உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சைபர் குற்றவாளிகள் சொத்துக்களை முடக்க வேண்டும்: ஏ.டி.ஜி.பி., உத்தரவு

சைபர் குற்றவாளிகள் சொத்துக்களை முடக்க வேண்டும்: ஏ.டி.ஜி.பி., உத்தரவு

சென்னை:''சைபர் குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்க வேண்டும்,'' என, மாநில சைபர் குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் உத்தரவிட்டார். நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரை, மாநிலம் முழுதும் உள்ள சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களின் செயல்திறன் குறித்து, சென்னை அசோக் நகரில் உள்ள, மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு தலைமையகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. பல வழக்குகளில் தொடர்புடைய சைபர் குற்றவாளிகளை கைது செய்த கூடுதல் எஸ்.பி.,க்கள் கருப்பையா, வெற்றிச்செழியன், டி.எஸ்.பி., சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள், 18 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் பாராட்டினார்.பின், கூட்டத்தில் சந்தீப் மிட்டல் பேசியதாவது: இணைய வழியில் பணமோசடி செய்யும் நபர்களை கைது செய்வதுடன், சைபர் குற்றங்களுக்கு சூத்திரதாரியாக இருக்கும் நபர்களையும் கைது செய்ய வேண்டும். சைபர் குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்க வேண்டும். வழக்குகளை விரைந்து விசாரித்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணத்தை மீட்டுத்தர வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் விசாரணைக்கு, தேவையான ஆவணங்களை தாமதமின்றி சமர்பிக்க வேண்டும். மாநிலம் முழுதும் சைபர் குற்றங்கள் தொடர்பாக, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும், பாதிக்கப்படும் நபர்களை அலைக்கழிக்க கூடாது.இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை