வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அதற்கு பதில் ஆசிரியர்கள் தங்களது வீட்டிலேயே (காசு வாங்கிக்கொண்டு) டியூஷன் எடுப்பார்கள் .
அதாவது பொறுப்பு துறப்பு.
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, நாளை (செப்., 28) முதல் அக்., 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை. 'இந்த நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது; பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு விடைத்தாள்களை வழங்க வேண்டும்' என, கடலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதேசமயம், தமிழக அரசு பள்ளிக்கல்வி துறையோ, மற்ற மாவட்ட கல்வி அதிகாரிகளோ எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை. இதனால், மற்ற மாவட்ட தலைமை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'விடுமுறையில் வகுப்புகள் நடக்கும் பட்சத்தில், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், மாவட்ட கல்வி அதிகாரி பொறுப்பேற்க வேண்டும் என்பதால், முன்னெச்சரிக்கையாக இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் எப்போதும் சுற்றறிக்கைகளை மதிப்பதில்லை' என்றனர்.
அதற்கு பதில் ஆசிரியர்கள் தங்களது வீட்டிலேயே (காசு வாங்கிக்கொண்டு) டியூஷன் எடுப்பார்கள் .
அதாவது பொறுப்பு துறப்பு.