உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: போலி நிருபர்கள் 8 பேர் கைது

நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: போலி நிருபர்கள் 8 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்திரிகை நிருபர்கள் எனக் கூறி நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை பகுதியில் ஜஸ்டின் ராஜ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் பத்திரிகை நிருபர்கள் என்றுக் கூறி, நிதி நிறுவனத்தில் அதிகப்படியான வட்டி வாங்குவதாக புகார் வந்துள்ளது.இது தொடர்பாக பத்திரிகையில் அவதூறு செய்தி வெளியிடாமல் இருக்க ஒரு லட்ச ரூபாய் தர வேண்டும் எனக் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் கொடுக்க மறுத்த ஜஸ்டின் ராஜை அச்சுறுத்தி சட்டை பையில் இருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்துவிட்டு தப்பி சென்றனர்.இச்சம்பவம் தொடர்பாக ஜஸ்டின் ராஜ் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரத்தை சேர்ந்த ஆன்றனி (51), கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த சுனில் (33), கருவாவிலை பகுதியை சேர்ந்த லால் (36), ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த செல்வராஜா (37), கன்னியாகுமரியை சேர்ந்த சுரேஷ் கோபி (52), திருவட்டார் பகுதியை சேர்ந்த பெல்வின் ஜோஸ் (41), கீழபெருவிளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (38) மற்றும் சின்ன முட்டம் பகுதியை சேர்ந்த சகாய போஸ்கோ (58) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தமிழ் நிலன்
மார் 04, 2025 21:30

போலி பத்திரிகையாளர்கள் ஏராளமான பேர்கள் பெருகி விட்டார்கள். அரசு அலுவலகங்களிலும், தனியார் மருத்து கிளிக்களிலும், உணவகங்களிலும் இவர்கள் மிரட்டல் விடுத்து பணம் பறிப்பது நடந்து வருகிறது. இவர்கள் தீபாவளி பொங்கல் நாட்களில் மாமூல் வாங்க அடிக்கும் கூத்து மிக பெரியது. சிலர் பிரபலமான பத்திரிகை பெயர்களையும் பயமின்றி பயன்படுத்துகிறார்கள்.


பல்லவி
மார் 04, 2025 19:45

போலி ஆட்டம் சீக்கிரம் முடிவுக்கு வந்து விடும்


enkeyem
மார் 04, 2025 15:06

நீதிவலை என்ற நிறுவனத்தின் அடையாள அட்டை. நீதி வலையா சதி வலையா


raja
மார் 04, 2025 13:52

திருட்டு திராவிட மாடல் ஆட்சியில் திருடர்கள் அதிகமாகி விட்டார்கள் அனைத்து துறைகளிலும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை