உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  விடுதி மாணவர்களுக்கு மாட்டிறைச்சி: அமைச்சர் வன்னி அரசு தகவல்

 விடுதி மாணவர்களுக்கு மாட்டிறைச்சி: அமைச்சர் வன்னி அரசு தகவல்

சென்னை: ''சமூக நீதி விடுதி மாணவர்களுக்கு, மாட்டிறைச்சி வழங்குவது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,'' என, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார். சென்னை, சைதாப்பேட்டையில் அமைந்துஉள்ள, எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில், நேற்று முன்தினம் இரவு அமைச்சர் வன்னி அரசு, திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, அதன் தரம், மெனு மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தார். பின் அவர் அளித்த பேட்டி: சமூக நீதி விடுதிகளில், சிக்கன், மட்டன் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. சில மாணவர்கள், உணவு பட்டியலில் மாட்டிறைச்சியை சேர்க்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். 'கிராமப்புறங்களில் இருந்து வந்துள்ளதால், எங்கள் வீடுகளில் மட்டன் அதிகம் சாப்பிட்டதில்லை. எங்களுக்கு மாட்டிறைச்சி வேண்டும்' என, கோரிக்கை விடுக்கின்றனர். சில மாணவர்கள் வேண்டாம் என்கின்றனர். இது குறித்து, மாணவர்கள், அதிகாரிகள் என, அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

விபரீதமான முடிவு: கிருஷ்ணசாமி எச்சரிக்கை

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை; மாட்டிறைச்சி, நம் தமிழகத்தில் பொதுவான உணவு அல்ல; அது நம் கலாசாரத்திலும் இல்லை. அது சில தனிப்பட்ட நபர்கள், குடும்பங்கள், சமூகங்களுடைய பழக்கவழக்கங்கள். ஒரு தவறான, விபரீதமான முடிவை, அமைச்சர் வன்னி அரசு எடுத்துவிட மாட்டார் என்று கருதுகிறோம். ஒருவேளை அதை அமல்படுத்துவதற்கான செயலில் ஈடுபட்டால், அமைச்சரவை இருக்கையிலேயே அமர முடியாத சூழ்நிலைகூட ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 132 )

Pariventhan K
அக் 22, 2026 12:20

சிலர் பன்றி இறைச்சியை விரும்பினால் அதற்கும் பரிசீலிப்பிர்களா?


Mohan
அக் 21, 2026 16:52

விசிகவினர் தங்களது பட்டியலின மாணவர்கள் உருப்படுவதற்கு, முன்னேறுவதற்கு தேவையான உதவிகளை செய்யமாட்டார்கள்.. தமிழை,தமிழ் மக்களை கேவலப்படுத்திய வெங்காய ராமசாமியின் தேவையற்ற விஷயங்களைப் பிடித்து கொண்டு தொங்குகிறார்கள். அவை அவர்களுக்கு எனாறும் உதவாது. வன்னி அரசு போன்றவர்களின் ஈகோ சமாதானமடையலாம்.பட்டியலின மாணவ மாணவிகள் உருப்பட , படிப்பும், விளையாட்டில் ஊக்கமுமே உதவும்.


sankar
அக் 18, 2026 13:44

ரொம்ப சத்தானது


Vasan
அக் 15, 2026 17:06

மாமிச உணவு அறவே தவிர்க்கப்பட வேண்டும்.


Senthamizhsudar
அக் 14, 2026 10:12

அரசு பள்ளிகளில் இறைச்சி உணவு முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்


Enrum anbudan
அக் 13, 2026 21:05

எல்லாம் அமைச்சராக்கி தமிழ்நாட்டை அசிங்கப்படுத்துரீங்கய்யா. ரொம்ப கேவலமாக இருக்கு.


SULLAN
அக் 13, 2026 15:54

ஆஹான்


Sivaagiri
அக் 04, 2026 08:52

இந்தியாவில் எங்குமே கிராம மக்கள் ஆட்டிறைச்சி கோழி இறைச்சி மட்டுமே சாப்பிடுகிறார்கள் - இந்தியாவின் எந்த கிராமத்திலும் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை


sasikumaren
செப் 30, 2026 09:44

நல்ல தரமான கல்வி வாழ்க்கைக்கு உதவும் நீச்சல் போன்ற பயிற்சிகளை சொல்லி தர வேண்டும் சர்வதேச தரத்தில் விளையாட்டு பயிற்சி இதை எல்லாம் பள்ளி கல்லூரி சிறுவர்களுக்கு சொல்லி தர வேண்டும் ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகள் இந்தியாவில் நடத்தி பார்க்க வேண்டும் என்ற எண்ணமே யாருக்கும் இல்லை இது யார் காதில் விழும்?


Vasan
செப் 28, 2026 19:23

Dont give Non-Vegetarian food. Offer only Vegetarian food.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை