உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில சுயாட்சியை உறுதி செய்ய விரைவில் அறிவிப்பு; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்

மாநில சுயாட்சியை உறுதி செய்ய விரைவில் அறிவிப்பு; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்

சென்னை: 'மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும். தமிழினத்தை உயர்த்த முடியும் என்று உறுதிபட தெரிவித்து அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்' என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fis1qgv9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மும்மொழி கொள்கை தொடர்பாக, சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இருமொழி கொள்கை குறித்து என்ன உணர்வோடு தமிழகம் இருக்கிறது என்பதை பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க., உட்பட அனைத்துக் கட்சிகளும் பா.ஜ.,வை தவிர்த்து, தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி காட்டி இருக்கிறார்கள்.

இ.பி.எஸ்., டில்லி பயணம்

நம்முடைய எதிர்க்கட்சியின் துணை தலைவர் அதிகாரிகள் மூலம் இருமொழி கொள்கை, மும்மொழி கொள்கை குறித்து மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்ததாக கூறியுள்ளார். எந்த காரணத்தை கொண்டும் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளோம். இன்று காலையில் கூட, நம்முடைய எதிர்க்கட்சி தலைவர் டில்லிக்கு சென்று இருப்பதாக செய்திகள் வந்து இருக்கிறது.

இதை சொல்லுங்க!

டில்லிக்கு சென்று யாரை சந்திக்க போகிறார் என்ற அந்த செய்தியும் வந்து இருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில், இது குறித்து (மும்மொழி கொள்கை) அவர் வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை அவை மூலம் எடுத்து வைக்க கடமைப்பட்டு இருக்கிறேன். தமிழக மக்களின் உயர்நிலை கொள்கையான, இருமொழி கொள்கை குறித்து உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளுடன் தமிழக அரசும் உடன்படுகிறது என்பதை மீண்டும் உறுதி செய்கிறேன்.

பணமே வேண்டாம்

தமிழும், ஆங்கிலமும் தான் தமிழகத்தின் இருமொழி கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. இருமொழி கொள்கை மட்டுமல்ல, நமது வழி கொள்கையும் இதுதான். ஏன் விழிக்கொள்கையும் இது தான். என் உயிர் கொள்கையில் விட்டு தரமாட்டோம். விட்டு விலகமாட்டோம். ஹிந்தியை ஏற்கவிட்டால் பணம் தரமாட்டோம் என்றாலும், பணமே வேண்டாம்; தாய்மொழி கொள்கையை காப்போம். ரூ.2ஆயிரம் கோடி என்ன? ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டேன்.

இனப்பிரச்னை

மீண்டும் சொல்கிறேன். இது பண பிரச்னை அல்ல. நமது இனப்பிரச்னை. நாம் தமிழை, தமிழகத்தை, தமிழக இளைய சமுதாயத்தை காக்க கூடிய பிரச்னை. அவர்கள் நிதி தரவில்லை என்பதற்காக, இன மானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகள் அல்ல நாங்கள். தடைக்கற்கள் உண்டு என்றால் அதை உடைத்தெறியும் தடந்தோள் உண்டு என்று சொல்லும் தி.மு.க., ஆட்சி இது.

ஹிந்தி திணிப்பு

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு திட்டத்தை இந்த மன்றம் ஏற்க மறுக்கிறது. மாணவர்கள் எண்ணத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி கொள்கை நடைமுறையில் இருக்கும். தாய்நிலத்திற்கு தமிழும், உலக தொடர்புக்கு ஆங்கிலமும் என அண்ணாதுரை வடித்த சட்டம் இது.

ஆதிக்க மொழி

இந்த இருமொழி கொள்கை தான் அரை நூற்றாண்டாக தமிழகத்தை வளர்த்து வந்துள்ளது. உலக அளவில் பரவி தமிழக மக்கள் வாழவும், உன்னதமான உயரத்தை அடையவும் வழி வகுத்தது இந்த இருமொழி கொள்கை தான். எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம். இந்த இருமொழிக் கொள்கையே போதும் என்று சொல்பவர்கள் நாம். யார் எந்த மொழியை கற்பதற்கும் தடையாக நிற்பது இல்லை. தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழிகளை ஏற்க மாட்டோம்.

தின்றுவிடும்

மொழி கொள்கையில் தமிழகம் வகுத்துள்ள பாதையே சரி என்பதில், அண்டை மாநிலங்கள் தொடங்கி, இந்தியாவில் பல மாநிலங்களும் உணர்ந்து வருகிறது. இன்னொரு மொழியை அனுமதித்தால், அது நமது மொழியை மென்று தின்றுவிடும் என்பதை வரலாற்று பூர்வமாக உணர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் தான் இருமொழி கொள்கையை இறுக்கமாக பிடிக்கிறோம். ஹிந்தி மொழி திணிப்பு என்பது ஒரு மொழி திணிப்பு மட்டுமல்ல, பண்பாட்டு அழிப்பாக அமையும் என்பதால் தான், இதில் (இருமொழி கொள்கை) உறுதியாக இருக்கிறோம். மாநிலங்களை தனது கொத்தடிமைகளாக நினைப்பதால் தான், இது போன்ற மொழி திணிப்பும், நிதி அநீதியும் செய்கிறார்கள்.

சஸ்பென்ஸ்

எனவே இந்தியாவின் கூட்டாட்சி தன்மையை காக்கவும், மாநில சுயாட்சியை வென்று எடுக்கவும் சரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும். தமிழினத்தை உயர்த்த முடியும் என்று உறுதிபட தெரிவித்து அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 85 )

Sampath Kumar
மார் 30, 2025 10:59

yes it is the right timeto rise our voice against this union government and it autocracy .Indian public are losing many freedom intha name of religion, language, couture and civilization . The BJP government is engulfing all our birth rights and we have only people who can echo our voice and foght for our rights. Those who support bjp are anti tamilian who wants power only They do not know the value of our language, our culture, our civilization. They join in hands with bjp party to demolish all our birth rights . We have stand with the government to fight against this great menace


Bhakt
மார் 30, 2025 18:52

funny fella


நிக்கோல்தாம்சன்
மார் 28, 2025 05:48

இந்தி திணிப்பு இந்தி திணிப்பு என்று கூறி கடந்த வருடம் மாத்திரம் பங்களாதேசிகளை அதுவும் 130000 பங்களாதேசிகளை உள்ளே வரவழைத்து அரவணைத்து கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்குள் , அந்த பங்களாதேசிகள் இந்தி மாத்திரம் தான் பேசுவார்கள் , அவர்களிடம் பேசி வேலைவாங்குவதற்கு இந்தி தெரிந்தவர்கள் தான் வேண்டுமே , அப்போ தமிழகத்தில் இந்தி தெரிந்தவர்கள் யார் என்று முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிக்கை வெளியிடுவாரா ?


Matt P
மார் 26, 2025 21:33

படிக்கும் வயதில் பிள்ளைகளை படிக்க விடுங்க. தமிழ் தவிர எந்த மொழியும் எங்களுக்கு தேவை இல்லை என்று சொல்வது பிற்போக்குத்தனமானது. உலகம் வேகமாக முன்னேற்ற பாதையில் உழன்று கொண்டிருக்க்கிறது. . நமது ஜனத்தொகை காரணமாகவும் பொருளாதார சூழல் காரணமாகவும் எந்த நாட்டிலும் இந்தியர்களை பார்க்கலாம். இங்கிலீஷு பேசும் நாடுகள் மட்டும் அல்ல வேறு நாடுகளும் முன்னேறி கொண்டிருக்கிறது.வேறு மாநிலங்களும் தான். அங்கு போய் கற்கலாம் என்பதை விட கற்று விட்டு போனால் வசதியாக இருக்க்கும் என்பதையும் நினைக்கவும். .அடிப்படையை தான் கற்க போகிறார்கள். அது நாம் படிக்கும் இங்கிலீஷையோ தாய் மொழி தமிழையே பாதித்து விடாது. தமிழ்நாட்டுக்கு மட்டும் மாநில சுயாட்சி தேவை. தமிழ்நாட்டுக்கு மட்டும் நீட் தேவை இல்லை. தமிழ்நாட்டுக்கு மட்டும் இன்னொரு மொழி தேவை இல்லை. i..மக்கள் எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரியவில்லை.


Anantharaman
மார் 26, 2025 10:20

இதற்குப் பிறகும் இந்த அரசை நீடிக்க விட்டால் தமிழகமே நாசமாகி விடும். பிரிவினை உட்கலவரத்தை கட்டாயம் தோன்றுகிறது. அறிவிழந்த மத்திய அரசு 356 சட்டத்தை இப்பொழுது நடைமுறைப் படுத்தவில்லை எனில் வெட்கக் கேடு. தமிழகத்தில் பாஜக வெற்றி பெற மக்களே எதிர்ப்பாளர்கள். கேவலப் பிழைப்பு பாஜக நடத்துவது.


Ethiraj
மார் 26, 2025 09:12

No one wants to destroy any of the 22 Indian languages. Citizens from other states living in TN are given an opportunity to learn their mother tongue in addition to tamil and English Politicians and political parties dont want it


Dass
மார் 26, 2025 02:29

ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகளை போலவே நம் தாய் மொழி தமிழை தான் படிக்க வேண்டும்


Ramanujadasan
மார் 26, 2025 09:25

முதல்ல உங்க பேரை தமிழ்ல மாத்துங்க .


Matt P
மார் 26, 2025 02:05

முதல்வர் சஸ்பென்ஸ் இப்போ . பின்னாடி முதல்வர் ஆட்சி சஸ்பெண்ட். ஆகலாம். நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துவதற்காக.


G.Kirubakaran
மார் 25, 2025 21:28

திமுக வை பொறுத்த வரையில், சுயாட்சி என்பது ஊழல் செய்வதை யாரும் கேட்க கூடாது . அவ்வளவு தான்


Nagarajan S
மார் 25, 2025 20:31

இரு மொழி கல்விக்கொள்கை,இந்தி திணிப்பு, தொகுதி சீரமைப்பு ஆகிய நாடகங்கள் போட்டு முடிச்சாச்சு. அடுத்த நாடகம் "மாநில சுயாட்சி" என்று தலைப்பு வைச்சாச்சு. இது அடுத்த 2026 தேர்தல் வரை ஓடுமா?


A1Suresh
மார் 25, 2025 20:00

ஷேக் அப்துல்லா காஷ்மீரை ஆண்டது போல மாநில சுயாட்சி கேட்கிறார். அதாவது என்ன வேண்டுமாயினும் ஊழல் செய்யலாம். என்னவாயினும் சட்டம் இயற்றலாம். சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு ஏஜென்சிக்கள் தலையிடக்கூடாது. வெறுமனே தகவல் தொடர்புத் துறை, ராணுவம் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டுமாம். மற்ற அனைத்து உரிமை-அதிகாரங்கள் மாநிலத்திற்கு தந்துவிட வேண்டுமாம். இவர்கள் லட்சம்-கோடி ஊழல் செய்துவிட்டு ரூ1000 மகளில் உரிமைத்தொகை, ஓட்டிற்கு துட்டு, நீதிபதிகளுக்கு லஞ்சம் என ஆட்டம் போடுவார்களாம்.


புதிய வீடியோ