உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக, தி.மு.க.,வினரை நியமிக்க முயற்சி: அ.தி.மு.க., வழக்கு

உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக, தி.மு.க.,வினரை நியமிக்க முயற்சி: அ.தி.மு.க., வழக்கு

சென்னை: தமிழக அரசின் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக, தி.மு.க.,வினரை நியமிக்க முயற்சிப்பதாக கூறி, அ.தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனம் தொடர்பாக, விதிகளில் திருத்தம் செய்து, 2022ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சீனிவாச மாசிலாமணி என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் ஆதாயம் அடையும் நோக்கில், தி.மு.க., - ஐ.டி., பிரிவை சேர்ந்தவர்களை, ஏ.பி.ஆர்.ஓ., எனும் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக நியமிக்க முயற்சிப்பதாக கூறி, அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலர் இன்பதுரை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், தமிழ்செல்வன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பொது அறிவிப்பு வெளியிடாமல், எழுத்துத் தேர்வு நடத்தாமல், பெயரளவில் விண்ணப்பங்களை வரவேற்று விட்டு, தி.மு.க.,வை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவினரை நியமிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமானது. இந்த நியமனத்தை அனுமதித்தால், அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் தகுதியானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விதிகளுக்கு முரணாக, சட்டவிரோதமாக, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனத்தை தடுக்கவும், சீனிவாச மாசிலாமணி தாக்கல் செய்த வழக்கில், என்னையும் ஒரு தரப்பாக சேர்க்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தென் தமிழக கர்வ திராவிடன்
ஜூலை 27, 2025 13:28

வழக்கு எண் பதிவிடவும்


Kasimani Baskaran
ஜூலை 27, 2025 11:03

மனித உரிமைக்கே திராவிட சாயம் பூசிவிட்டார்கள்.. கோவிலுக்குள் பெரியார் மற்றும் ஆர்ட்டிஸ்ட் சிலைகள் வைக்கவில்லை - அதைக்கூட செய்ய வாய்ப்பு இருக்கிறது.


hariharan
ஜூலை 27, 2025 09:49

அனைத்து பணியிடங்களும் TNPSC வழியாக தகுதி அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். வேண்டியவர்களை வேலையில் அமர்த்துவதற்கென்றே அதுபோன்ற பதவிகள் ஆளும் கட்சியிடம் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் பிரச்சினைபண்ணும் ஆளுநருக்கு இது தெரியாதா இல்லை தெரியாதமாதிரி இருக்கிறாரா? இந்த வியாதி 1973ல் கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்ட நடராஜனில் தொடங்கியது. அது இன்றளவும் தொடர்கிறது. அதிமுகவும் தன் பங்கிற்கு தன் அடிமை கட்சிகளின் அல்லக்கைகளுக்கு அள்ளிக்கொடுத்தது அதிமுகவிற்கு தெரியாதா? எல்லாம் நாடகம். இதைப்போன்ற பணிகள் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் வரம்பிற்கு வராமல் எத்தனை இருக்கிறதோ யாருக்கும் தெரியாது. பெருந்தலைவர் கழகங்களைப்பற்றி கூறியது நினைவிற்கு வருகிறது.


ஆரூர் ரங்
ஜூலை 27, 2025 08:51

இப்படிதான் ( சசிகலா) நடராஜனுக்கு) PRO பதவியளித்தார் கருணாநிதி.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 27, 2025 08:29

அதிமுக ரொம்பத்தான் ஓவரா போகுது ...... எல்லோருக்கும் சம்பாதிக்க திமுக வாய்ப்பு கொடுக்குது ..... அது இவங்களுக்குப் பொறுக்கல ....