:04

ஹிந்தி தெரிஞ்சா ஏழைகளுக்கு கத்துக்கொடு


பேசும் தமிழன்
மார் 17, 2025 08:22

உன் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் என்ற உண்மையை முதலில் சொல்லு.. அரசு பள்ளியில் படிக்கும் ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவர்கள் மட்டும் இலவசமாக கூட படிக்க கூடாது.... அப்படி தானே ???


kamal 00
மார் 17, 2025 13:38

ஏதாவது ஒரு மொழி... அண்ணாமலை சொன்னது சரி


vivek
மார் 17, 2025 17:43

அப்போ தமிழை கட்டுமரம் கத்துகுடுகுமா ?


RAMKUMAR
மார் 17, 2025 06:06

சார், நாங்கள் தமிழர்கள், தற்குறிகள், எங்களுக்கு படிப்பு திமுக சொல்லுவது மட்டுமே. என் குழந்தை என்ன படிக்க வேண்டும் என திமுக முடிவு செய்கிறது .....


Mani . V
மார் 17, 2025 04:40

கொள்ளையர்கள் மகன் கற்கலாம், ஏழை எளிய பிள்ளைகள் கற்கக்கூடாதா?


ஜெய்ஹிந்த்புரம்
மார் 17, 2025 04:00

மும்மொழிக் கல்வியின் தேவை பற்றிய நீயா நானா நிகழ்ச்சியை தடை செய்தது ஏன்? பயமா அண்ணாமலே?


பேசும் தமிழன்
மார் 17, 2025 08:24

தடை செய்தது நம்ம விடியாத அரசு தான்.. விவாதத்தில் தங்கள் குட்டு வெளிப்பட்டு விடும்.. தங்கள் வீட்டு பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள்... எத்தனை மொழியில் படிக்கிறார்கள் என்ற விவரம் வெளியிட வேண்டிய நிர்பந்தம் வந்து விடும் என்பதால் தான் இந்த தடை என்று தமிழக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.


kamal 00
மார் 17, 2025 13:43

ஆளுங்கட்சி அழுத காரணத்தால்


Ram
மார் 17, 2025 03:58

மும்மொழி கொள்கையை அமல்செய்வதற்கு இவ்வளவு போராடும் அண்ணாமலை, நீட் தேர்வு எழுத்துவபவர்கள் தமிழ் மொழியை கற்றிருந்தால் அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மெடிக்கல் காலெஜ்ல் சீட்டு கொடுக்கப்படும் என்று சட்டதிருத்தத்தை பிஜேபி அமல்படுத்த வேண்டும் என்று போராடுவாரா அப்படி போராடி பெற்று கொடுத்தால் அவர்தான் அடுத்த தமிழக முதல்வர்


kamal 00
மார் 17, 2025 13:44

அரை குறையா படிச்சு கத்தரிக்கோலை வயிற்றில் வச்சு தைத்து விடுவானுக கொத்தடிமைகள்


Bala
மார் 17, 2025 01:02

2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பின் தமிழகத்தில் மாவட்டத்திற்கு இரண்டு காமராஜர் நவோதய பள்ளிகள் அமைக்கப்படும். ஏழை மாணவர்களுக்கு அனைத்தும் இலவசம். அவர்கள் விரும்பிய மொழிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அத்தகைய பள்ளிகள் CBSE தரத்திற்கு உருவாக்கப்படும். பாழடைந்த அரசு பள்ளிகளில் இனிமேல் ஏழை மாணவர்கள் படிக்க வேண்டியதில்லை. ஒரு நேர்மையான தமிழக மக்களுக்கான ஆட்சியாக அது இருக்கும். திமுக போன்ற கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் இனி வேலையில்லை. தமிழக அரசியல்வாதிகள் முறைகேடாக சேர்த்த சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டு ஏழை மக்களின் நலத்திட்டத்திற்கு உபயோகப்படுத்தப்படும். 2026 இல் தமிழக மக்கள் பொற்காலத்தின் ஆரம்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை