விழிப்புணர்வு பயிற்சி
கோவை: என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி முகாம், வி.எல்.பி., ஜானகி யம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜ்குமார் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் சுரேஷ் வரவேற்றார். வக்கீல் பொன்னுசாமி 'நுகர்வோர் கோர்ட்களின் செயல்பாடுகள், நுகர்வோர் விழிப்புணர்வு முறைகள் குறித்தும், முன்னாள் மாணவர்களின் பணிகள் குறித்தும்' பேசினார். குப்பனூர் உதவிபெறும் பள்ளி செயலாளர் மனோகரன், ஆனந்ததீர்த்தன், சூர்யகாந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.