லஞ்ச புகாரில் சிக்கிய ‘பிட்டர்’ சஸ்பெண்ட்
நாமக்கல்: குடிநீர் இணைப்பை பழுது பார்க்க, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ‘பிட்டர்’ மூர்த்தி, 54, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நாமக்கல் மாநகராட்சியில் பிட்டராக பணிபுரிபவர் மூர்த்தி, . இவர், மாநகராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில், குடிநீர் இணைப்பை பழுது பார்க்க, 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக, கமிஷனர் செல்வபாலாஜிக்கு புகார் சென்றது. விசாரணையில், லஞ்சம் கேட்டது உறுதியானதால், மூர்த்தியை சஸ்பெண்ட் செய்து, கமிஷனர் உத்தரவிட்டார். மேலும், கமிஷனரின் அனுமதி பெறாமல், தலைமையிடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும் மூர்த்திக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.