உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "அட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் விட ஐகோர்ட் மறுப்பு

"அட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் விட ஐகோர்ட் மறுப்பு

மதுரை : மதுரையில், வீடு அபகரிப்பு வழக்கில் தி.மு.க., முன்னாள் வேளாண் விற்பனை குழுத் தலைவர் 'அட்டாக்' பாண்டியை போலீஸ் காவலில் விட, ஐகோர்ட் கிளை மறுத்து விட்டது. மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த பிருத்விராஜ் வீட்டை அபகரிக்க முயன்றதாக, 'அட்டாக்' பாண்டி உட்பட சிலர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில், அவரை போலீஸ் காவலில் விட மறுத்து, மாஜிஸ்திரேட்கோர்ட் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, போலீஸ் சார்பில் ஐகோர்ட் கிளையில் சீராய்வு மனு செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மாலா, நேற்று தள்ளுபடி செய்தார்.

மற்றொரு வழக்கு: மதுரையைச் சேர்ந்த ஆடிட்டர் அமர்நாத் நிலத்தை அபகரிக்க முயன்றதாக தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் 'பொட்டு' சுரேஷ் (சுரேஷ் பாபு), சூடம்மணி உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் சூடம்மணி, உதயக்குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி மனு செய்தனர். மனு மீதான விசாரணையை ஆக., 16க்கு, நீதிபதி ஆர்.மாலா தள்ளிவைத்தார். அதுவரை அவர்களை கைது செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ