தமிழகத்தில் பிறப்பு விகிதம், 2023ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2024ல், 6.09 சதவீதம் குறைந்துள்ளது.தற்போது, 150 கோடி மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 2026ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதுள்ள மக்கள் தொகை குறையாமல், அதே அளவு நீடிப்பதற்கு குழந்தை பிறப்பு விகிதம் 2.10 சதவீதமாக இருக்க வேண்டும். ஆனால், குழந்தை பிறப்பு விகிதம் இந்திய அளவில், 1.90 சதவீதமாகவும், தமிழகத்தில், 1.40 சதவீதமாகவும் உள்ளது.தமிழகத்தில் பிறப்பு விகிதம் நான்கு ஆண்டு களாக குறைந்து வருகிறது. தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை பிறப்பு, இறப்பு பதிவு இணைய தளத்தில் உள்ள புள்ளி விபரங்களின்படி, 2020ல், 4 லட்சத்து, 76,054 ஆண்கள், 4 லட்சத்து, 48,171 பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம், 9 லட்சத்து, 24,256 பேர் பிறந்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fax9k0wk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த, 2021ல், மொத்தம், 9 லட்சத்து, 12,869 பேரும், 2022ல், மொத்தம், 9 லட்சத்து, 36,361 பேரும், 2023ல், மொத்தம், 9 லட்சத்து, 2,329 பேரும், 2024ல், மொத்தம் 8 லட்சத்து, 47,668 பேரும் பிறந்துள்ளனர்.கடந்த ஐந்தாண்டுகளில், கொரோனா ஊரடங்கு காரணமாக, 2022ல் மட்டும் -கூடுதலாக பிறப்பு விகிதம் இருந்துள்ளது. மற்ற ஆண்டுகளில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. 2023ஐ ஒப்பிடுகையில், 2024ம் ஆண்டு, 54,661 குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளனர். அதாவது, 6.09 சதவீதம் குழந்தை பிறப்பு குறைந்துள்ளது. இதுமட்டுமின்றி, ஆண்களை விட பெண் குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைவாக உள்ளது.பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'தமிழக அளவில் கு ழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. காரணம், பலரும் தங்கள் பொருளாதார நிலை, கல்விக் கட்டணம், மருத்துவ செலவு உள்ளிட்ட காரணங்களால், ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வதால், குழந்தை பிறப்பு கணிசமாக குறைந்துள்ளது' என்றனர்.தமிழக குழந்தைகள் பிறப்பு பட்டியல்குழந்தைகள் பிறப்புஆண்டு ஆண்கள் பெண்கள் இதரர் மொத்தம்2020 4,76,054 4,48,171 31 9,24,2562021 4,70,043 4,42,797 29 9,12,8692022 4,82,531 4,53,801 29 9,36,3612023 4,65,063 4,37,249 17 9,02,3292024 4,37397 4,10,241 30 8,47,668* குறிப்பு: கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக, 2022ல் பிறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.- நமது நிருபர் -