மதுக்கூடங்களை மூட உத்தரவு
டாஸ்மாக் மது கடைகளில் செயல்படும் தனியார் மதுக்கூடங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி, இந்த ஆண்டு ஜனவரியில் முடிவடைந்தது. சட்டசபை தேர்தலால், கடந்த ஜூன் மாதம் வரை, ஆறு மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது. நேற்று அவகாசம் முடிந்த நிலையில், புதிய, 'டெண்டர்' கோரும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால், மதுக்கூட அனுமதியை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க, 'டாஸ்மாக்' முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. இந்நிலையில், 'இம்மாதம், 1ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை, மதுக்கூடங்கள் மூடப்பட வேண்டும்' என, மதுக்கூடங்களை நடத்துவோருக்கு, டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் தகவல் அனுப்பியுள்ளனர்.