உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களை பலி வாங்கும் திமுக அராஜக அரசியலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது; அண்ணாமலை காட்டம்

மக்களை பலி வாங்கும் திமுக அராஜக அரசியலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது; அண்ணாமலை காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; ஏழை, எளிய மக்களின் உயிர்களை பலி வாங்கும் திமுக அராஜக அரசியலை, தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவின் விவரம்; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qbdybo6p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில், திமுக கட்சி ஆர்ப்பாட்டத்திற்காக, 75 வயது பொன்னம்மாள் என்ற வயது முதிர்ந்த மூதாட்டியை அழைத்து வந்து, கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்து, அவரது உயிரிழப்பிற்கு காரணமான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் அளிக்கிறது. திமுக ஆர்ப்பாட்டத்துக்கு வரவில்லையென்றால், நூறு நாள் வேலைத்திட்டத்திற்கான ஊதியம் தர முடியாது என்று மிரட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து வயது முதியவர்களை வாகனத்தில் அழைத்து வருவது திமுகவினரின் வழக்கம். தனது அரசியல் லாபத்திற்காக அரங்கேற்றும் தேர்தல் நாடகங்களுக்கு, ஏழை எளிய மக்களின் உயிர்களை பலி வாங்கும் திமுகவின் அராஜக அரசியலை, தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது. மனிதாபிமானமே இல்லாமல் முதியவர்களை சிரமப்படுத்தி, ஒரு உயிரிழப்பிற்கு காரணமான அன்னூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kulanthai kannan
டிச 25, 2025 10:57

சபாஷ் அண்ணாமலை, திமுகவின் பித்தலாட்டங்களை உடனுக்குடன் கண்டிப்பதற்காக.


Mariadoss E
டிச 24, 2025 22:11

போதும்பா பிஜேபி யோட நீலிக்கண்ணீரை பார்த்து பார்த்து புளிச்சி போச்சு. கிராமப்புற ஏழைகள் பயன்படும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஒழிக்க பிளான் பண்ணிகிட்டு மக்களை பழிவாங்கிறத பத்தி நீங்க பேசுறது சிரிப்பு தான் வருது. இதுக்கு முட்டு கொடுக்க ஒரு கூட்டம்.......


ராமகிருஷ்ணன்
டிச 25, 2025 05:16

திமுக ஆட்சி மேல் உள்ள வெறுப்பு தான் மக்கள் கூட்டம் வராததற்கு காரணம், அதற்காக மக்களை மிரட்டி, கூட்டத்தை கூட்டி கொல்வது மிக கொடூர செயல். எதிர்கட்சிக்கு கூட்டம் கூடினால் கொலைகள் செய்யும் திமுக அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்


திகழ்ஓவியன்
டிச 24, 2025 20:43

170+23+23+6+6+6+3.. அண்ணாமலைக்கு ரெட் கார்டு எடப்பாடி போட்டு வைத்த கூட்டணி கணக்கு யோசித்த பாஜக இந்த மாதிரி வேண்டும் என்று கசிய விட்டதே நீங்கள் தான் என்று அரசியல் நோக்கர்கள் சொல்லுகிறார்கள்


திகழ்ஓவியன்
டிச 24, 2025 20:22

அண்ணாமலையை எக்காரணம் கொண்டும் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற கூடாது என்பதுதான். அதனால்தான் நேற்று எடப்பாடி உடன் நடந்த ஆலோசனை கூட்டத்திலும், அதற்கு பிறகு நடந்த பாஜக ஆலோசனை கூட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்கின்றனர். எடப்பாடியை முதல்வராக்குவேன் என அண்ணாமலை பேசினாலும், கடந்த காலங்களில் எடப்பாடியை மிகக் கடுமையாக விமர்சித்ததால் அவர் கடும் ஆத்திரரத்தில் இருப்பதாகவும், அதனால் தான் அண்ணாமலைக்கு ரெட் கார்டு போட்டுள்ளதாகவும் சொல்கின்றனர். அண்ணாமலை எண்ணம் நிறைவேற்றி விட்டார் இன்று OPS TTV ADMK உடன் கூட்டணி இல்லை என்று சொல்லவைத்து விட்டார்


முருகன்
டிச 24, 2025 20:22

வெயிலில் தண்ணீர் இன்றி 41 பேர் இறந்ததற்கு வரதா கோபம் இப்போது வருகிறது