உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமதாஸ்- அன்புமணி மோதல் பின்னணி: பா.ம.க.,வினர் அதிர்ச்சி!

ராமதாஸ்- அன்புமணி மோதல் பின்னணி: பா.ம.க.,வினர் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் உக்கிரம் எடுத்துள்ளது. கூட்டணியால் மோதல் ஏற்பட்டது என்பதை இன்று ராமதாஸ் போட்டு உடைத்திருப்பது, கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தலுக்குப் பிறகு ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி, புதுச்சேரியில் நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில், மேடையிலேயே அக்கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே, நேரடியாக மேடையிலேயே வார்த்தை போர் வெடித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eqm5ua6z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இரண்டாவது சம்பவம்

அடுத்த கட்டமாக, ஏப்ரல் 10ம் தேதி மகனது தலைவர் பதவியை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பறித்தார். ராமதாஸ், 'இனி நானே தலைவர்' என அறிவித்தார். அத்துடன், 'அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார்' என்றார். இதன் பிறகு ராமதாஸ் நடத்தும் கூட்டத்தை அன்புமணி புறக்கணித்து வருகிறார்.

மூன்றாவது சம்பவம்

கடந்த மே 24ம் தேதி, “பயங்கர மன உளைச்சல், தூக்கம் வரவில்லை” என தலைவர் பதவி நீக்கம் குறித்து பா.ம.க., தலைவர் அன்புமணி வேதனை தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவர் நான் என்ன தவறு செய்தேன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

நான்காவது சம்பவம்

இன்று (மே 29) '35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இது அன்புமணி- ராமதாஸ் இடையே மோதல் போக்கை வெட்ட வெளிச்சமாக்கியது.வளர்த்த கிடாவே எனது மார்பில் எட்டி உதைத்துவிட்டது. அன்புமணி செயல் சரியானதா? பொய்யை அன்புமணி மூச்சு விடாமல் பேசுவார் என மகன் மீது தந்தை ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

கூட்டணி தான் காரணமா?

“அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை அன்புமணி கேட்கவில்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என சவுமியாவும், அன்புமணியும் ஆளுக்கு ஒரு காலை பிடித்து என்னிடம் அழுதனர். அ.தி.மு.க., பா.ம.க., கூட்டணி தான் இயற்கையான கூட்டணி” என ராமதாஸ் கூறியுள்ளார். கூட்டணி விவகாரம் தான் தந்தை - மகன் இடையிலான மோதலுக்கு முக்கிய பங்கு வகித்தது என்பதை வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளது.

பா.ம.க.,வினர் அதிர்ச்சி

பா.ம.க.,வின் ஜி.கே., மணி, 'அன்புமணி- ராமதாஸ் இடையிலான மோதலுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இருவரும் இணைந்து செயல்படுவார்கள்' என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார். அது எல்லாம் தற்போது காற்றில் பறந்து விட்டது. நிருபர்கள் சந்திப்பிலேயே மோதலை ராமதாஸ் வெளிப்படையாக தெளிவுபடுத்தி விட்டார். தந்தை, மகனிடையே மோதல் ஏற்பட்டது பா.ம.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Kumar Kumzi
ஜூன் 28, 2025 13:09

மாம்பழம் மிகவும் பழுத்து அழுகும் தருவாயில் இருக்கிறது இன்னும் கிளையில் தொங்கிக்கொண்டு இருக்கிறதே


venugopal s
மே 30, 2025 11:07

அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது? பாமகவில் இருந்து ஒரு கூமக பிறக்கும்!


Kasimani Baskaran
மே 30, 2025 03:48

அறிவாலயம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்ற உண்மையை சொல்லும் வரை தீம்க்கா பா ம க என்பதுதான் இயற்கையான பிரியாணி. அதன் பின்னர்தான் மற்ற கட்சிகளை தொடர்பு கொள்ள வேண்டிய நிலை வந்துவிட்டது.. எது எப்படியோ குடும்ப ஆதிக்கம் என்பது பொதுவாகவே தமிழகத்தில் உள்ள பல கட்சிகளில் பிரபலம்.


NARAYANAN
மே 30, 2025 01:03

பிளவுக்கு காரணம் புரிந்துவிட்டது.ஆனால் இயற்கையான கூட்டணிக்குத்தான்[ பொருள்] விளங்கவில்லை.யாராவது உதவினால் மகிழ்ச்சியாக இருக்கும்.


துர்வேஷ் சகாதேவன்
மே 29, 2025 22:50

மணி பிஜேபி சாவகாசம் பார்த்தியா உன்னை எங்கு கொண்டு வந்து விட்டது


Sivagiri
மே 29, 2025 21:56

பிஜேபி யுடன் சேர்ந்து , சென்டரல் மினிஸ்டர் ஆயிடலாம் , மனைவிக்கும் , கொஞ்சம் ஏதாவது பார்லிமெண்ட்ல , அல்லது ஏதாவது மகளிர் ஆணையம் அப்டி பதவிகளை பேரம் பேசி வாங்கிக்கலாம்- னு கால்குலேஷன் போடறாரு அன்பு - - ஆனா , ராமதாசர் இப்போ கலைஞர் , பழனிசாமி , போல சீனியர் லீடரா இருக்கும் இமேஜ் - போயிடும்னு அய்யா கவலைப்படறார் , , admk dmk , ரெண்டு பக்கமும் ஒட்டிக்கிட்டு சீனியர் அப்டின்னு.இமேஜில் வேண்டிய காரியங்களை சாதிச்சிரலாம்னு அய்யா kalkulesan போடறாரு போல . . .


GoK
மே 29, 2025 21:06

சனநாயகம் தழைக்க , குடும்ப, வாரிசு அரசியல் முற்றிலும், பூண்டோடு ஒழிய வேண்டும் .


சண்முகம்
மே 29, 2025 19:32

கருணாநிதி, சுடாலின் தவிர மற்ற பிறப்புகளை ஓரம் கட்டினார். திமிறிய அழகிரியை கட்டிப்போட்டார். ராமதாஸ் குடும்பத்தையே அடக்க முடியாதவர். கருணா அளவிற்கு ராமர் தந்திரசாலி இல்லை.


V.Mohan
மே 29, 2025 19:04

கருணாநிதி அளவு ராமதாஸ் சொத்து சேர்த்திருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது. கருணா மகன்களுக்கும் மகள்களுக்கும் சரிவர பிரித்து கொடுத்துள்ளார் போல...மதுரை அஞ்சா நெஞ்சனே பின் வாங்கும் அளவுக்கு கருணா கறாராக. பஞ்சாயத்து பண்ணி சமாதானம் ஆகி மேற் கொண்டு கம்பெனிகள், முதலீடுகள்,தேவையான கைத்தடிகள் எல்லாத்தையும் பங்கீடு பண்ணி வைத்துவிட்டு போன கலைஞர் கெட்டிக்காரர். எல்லாருக்கும் வருமானம் தொடர்ச்சியாய் வரும் போது பெரிய லெவல் சண்டை வர வாய்ப்பில்லை. குடும்பத்திற்கு திமுக ஏற்பாடு பண்ணின மாதிரி வேற யாரும் பண்ணல. ராமதாஸ் குடும்பத்தில் எல்லாருக்கும் ஏற்பாடு எதுவும் பண்ணாம , ஏற்பாடு பண்ண முயற்சித்த அன்புமணியையும் எதுவும் பண்ண விடாம தடுத்தா, இப்படித்தான் ஆகும்


M Ramachandran
மே 29, 2025 17:38

ராமதாஸ் செய்வது என்றுமெ மிரட்டும் அடாவடி செயல். கூட கூட்டணி வைத்தால் கொடச்சல்கொடுத்து கொண்டே தான் இருப்பார். தனிமைய்யாகவிட்டுவிடுவதெ மேல்


புதிய வீடியோ