உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி: சோதனைச்சாவடியில் ரூ.1.47 லட்சம் லஞ்சம் பறிமுதல்

கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி: சோதனைச்சாவடியில் ரூ.1.47 லட்சம் லஞ்சம் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.47 லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.கோவை மாவட்டம், சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடியில் (வெளிசெல்கை) தமிழக ஊழல் (ம) லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஷீலா தலைமையில் 5 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சதீஸ் ஜெயச்சந்திரன்(48), அலுவலக உதவியாளர் லோகநாதன்(39) ஆகியோரிடம் இருந்து, கணக்கில் வராத லஞ்சம் ரூ.1,47,560 பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.இது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

rama adhavan
மே 28, 2025 21:27

சோதனை சாவடிகளை ஒழிக்க வேண்டும். லஞ்சமாவது குறையும். இவர்கள் பணம் மட்டும் கறக்கிறார்கள். எதையும் பிடிப்பதில்லை. மருத்துவ கழிவு நம் மாநிலத்திற்குள் சோதனை சாவடி இருக்கையில் எப்படி வந்தன என்று அமைச்சர் சொல்வாரா?


M S RAGHUNATHAN
மே 28, 2025 20:52

DVAC அமைச்சர் சிவசங்கரன் அவர்களிடம் அனுமதி பெற்று சோதனை நடத்தினார்களா ? எப்படி அரசின் சோதனைச் சாவடியில் முன் அனுமதி இல்லாமல் சோதனை நடத்தியது DVAC


சிட்டுக்குருவி
மே 28, 2025 19:08

தினமும் லஞ்சம் பறிமுதல் நடந்துகொண்டு தான் இருக்கின்றது .குறைந்தபாடில்லை .அரசு ஏன் கடமையான சட்டங்களை இயற்றக்கூடாது .கையும் களவுமாக பிடிபட்டால் உடனடி வேலைநீக்கம் என்று இருந்தால் ஒருவேளை குறையும் வாய்ப்புள்ளது .


Padmasridharan
மே 28, 2025 18:49

இதே மாதிரி காவல்துறைக்குள்ளவர்களை பிடித்தால் கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யலாம் சாமியோவ்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை