உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம் டி - சர்ட் அணிந்து விழிப்புணர்வு பிரசாரம்

 திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம் டி - சர்ட் அணிந்து விழிப்புணர்வு பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றக்கோரி, ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர், 'குன்றில் தீபம் ஏற்றுவோம்' என அச்சடித்த 'டி - சர்ட்' அணிந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில், திருக்கார்த்திகையன்று தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. அதை தமிழக அரசு ஏற்க மறுத்தது.இதுதொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தீபத்துாணில் தீபம் ஏற்ற, உள்ளூர் மக்கள், உயர் நீதிமன்ற அனுமதி பெற்று நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.வீடுதோறும் தீபம், கொடியேற்றி வழிபட்டு வருகின்றனர்.அதேசமயம், ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினரும் தீபம் ஏற்ற வலியுறுத்தி, பல வகைகளில் பிரசாரம் செய்து வருவது மக்களை ஈர்த்து வருகிறது.ஹிந்து முன்னணியினர் கூறுகையில், 'திருப்பரங்குன்றம் மலையில், தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதற்கு மக்களிடையே எவ்வளவு ஆதரவு உள்ளது என, சமூக வலைதளத்தில் ஓட்டெடுப்பு நடத்தி வருகிறோம்.நாங்கள் எதிர்பார்த்ததைவிட ஆதரவு அதிகரித்து வருகிறது. தவிர, ஒவ்வொருவரும் 'குன்றில் தீபம் ஏற்றுவோம்' என அச்சிடப்பட்ட டி - சர்ட்டை அணிந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.'அதுபோல் வாட்ஸாப் ஸ்டேட்டஸிலும், டிஸ்ப்ளே பிக்சராகவும் 'அங்கேயே தீபம் ஏற்றுவோம்' என்ற வாசகத்துடன் கூடிய படத்தை வைத்துள்ளோம். இதை ஒவ்வொரு ஹிந்துவும் தாங்களாக முன்வந்து செய்தால், நிச்சயம் முருகன் அருளால் தீபம் ஏற்றும் கட்டாயத்திற்கு தி.மு.க., அரசு வரும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Chandra Sekar
டிச 14, 2025 19:12

டீ ஷர்ட் எங்கு கிடைக்கிறது என தெரிவிக்கவும்


Sun
டிச 14, 2025 15:13

ஹிந்தி தெரியாது போடா ! டீசர்ட் மட்டும்தான் எங்க திராவிட மாடல் கண்களுக்கு தெரியும். இந்த டீ சர்ட் எல்லாம் எங்களோட கண்களுக்கு தெரியவே தெரியாது!


Mani
டிச 14, 2025 12:38

தீபம் ஏற்றுவதை விட மிக முக்கியம் மதவாத கட்சி ஆன திமுகவை ஆட்சியை விட்டு அகற்றுவது


Shekar
டிச 14, 2025 09:55

அந்த T சர்ட் விக்கிற கடைக்காரனை உள்ள பிடிச்சி போட்டுருவானுகளே...திமுகவின்அராஜக அரசு


Bharathi
டிச 14, 2025 09:34

வாங்குவதற்கு எங்கே கிடைக்கும்? தயவு செய்து விவரங்கள் வெளியிடவும்.


Kasimani Baskaran
டிச 14, 2025 06:06

அருமை. இவை அனைத்தும் பாஜக கூட்டணிக்கு வாக்காக மாறவேண்டும். இந்துக்களை ஒருங்கிணைக்க வேண்டும். கோவிலை பராமரிக்க இந்து அறநிலையத்துறைக்கு சட்டத்தில் இடமேயில்லை - ஆகவே அவர்களை கோவிலில் இருந்து விரட்டுவது நல்லது.


Oviya Vijay
டிச 14, 2025 04:23

ஒரு 30 40 வருடங்களுக்கு முன்னர் எல்லாம் தமிழகத்தில் அனைத்து பண்டிகைகளையும் மத ஒற்றுமையுடன் அனைவரும் அமைதியாக மகிழ்ச்சியாகக் கொண்டாடினோம்... உனது எனது என்ற எந்த பாகுபாடின்றி மன நிறைவுடன் வாழ்ந்து வந்தோம்... ஆனால் என்றைக்கு பாஜக என்ற ஒன்று உள் நுழைந்ததோ அன்றைக்கு ஆரம்பித்தது தமிழ்நாட்டில் மதப் பிரச்சனை... இன்றளவும் அது தொடர்கிறது... முடிந்த பாடில்லை...


Kasimani Baskaran
டிச 14, 2025 08:52

எல்லா மதத்தினர்களுக்கும் வாழ்த்து சொல்லும் நாங்கள் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லவே மாட்டோம். அதே சமயம் இந்துக்களுக்கு நாங்கள் விரோதியல்ல. இது என்ன நிலைப்பாடு என்று விளக்க முடியுமா?


N Sasikumar Yadhav
டிச 14, 2025 11:49

இந்துமத துரோக திருட்டு திமுக எப்போது ஓட்டுப்பிச்சைக்காக சிறுபான்மையிரினருக்கு ஆதரவாக இருந்து இந்துக்களை ஜாதீரீதியாக பிரித்து கலவரத்தை உண்டாக்கியதோ அப்போதே பாரதியஜனதாவின் தேவை தமிழகத்தில் அதிகமாகிவிட்டது . இப்பக்கூட சிறுபான்மையிரினரின் ஓட்டுப்பிச்சைக்காக தமிழர்களின் கொண்டாட்டங்களை நிம்மதியாக கொண்டாட விடாமல் தடுக்கிறானுங்க இந்த மானங்கெட்ட இந்துமத துரோக திமுகவினர்


பேசும் தமிழன்
டிச 14, 2025 14:26

என்றைக்கு திருட்டு மாடல் ஆட்கள் உள்ளே வந்தார்களோ.... அன்றிலிருந்து மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.... அவர்கள் கிருஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம் மக்களை ஒரு விதத்திலும்.... இந்து மக்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார்கள்.


Venkatesan Srinivasan
டிச 14, 2025 19:48

எந்த காலத்திலும் எல்லோரும் எல்லா பண்டிகைகளும் கொண்டாடவில்லை. பெரும்பாலானவர்கள் அவரவர் சம்பிரதாயங்களை மட்டுமே கடைபிடித்து வந்தனர். வெறுமனே மதச்சார்பின்மை என்ற போர்வையில் சில சமூக விரோதிகள் இந்து மத விஷயங்களை எள்ளி நகையாடி வந்தனர். அவர்கள் பெரும்பாலும் திராவிஷர்கள். அவர்கள் தங்களை இந்துக்கள் என்று காட்டிக் கொண்டு இட ஒதுக்கீடு சலுகைகள் அனுபவித்துக்கொண்டு பிற சமூக மக்களின் முன்பு இந்து மக்களை ஏளனம் பேசுகின்றனர். இந்த பச்சை துரோகம் கடந்த எழுபது என்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கண்கூடு. எனவேதான் இந்து மத சார்புடைய கட்சிகள் இங்கே வரவேற்பு பெறுகின்றன. தமிழக திராவிஷ அரசியல்வியாதிகள் உண்டாக்கிய நிலை இது.


Arjun
டிச 15, 2025 16:25

இதுவரைக்கும் எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது எல்லாமதத்தினரும் தீபாவளி,பொங்கல் ,சரஸ்வதியை, தைப்பூசம் கொண்டாடினார்கள் என்பது அப்ப ஏன்? உங்கள் முதல்வர் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லவில்லை.


Rajkumar Ramamoorthy
டிச 14, 2025 03:53

சூப்பர்.. மறைவில் இருந்து இஸ்லாம், மற்றும் கிருத்வ மதங்களுக்கு வேலை செய்யும் திமுக என்கிற மதவாத கட்சியிடம் இருந்து இந்து மக்கள் வெளியே வர வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை