உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விபத்தில் சிக்கும் கால்நடைகளை மீட்போருக்கு உதவித்தொகை

விபத்தில் சிக்கும் கால்நடைகளை மீட்போருக்கு உதவித்தொகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:சாலைகளில் விபத்துக்குள்ளான, நாய், ஆடு, மாடு போன்றவற்றை மீட்டு, மருத்துவமனையில் சேர்ப்போருக்கு, உதவித் தொகை வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது சாலை விபத்துகளில் சிக்குவோரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்வோருக்கு, உதவித்தொகை வழங்கும் திட்டம், மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்துகிறது. அதேபோல், விபத்தில் சிக்கும் கால்நடைகளை மீட்டு, மருத்துவமனையில் சேர்ப்போருக்கும், உதவித் தொகை வழங்க, விலங்குகள் நல வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: விபத்துக்குள்ளாகும் விலங்குகளை, மருத்துவமனைக்கு கொண்டு செல்வோரை ஊக்குவிக்க, அவர்களுக்கு உதவித் தொகை வழங்க, முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு தொகை வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை