உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்

நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் நிலத்தடி நீர்த்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.மதுரை சின்ன சொக்கிகுளம் எச்.ஏ.கே., ரோட்டில் இந்த அலுவலகம் உள்ளது. உதவி இயக்குநராக கமலக்கண்ணன் உள்ளார். இவர், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு அதிகாரியாகவும், தென் மாவட்டங்களுக்கான கூடுதல் பொறுப்பும் வகித்து வருகிறார்.இரண்டு நாட்களாக திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தனியார் மினரல் வாட்டர் தயாரிப்பு கம்பெனி உரிமையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். அதில் பல கம்பெனிகள் அவருக்கு லஞ்சம் வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், மதுரை அலுவலகத்தில் நேற்று அதுபோன்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது.இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பிரபு, சூர்யகலா, பாரதிபிரியா ஆகியோர் அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தினர். கமலக்கண்ணனிடம் 4 கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 2 கவர்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் பெயருடன் பணம் இருந்தது. அவரது சட்டை பையிலும் சோதனையிட்டு கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கமலக்கண்ணனிடம் தொடர் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

jss
மே 16, 2025 14:30

லஞ்சம் இல்லாத துறை ஒன்றை தமிழக ஆட்சியில் காட்டி விடுங்கள். உங்களுக்கு நோபல் பரிசு காத்திருக்கிறது. காற்று இல்லாத இடம் கூட இருக்கிறது ஆனால் லஞ்சம் இல்லாத துறை இல்லவே இல்லை


V Venkatachalam
மே 16, 2025 12:52

இப்ப எல்லாம் இந்த மாதிரி நியூஸ் தினமலரில் பாதி இடத்தை அடைத்துக் கொண்டு விடுகிறது. போக போக முழு இடத்தையும் இதற்காக விட வேண்டிய நிலமை வந்துடும் போல இருக்கே. ‌


VASUDEVAN
மே 16, 2025 10:52

இவர்களை எல்லாம் தெருவில் பிட்சை எடுக்க விட்டால் என்ன


S.kausalya
மே 16, 2025 10:39

என்னங்க இது அநியாயம். இந்த பதவிக்கு வர எவ்வளவு லஞ்சம் கொடுத்து இருப்பார். கடன் வாங்கி தான் லஞ்சம் கொடுத்து இருப்பார். அப்ப கடனை அடைக்கத்தான் லஞ்சம்.அரசு பணத்தில் மக்களுக்கு இலவசம் என்ற பேரில் லஞ்சம் கொடுக்கும் அரசியல்வாதிகளை கொஞ்சம் பாருங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை