UPDATED : அக் 16, 2024 09:31 AM | ADDED : அக் 16, 2024 09:18 AM
சென்னை: தொடர் மழை காரணமாக, இன்று(அக்., 16) சென்னையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.சென்னையில் கனமழை விடாது பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி., நகர், கிண்டி, சைதை, தேனாம்பேட்டை, தி.நகர், அமைந்தகரை, ஷெனாய் நகர், மயிலாப்பூர், மந்தைவெளி என பல பகுதிகளில் மழை ஓயவில்லை. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகளில் தேங்கும் நீரை, மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.கனமழை, போதிய பயணிகள் வருகை இல்லாததால் சென்னையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஏராளமான பயணிகள் தங்களின் பயணத்தையும் ரத்து செய்துள்ளனர். இதனால் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருக்கிறது. இன்று (அக்.,16) ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்கள் விவரம் பின்வருமாறு:* சென்னை-மதுரை: இண்டிகோ ஏர்லைன்ஸ்* சென்னை-சேலம்: இண்டிகோ ஏர்லைன்ஸ்* சென்னை-சீரடி: ஸ்பைஸ் ஜெட்* மதுரை-சென்னை: இண்டிகோ ஏர்லைன்ஸ்* சீரடி -சென்னை: ஸ்பைஸ் ஜெட்* சேலம்-சென்னை: இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளதால் அதற்கு ஏற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.