உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடுவானில் சென்னை To கோலாலம்பூர் விமானத்தின் மீது மோதிய பறவை; அவசரமாக தரையிறக்கம்

நடுவானில் சென்னை To கோலாலம்பூர் விமானத்தின் மீது மோதிய பறவை; அவசரமாக தரையிறக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தின் மீது பறவை மோதியதில் இன்ஜின் பகுதி சேதம் அடைந்தது. இதனால் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப் பட்டது.சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு பயணிகள் 190 பேருடன் ஏர் ஏசியா விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் பறக்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே அதன் மீது பறவை மோதியது. விமானி சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.விமானம் தரையிறங்கியதும், சென்னையில் உள்ள, ஏர் இந்தியா பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய ஆணைய பராமரிப்பு பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை முழுவதும் பரிசோதித்தனர். இன்ஜின் பகுதி அதிக சேதம் ஏற்பட்டுள்ளது தெரியவர அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M. PALANIAPPAN, KERALA
அக் 25, 2025 12:47

இது ஒரு தொடர்கதை, தொலைதூர பிரயாணம், கடல் கடந்த பயணம் இதற்கு எல்லாம் விமான யாத்திரை தவிர்க்க இயலாத ஒன்று வாழ்வா சாவா என்ற நிலையில் தான் விமான பயணம் உள்ளது, இறைவன்தான் காக்க வேண்டும்


Yasararafath
அக் 25, 2025 12:41

பறவைகளுக்கு ஒன்றும் ஆகலலா


Ramesh Sargam
அக் 25, 2025 10:01

சமீப காலங்களில் விமானத்துக்கு ஏற்படும் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. காரணம்? அலட்சியம். முறையான பராமரிப்பு இல்லை. விமானிகளுக்கு அதிக பணிச்சுமை, ஓய்வு என்பது இல்லை. விமான பயணியர்கள் மற்றும் விமான சிப்பந்திகள் உயிருடன் விளையாடாதீர்கள்.


Senthoora
அக் 25, 2025 10:46

இவங்க திருந்த மாட்டாங்க, முன்பு பாலி கொடுத்ததும் அறிவு வரல. விபத்து நடந்தால், போயிங் நிறுவனம், விமானி தவறு என்று கேஸ் மூடிடுவாங்க.


புதிய வீடியோ