உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் கணக்கெடுப்பு படிவம்: ஆன்லைனில் நிரப்ப ஏற்பாடு

வாக்காளர் கணக்கெடுப்பு படிவம்: ஆன்லைனில் நிரப்ப ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடர்பான கணக்கெடுப்பு படிவத்தை, 'ஆன்லைன்' வழியே நிரப்ப, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர்கள் வசதிக்காக, தேர்தல் கமிஷன் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.inவழியே, கணக்கெடுப்பு படிவத்தை நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி, இணையதளத்தில் உள்நுழைய வேண்டும். இணையதள பக்கத்தில் இருக்கும் ''fill enumeration form'' என்ற இணைப்பை தேர்வு செய்ய வேண்டும். இந்த வசதியை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே, இவ்வசதியை பயன்படுத்த இயலும். சரியான விபரங்களை சமர்பித்த பின், இணைய பக்கமானது ' e-sign' என்ற பக்கத்திற்கு மாறும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட, மொபைல் எண்ணுக்கு ஒருமுறை கடவு சொல் அனுப்பப்படும். அந்த கடவு சொல்லை உள்ளிட்டவுடன் படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும். இவ்வறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

K S Sankaranarayanan
நவ 10, 2025 21:39

ஆதார் அட்டையில் இனிஷியலுடன் பெயர் உள்ளது. வோட்டர் அட்டையில் பெயர் மட்டும் உள்ளது. முயற்சி பலனளிக்கவில்லை. மற்ற அனைத்து விபரங்களும் சரியாக இருந்தும் முயற்சி வீண்


chandramouli k
நவ 10, 2025 13:37

i tried in the web it is not available in the web. it says page not found.


Mr Krish Tamilnadu
நவ 10, 2025 09:59

பெரும்பாலும் அரசு துறையால் மக்களுக்கு அளிக்கப்படும் ஆவணங்கள் அனைத்திலும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறது. ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை என ஒரு முறை மட்டுமே அளிக்கப்பட்ட பழைய ஆவணங்களில் இருக்க அதிக வாய்ப்பு உண்டு. அந்த காலத்தில் பணியில் இருந்தவர்கள், இயந்திரங்களின் செயற்பாடுகளினால் பெயரின் ஆங்கில மற்றும் தமிழ் ஸ்பெல்லிங் மாறி இருக்கும். இன்ஜியல் முன்புறம், பின்புறம் அல்லது இல்லாமல் இருக்கும். பழைய ரேஷன் கார்டுகளில் கதவு எண் தவறுதலாக இருக்கும்.ஆதாரில் கூட ஆரம்பத்தில் இன்ஜியல் என்பது முழுமையான அவர்களுடைய தந்தை அல்லது கணவர் பெயராக இடம் பெற்றது. இவ்வளவு குழப்பங்களையும், அரசு துறையின் அலட்சிய பிழைகளையும் வைத்து கொண்டு, இன்று மக்களை அலைக்கழிப்பு அல்லது பயமுறுத்துவது என்ன நியாயம்?. இதற்கு ஒரே தீர்வு ஒவ்வொரு ஆவணம் குறிப்பிட்ட கால இடைவெளியில் சரியாக புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும், மக்களிடம் சேவை கட்டணம் வசூலித்து கொண்டே.


Balaji
நவ 10, 2025 12:06

பட்டாவில் பல கோப்புகள். சர்வே நம்பர் வேண்டுமென்றே தவறாக பதிவேற்றம் செய்யப்படும். இதை சரி செய்ய பணம்....


Jayaraman Sekar
நவ 10, 2025 09:16

SIR - நல்ல விஷயமா??? அல்லவா??? உண்மையிலேயே நல்ல விஷயம்தான்... ஆனால் சில பிரச்சனைகள் உண்மையிலேயே உள்ளன... முதல் பிரச்சனை... ஆன் லைனில் சமர்ப்பிக்கலாம்.. ஆனால்.. அதற்கு தேவை 2002 இல் உங்களின் வாக்காளர் எண் தெரிய வேண்டும்... அப்போது 03 தமிழ்நாடு.. இப்போது 22 தமிழ் நாடு என மாறி உள்ளது... அப்பொதைய வாக்காளர் எண் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.. தெரிந்தாலும்... அவர்களின் வாக்காளர் எம் எல் யே தொகுதி எண் கண்டுபிடிப்பது கஷ்டம்.. என்னைப் பொறுத்த வரை எம் எல் யே தொகுதி ஸ்ரீபெரும்புதூர் என்றும் பின்னர் ஆலந்தூர் என்றும் இப்போது பல்லாவரம் என்றும் மாறி இருப்பதால் கண்டுபிடிப்பது கடினம்... அப்படியே கண்டுபிடித்து விட்டாலும் வாக்குச் சாவடி எண் கண்டுபிடிப்பது கஷ்டம்.. ஏனெனில் ஒரு வாக்கு மையத்தில் பல பூத்துகள் இருக்கலாம்.. எந்த பூத்தை தங்கள் பூத் என்று கண்டுபிடிப்பது மிகக் கடினம்.. இதெல்லாம் கண்டு பிடித்தாலும்.... வாக்காளர் வரிசை எண் சான்சே இல்லை... எனக்கு அதிர்ஷ்டம்.. எப்படியோ எம் எல் யே தொகுதி கொடுத்து வாக்குச் சாவடி எண் கொடுத்து இப்போதைய வரிசை எண்ணை தவறானதே ஆனாலும் கொடுத்து பார்க்கும் போது அது எங்கள் தெருவில் உள்ள தெரிந்த ஒருவரின் பெயர் ஆக இருந்ததால் ஒரு குன்ஸாக கழித்து கழித்து .... என் எண்ணைக் கண்டுபிடித்து .... ஆன்லைனில் பதிவு செய்து விட்டேன்... ஆனாலும் இன்னொரு கஷ்டம்.. உங்கள் மொபைல் எண் பதிவு செய்து இருக்கிறீர்களா???? இல்லையேல் ஆன்லைனில் பதிவு முடியாது... அதனால் ஃபார்ம் 8 பயன்படுத்தி மொபைல் எண்ணை சேர்க்க வேண்டும்... வெயிட் வெயிட்..... உங்கள் வாக்காளர் அடையாள அட்டை பெயரும் உங்கள் ஆதார் அட்டை பெயரும் மிகச் சரியாகப் பொருந்த வேண்டும்... இல்லையேல் ஆன்லைனில் பதிவு முடியாது... உங்கள் வாக்காளர் அடையாள அட்டை பெயரும் உங்கள் ஆதார் அட்டை பெயரும் மிகச் சரியாகப் பொருந்தவில்லை என்று ரிஜெக்ட் செய்யப் பட்டு விடும்... அதனால் ஃபார்ம் 8 பயன்படுத்தும் போது பெயரையும் மாற்ற பயன்படுத்தலாம்.... இல்லையேல்.... வரும் அலுவலர்களிடம் 2002 வாக்காளர் விவரங்கள் கேட்டு பூர்த்தி செய்யலாம்.. ஆனால் அவர்களிடமும் இந்த விவரங்கள் இருக்கா???? சந்தேகமே... நல்லதிர்ஷ்டம் உங்களுக்கு உண்டாக...


சந்திரசேகர்
நவ 10, 2025 07:47

உண்மையை சொல்வதானால் யாராவது இறந்தாலோ அல்லது வீடு மாறி சென்றாலோ அல்லது வேறு நாட்டில் குடியுரிமை பெற்றாலோ யாரும் சிரத்தை எடுத்து இந்த ஓட்டு சீட்டு அடையாள அட்டையை மாற்றம் செய்வது இல்லை. ஏனென்றால் அது அவர்களுக்கு அவசியமானதாக இல்லை. ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் பரவாயில்லை என்கிற நிலைதான் காரணம். எந்த அரசாங்க வேலை காரணமாக அலுவலகம் சென்றாலும் எளிதில் எதுவும் செய்ய முடியாது. அலைகழிப்பதே காரணம். ரேஷன் கார்டில் கூட இறந்தவர்கள் பெயர் இருக்கும். யாரால் கண்டுபிடிக்க முடியும். சம்பந்த பட்டவர்கள் சொன்னால் தான் தெரியும். காசு கொடுத்தால் எல்லா ஆவணமும் கிடைக்கும் என்றால் எதன் அடிப்படையில் வேற நாட்டில் இருந்து வந்தவர்களை அடையாளம் காண முடியும்


vadivelu
நவ 10, 2025 07:05

மொபைல் நம்பர் வாக்காளர் அட்டையுடன் யார் வேண்டுமானாலும் இணைத்து இருக்கலாமே.


Subramanian
நவ 10, 2025 05:23

This is not available in the App. Why not the ECI include this in the App itself


மேலும் செய்திகள்



புதிய வீடியோ