உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரின் சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்களா? அண்ணாமலை காட்டம்

முதல்வரின் சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்களா? அண்ணாமலை காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வரின் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் பலிகடா தமிழக மக்களா? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாததால் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், மாவட்ட கலெக்டரையே மிரட்டும் தி.மு.க., நிர்வாகி, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு அதிகாரிகளையே படுகொலை செய்யும் மணல் கடத்தல்காரர்கள் என ஒரு புறம் ஒட்டு மொத்த தமிழகமே இருண்டு கிடக்க, கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=josnej9z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்களா முதல்வரே? மறைந்த உங்கள் தந்தையார் நேரில் வந்தால், இப்படி ஒருவரை எங்கள் தலையில் கட்டிவிட்டுச் சென்று விட்டீர்களே என்று கதறக் காத்திருக்கும் தமிழக மக்களைக் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

அப்பாவி
பிப் 28, 2025 18:16

பா.ஜ பிலிம் காட்டினா அது தேஷ்பக்தி ஹை.


Gnaneswari
பிப் 28, 2025 16:59

நம்ம பிரதமர் டெல்லி வீட்ல மயிலுக்கு இரை போட்டதும்..கன்றுக்குட்டிக்கு இலை தழை கொடுத்ததும் சினிமா கனவுதானா? அதுக்கு இந்திய மக்கள் பலிகடாவா?


Shivam
பிப் 28, 2025 16:01

ஏப்பா புளிமூட்டை ரங்கா, அப்புறம் ஏப்பா சூப்பரமணி வர வேண்டியது வந்திருச்சு போல போதும் அளவா ஊளையிடுங்கடா


Guna Gkrv
பிப் 28, 2025 15:49

அண்ணாமலை நீங்க ஒரு ஆள் மட்டும் தான் கத்துகிறீர்கள் எதாவது விஷயம் இருக்கா ? அதை மக்கள் பிரச்சனைக்கு வாருங்கள் .


krishna
பிப் 28, 2025 17:08

GUNA SHIVAM 20 ROOVAA OOPIS MURASOLI THUDAITHA MOOLAYODU THIRIUM UNGALUKKU ANNAMALAI SOLVADHU PURIYAADHU.THURU PIDITHA TASMAC KANJA MANAL KANIMAVALA KOLLAI DRAVIDA MODEL THUNDU SEATTU SENGAL THIRUDAN SOLVADHUDHAAN PURIUM.


Venkataraman
பிப் 28, 2025 15:40

திமுக ஆட்சி என்றாலே நாடகம் போடுவது, வேஷம் போடுவது, ஊரை ஏமாற்றுவது என்றுதான் பொருள். கொலை, கொள்ளை, ஊழல், பித்தலாட்டம் எல்லாம் சரமாரியாக நடந்தேறும். இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டுமானால் இந்த உரூப்படாத திமுக அரசை கலைத்து விட்டு அந்த ஊழல் கட்சி தலைவர்கள் அத்தனை பேரையும் சிறையில் தள்ள வேண்டும். அப்போதுதான் தமிழகம் உருப்படும்.


Azar Mufeen
பிப் 28, 2025 15:36

தி மு க, பாஜக ரெண்டு களவாணி கட்சிக்காரர்களும் போட்டோ ஷூட் எடுத்தே பொழப்ப நடத்திருங்க


rama adhavan
பிப் 28, 2025 15:00

கனவு சீன் என்றாலே சினிமாவில் டூயட் சீன் உண்டு, காதலி உண்டு. அப்போ இங்கு யார்?


krishna
பிப் 28, 2025 14:52

SIR ENGA THURU PIDITHU IRUMBU KARAM AVARGALUKKU THERINDHADHU VETHU URUTTU THARPERUMAI PHOTO SHOOT THUNDU SEATTU.THAT IS ALL.INDHA KEVALATHUKKUM VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA 200 ROO VAA OOPIS PAANCHU MUTTU K9DUPPADHU SUPER COMEDY.


மலை நேசன்
பிப் 28, 2025 14:49

தமிழகத்தை காக்க வந்த கடவுளே வாழ்க. கொள்ளைக்கு வெள்ளை அடிக்கும் வேங்கை தலைவர் அண்ணாமலை. தேசியம் காக்க வந்த தெய்வம் அண்ணாமலை. சிங்கம் அண்ணாமலை சீறுவார்‌. பதில் இல்லை அதனால் வசை பாடுகின்றனர். திராவிட வாதிகளுக்கு கொள்ளை நிக்க போற கவலையில் கொட்டி தீர்க்கின்றனர். இதை எல்லாம் தலைவர் இடது கையால் டீல் செய்வார்.


Jay
பிப் 28, 2025 14:46

மாநிலக் கட்சிகள் இவ்வாறு ஷூட்டிங் நடத்தி தங்கள் பெயரை பிரபலப்படுத்த முயற்சிப்பார்கள். முக்கியமாக ஒரு குடும்பம் கட்டுப்படுத்தும் கட்சிகளில் இவ்வாறு தங்கள் பெயரை தங்கள் மகன் பேரன் என்று ஷூட்டிங் நடத்திக் கொண்டே தான் இருப்பார்கள். தேசிய கட்சியாக இருக்கும் காங்கிரசிற்கும் இது பொருந்தும்.


புதிய வீடியோ