உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சட்டசபை தேர்தல் ஏற்பாடு பொருட்கள் கொள்முதல் துவக்கம்

 சட்டசபை தேர்தல் ஏற்பாடு பொருட்கள் கொள்முதல் துவக்கம்

சென்னை: தமிழகத்தில் சட்டபை தேர்தலுக்கு, எழுதுபொருட்கள் கொள்முதல் செய்வதற்கான பணிகள் துவங்கி உள்ளன. தற்போதைய தி.மு.க., அரசின் பதவி காலம், 2026 மே மாதம் முடிகிறது. புதிய அரசை தேர்வு செய்ய, ஏப்ரலில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் அறிவிப்பு, மார்ச் மாதம் வெளியாகும். தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகள் துவங்கி உள்ளன. ஓட்டுப்பதிவுக்கு, 1.05 லட்சம் ரப்பர் ஸ்டாம்ப் பேடு, 1.05 லட்சம் அழியாத மை குப்பிகள், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை மறைக்க தேவையான அட்டைகள், பென்சில்கள், பேனா, பிளாஸ்டிக் கப், கார்பன் காகிதம் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்ய, மாநில எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை சார்பில், 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. இதற்கு, 9.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ