உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அந்த சாரை கைது செய்யுங்கள் தே.மு.தி.க., வலியுறுத்தல்

அந்த சாரை கைது செய்யுங்கள் தே.மு.தி.க., வலியுறுத்தல்

சென்னை:தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், சென்னையில், நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கட்சி கொடி நாள், 25ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, தமிழகம் முழுதும் உள்ள, அனைத்து கிளைகளிலும், கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகளை வழங்க வேண்டும். அண்ணா பல்கலை மாணவி வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் சிறையில் அடைக்கப்பட்டாலும், 'யார் அந்த சார்' என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. ஞானசேகரனுக்கு உதவிய சாரை கைது செய்ய வேண்டும். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் டாஸ்மாக் படிப்படியாக குறைக்கப்படும் என அறிவித்தது. ஆனால், மாநிலத்தில் மது விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால், சமூக விரோத செயல்களும் அதிகரித்து வருகின்றன. எனவே, அரசு உடனடியாக மது மற்றும் போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது உட்பட, 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ