உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாடிக்கையாளர் சேவை மைய எண் ஆன்லைனில் தேடுவோர் உஷார்

வாடிக்கையாளர் சேவை மைய எண் ஆன்லைனில் தேடுவோர் உஷார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : வங்கி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:வங்கி கிளை தொடர்பு எண்கள், 'ஆன்லைன் பேங்கிங்' மற்றும் ஏ.டி.எம்., மற்றும் கிரெடிட் கார்டு புகார்கள் குறித்த விபரங்களை அறிய, வங்கிகள் சார்பில், வாடிக்கையாளர் சேவை மைய எண்கள் வழங்கப்பட்டுள்ளன.வங்கிகளுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை மைய எண்களை இணையதளத்தில் தேடுகின்றனர். இவ்வாறு தேடுவோரை குறி வைத்து, மோசடி கும்பல், சில போலி எண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. வங்கி அறிவித்த எண் எது என்று தெரியாமல், மோசடி கும்பல் பதிவேற்றம் செய்த எண்ணை தொடர்பு கொள்ளும் போது, அதை பயன்படுத்தி, பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.எனவே, வங்கி வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை, இணையத்தில் தேடாமல், சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று, தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது. இது மோசடியில் இருந்து தப்பிக்க உதவும். இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சுரேஷ் சிங்
ஏப் 02, 2025 11:52

நேர்மையா நடந்தா நம்மளை மொட்டையடிக்காம உடமாட்டாங்க.


KavikumarRam
ஏப் 02, 2025 10:41

கிழிச்சீங்க. வங்கி வலைத்தளத்தில் தேடினால், அந்த டோல் ஃப்ரீ நம்பரை தொடர்பு கொள்வதற்கு பதில் தற்கொலை செய்து கொள்ளலாம். ஒன்னு சுத்தமா கனெக்ட் ஆகாது, இல்லேன்னா தொடர்ந்து 24 மணிநேரமும் பிஸியாவே இருக்கும், இல்லீன்னா உங்க பிரச்சினைக்கான ஆப்ஷனை தேர்ந்தெடுக்குறதுக்குள்ள மினிமம் ஒரு 15 நம்பர் வரைக்கும் நீங்கள் அழுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அதனால தான் மக்கள் புதுசா ஏதும் டோல் ஃப்ரீ நம்பர் மாத்திட்டாங்களோன்னு தேடியிருப்பாங்க. மொதல்ல நீங்க திருந்துங்க. இன்னும் மக்களை ஏமாத்திக்கிட்டே இருக்காதீங்க.


அப்பாவி
ஏப் 02, 2025 07:17

இந்திய நிறுவனங்களின் சேவை கழுதையின் தரத்துக்குப்.போய்க்கிட்டிருக்கு. நேத்திக்கி RuPay கார்டின் பின்னாடி அவிங்க குடுத்திருந்த 18004252440 க்கு அடிச்சுப் பாத்தேன். This number dies not exist நு வருது. பிறகு நெட்டில் தேடி ஒரு நம்பரைப் புடிச்சு கூப்புட்டா ரூபே கார்டின் முதல் 6 எண்களை உள்ளிடவும்னு சொல்றாங்க. உள்ளிட்டால், சாரி அந்த எண்கள் சரியில்ல. நமரை சரிபார்த்து அமுக்கச் சொல்றாங்க. மூணு தடவை பண்ணிட்டு கட் பண்ணிட்டேன். இதை எவன் கிட்டே போய் புகார் குடுக்கறதுன்னு தெரியலை. இது மாதிரி சேவைகளை வெச்சிக்கிட்டு நாம ஃப்ராடுத்தனத்தில் தான் வல்லரசு ஆயிட்டு வர்ரோம்.


கலியபெருமாள்
ஏப் 02, 2025 08:48

நம்ம நிறுவனங்களுக்கு கழுதைகள் எவ்வளவோ மேல்.