உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டங்ஸ்ட்ன் விவகாரத்தில் நாடகமாடும் தி.மு.க., அரசு; அண்ணாமலை புகார்

டங்ஸ்ட்ன் விவகாரத்தில் நாடகமாடும் தி.மு.க., அரசு; அண்ணாமலை புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தி.மு.க., அரசை பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ugnw248m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில், ஆரம்பம் முதலே நாடகமாடிக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கலாம் என்று, மத்திய அரசுக்குக் குறிப்பு அனுப்பி, சுரங்க ஒப்பந்தம் வழங்கப்படும் வரையில், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து விட்டு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், தாங்களும் எதிர்ப்பு தெரிவிப்பது போல நாடகமாடியது.சுரங்கம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைப்பதாக மத்திய சுரங்கத் துறை அமைச்சர் அறிவித்து, தமிழக அரசு மேற்கொண்டு டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தங்களைப் பரிசீலிக்கக் கூடாது என்று தெரிவித்த பின்னர், தி.மு.க., அரசு அது குறித்து அரிட்டாப்பட்டி விவசாயிகளுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை என்பது தெளிவாகிறது. தற்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்த முற்படுவது, டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் தி.மு.க.,வுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது.விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலிப்பது தி.மு.க., அரசின் கடமை. அதை விடுத்து, மத்திய அமைச்சர் அறிவிப்பு வெளியிட்ட பிறகும், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக எந்த உறுதியும் அளிக்காமல், நாட்களைக் கடத்திவிட்டு, தற்போது விவசாயிகள் போராட்டத்திற்குக் காரணமாக இருக்கிறது தி.மு.க.உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், விவசாயிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தி.மு.க., அரசை வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

pmsamy
ஜன 08, 2025 09:59

சவுக்கால் அடித்துக்கொண்டு நாடகமா உண்மையா


sankar
ஜன 07, 2025 19:15

கனிமவள கொள்ளைக்காரர்கள், கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்கிற கவலையில் இருக்கிறார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 07, 2025 18:58

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், தாங்களும் எதிர்ப்பு தெரிவிப்பது போல நாடகமாடியது ......... அம்புட்டு அறிவிருந்தா நானு துண்டுச்சீட்டை படிக்க திணறுவேனா ????


நசி
ஜன 07, 2025 18:57

ஏன் டங்ஸ்டன் சுரங்கம் வரகூடாது ஏன் ஸ்டர்லைட் ஆலை இருகககூடாது ஏன் நியுட்ரினோ வரக்கூடாது ..எந்த விதத்தில் டாஸ்மாக் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கியது எந்த விதத்தில் எண்ணற்ற பட்டாசு கொலை சாலைகள் வாழ்வாதாரத்தை பெருக்கியுள்ளது...இதில் மத ஜாதி அரசியலும வெளி நாட்டு சதியும் திராவிடத்துடன் இனைந்துள்ளது எதற்கு அண்ணாமல இதை ஆதரிக்கிறார்.....ஜெயலிதா தைரியமாக கூடங்குளம் நாட்டின் நலம் கருதி செயல்படுத்தலையா ???


SRIRAMA ANU
ஜன 07, 2025 18:53

சமீபகாலமாக தமிழகம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து பல்வேறு முதலீடுகளையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக ஐடி துறையில் வளர்ச்சி ஆனது கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக தொழில்துறையில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகின்றன. எனவே இந்த முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. இந்த நிலையில், தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அது எதில் தெரியுமா? நாட்டிலேயே அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் 2023-24 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.


ஆராவமுதன்,சின்னசேலம்
ஜன 07, 2025 19:44

அண்ணா அறிவாலயம் கொடுத்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதா? அல்லது முரசொலி கொடுத்த ஆய்வறிக்கையா? யோவ் போய்யா அங்கிட்டு கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணிட்டு இருக்க...


என்றும் இந்தியன்
ஜன 07, 2025 17:14

டங்ஸ்டன் சுரங்கம் தாமிரம் வேண்டாம் ன்று போராட்டம் நடத்துபவர்களுக்கு உடனே மின்சாரம் கொடுப்பதை நிறுத்தவும். அவர்கள் வீட்டில் அகல் விளக்கு வெளிச்சத்திற்காக, உரல் உலக்கை அரைப்பதற்காக கல் துணி துவைக்க என்று இருக்கவேண்டும் என்று கட்டளையிடுங்கள். tungsten filament, Copper Wire இது தான் மின்சாரத்தின் அடிப்படை மூலம்


Balachandran Rajamanickam
ஜன 07, 2025 16:59

200+200+200 confirm


V வைகுண்டேஸ்வரன்
ஜன 07, 2025 16:06

எந்த தாதுச் சுரங்கம் என்றாலும், எந்த மாநிலத்தில் என்றாலும், சுரங்கம் தோண்டுவதா , வேண்டாமா என்று முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் தான் இருக்கிறது. மாநில முதல்வர் தோண்டிக்கோங்க என்று சொல்லிவிட்டு, இப்போ வேண்டாம் மக்கள் விரும்பவில்லை என்கிறார். ஆனால் இறுதி முடிவு ஒன்றிய பாஜக விடம் தான் இருக்கிறது. இது தான் நிஜம், உண்மை, சட்டப்படி சரியானதும் கூட. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில்பாஜக வின் நிலை என்ன என்று எ. மலை சொல்ல வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 07, 2025 19:02

மத்தியில் ஆளும் பாஜகவின் தமிழகப்பிரிவின் தலைவர்தான் அண்ணாமலை ..... டங்ஸ்டன் செயல்படுத்தப்படமாட்டாது என்கிற உறுதியைக் கொடுங்கள் என்று சட்டம் ஒழுங்கு குன்றிய அரசு ஒன்றிய அரசைதான் கேட்கவேண்டும் ..... அண்ணாமலை முடிவெடுக்கும் அதிகாரத்தில் இல்லை ... மினிமம் காமன்சென்ஸ் உள்ள யாரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் .....


sankar
ஜன 07, 2025 19:17

சூப்பர் இருநூறு


V வைகுண்டேஸ்வரன்
ஜன 07, 2025 16:04

எந்த தாதுச் சுரங்கம் என்றாலும், எந்த மாநிலத்தில் என்றாலும், சுரங்கம் தோண்டுவதா , வேண்டாமா என்று முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் தான் இருக்கிறது. மாநில முதல்வர் தோண்டிக்கோங்க என்று சொல்லிவிட்டு, இப்போ வேண்டாம் மக்கள் விரும்பவில்லை என்கிறார். ஆனால் இறுதி முடிவு ஒன்றிய பாஜக விடம் தான் இருக்கிறது. இது தான் நிஜம், உண்மை, சட்டப்படி சரியானதும் கூட. ஒரு மாநில முதல்வர் வேண்டாம் என்றதும் நிறுத்தவும், தோண்டுங்கள் என்றதும் தோண்டவும் ஒன்றிய அரசோ, பாஜக வோ, ஸ்டாலின் அரசின் அடிமை அல்ல. டங்ஸ்டன் சுரங்கம் விவகாராத்தில் பாஜக வின் நிலைப்பாடு என்ன? அண்ணா மலை அதைச் சொல்ல வேண்டும்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 07, 2025 16:01

எந்த தாதுச் சுரங்கம் என்றாலும், எந்த மாநிலத்தில் என்றாலும், சுரங்கம் தோண்டுவதா , வேண்டாமா என்று முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் தான் இருக்கிறது. மாநில முதல்வர் தோண்டிக்கோங்க என்று சொல்லிவிட்டு, இப்போ வேண்டாம் மக்கள் விரும்பவில்லை என்கிறார். ஆனால் இறுதி முடிவு ஒன்றிய பாஜக விடம் தான் இருக்கிறது. இது தான் நிஜம், உண்மை, சட்டப்படி சரியானதும் கூட. ஒரு மாநில முதல்வர் வேண்டாம் என்றதும் நிறுத்தவும், தோண்டுங்கள் என்றதும் தோண்டவும் ஒன்றிய அரசோ, பாஜக வோ, ஸ்டாலின் அரசின் அடிமை அல்ல.


முக்கிய வீடியோ