உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாடகம் நடத்தும் தி.மு.க., மாநில பிரச்னைகளையும் பேசணும்; அண்ணாமலை காட்டம்

நாடகம் நடத்தும் தி.மு.க., மாநில பிரச்னைகளையும் பேசணும்; அண்ணாமலை காட்டம்

சென்னை: 'தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் என்று தி.மு.க., நாடகம் நடத்துகிறது. கூட்டத்துக்கு வந்துள்ள அண்டை மாநில முதல்வர்களுடன் தமிழக உரிமைகளை பற்றி ஸ்டாலின் பேச வேண்டும்,' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். தி.மு.க., அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.,வினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பனையூரில் தமிழக பா.ஜ., தலைமையில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடந்தது. தமது வீட்டின் முன்னர் நடந்த இந்த போராட்டத்தில் கட்சியினருடன் கருப்புக் கொடியேந்திய அண்ணாமலை தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராடினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y1ctzrqj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது; எதற்காக போராட்டம்இன்று தமிழகம் முழுவதும் யாருக்கும் எந்த பிரச்னை இன்றி பா.ஜ., வினர் கருப்புக்கொடி போராட்டம் நடத்தி உள்ளனர். எதற்காக இந்த போராட்டம் என்ன காரணம். தமிழகத்தை பொறுத்த வரை அண்டை மாநிலங்களுடன் பிரச்னை இருக்கக்கூடிய மாநிலம் நமது தமிழகம்.விவசாயிகள் கேரளாவை பார்த்தோம் என்றால் குறிப்பாக முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்தாமல் தவித்துக் கொண்டு இருக்கிறோம். இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.தேர்தல் அறிக்கை 1984ல் தி.மு.க., தமது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தென்காசி மாவட்ட அணையை சீர்படுத்துவோம் என்று சொல்லி இருந்தனர். அதை செய்யாததால், தென்காசி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி பிரச்னை கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி வந்தபின்னர், திருவனந்தபுரத்தில் இருந்து தென்காசி, கோயமுத்தூர் என எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். கர்நாடகாவை பொறுத்தவரை நீண்டகாலமாக இருக்கும் பிரச்னை காவிரி பிரச்னை. மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கிளம்பி இருக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு மறுப்பு ஏதும் சொல்லவில்லை.தமிழக முதல்வர் இதை எதிர்த்துக் கூட கேள்வி கேட்கவில்லை.மெட்ரோ காரிடார் பல ஆண்டுகளாக கேட்டுக் கொண்டு இருக்கிறோம், ஓசூரின் வளர்ச்சி பெங்களூரை ஒட்டி இருக்க வேண்டும் என்று. அதற்கு பொம்மசந்திரா பெங்களூருவில் இருந்து ஓசூர் வரைக்கும் ஒரு மெட்ரோ கனெக்ஷ்ன், அது சென்னை பெங்களூரு மெட்ரோ காரிடராக வரவேண்டும் என்று சொல்லி வருகிறோம். ஆனால் அதற்கும் கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. 4 முறை பயணம் இப்படி தமிழகத்திற்கு நியாயமாக வரவேண்டிய தண்ணீரில் இருந்து, நியாயமாக இருக்க வேண்டிய பிரச்னையில் இருந்து எந்த ஒரு தீர்வும் இல்லாமல், 4 ஆண்டுகளாக தமிழகத்தின் முதல்வர் உரிமையை முழுவதுமாக கோட்டை விட்டுள்ளார். கேரளாவுக்கு 4 முறை பயணம் செய்த ஸ்டாலின், ஒருமுறை கூட தமிழக பிரச்னையை பேசவில்லை.நாடகம் இன்று (மார்ச் 22) கேரள முதல்வர் விஜயன், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் , தெலுங்கானா முதல்வர் என இவர்களை சென்னையில் அழைத்து பிரச்னையே இல்லாத, இவர்களின் கற்பனைக்காக, தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை என்ற நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். உரிமை அதனால் தமிழக மக்களின் உரிமையை கடந்த 4 ஆண்டுகளாக விட்டுக் கொடுத்து, தங்களுக்கு அரசியல் லாபம் வரவேண்டும் என்பதற்காக கம்யூனிஸ்ட் ஆட்சியுடன் நெருங்கிய தொடர்பு, காங்கிரஸ் ஆட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு, நம்முடைய உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்த முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.விகிதாச்சாரம் இன்றைக்கு நடக்கக்கூடியது வெறும் நாடகம் (தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்) மட்டும்தான். தொகுதி மறு சீரமைப்பில் தமிழகத்துக்கு எந்த பிரச்னையும் வரப்போவது இல்லை. தமிழகம் உள்பட எந்த தென்மாநிலங்கள் என்றாலும் அவர்களின் விகிதாச்சார அடிப்படையில் ஒரு தொகுதி கூட இழக்க போவதில்லை.லோக்சபா தொகுதி எண்ணிக்கை 543 தொகுதிகளில் தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள் இருக்கிறது. 7 .17 சதவீதம் ஆகும். நாளை புதிய லோக்சபாவின் எண்ணிக்கை என்னவாக இருந்தாலும் கூட, அதே 7.17 சதவீதம் தான் இருக்க போகிறது. இவர்களாக இவ்வளவு பிரச்னை இருக்கும் போது, அதை எல்லாம் மறைத்துவிட்டு, தொகுதி மறுசீரமைப்பு நாடகம் ஒன்றை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.ஊழல் தமிழகத்தில் எங்கேயும், படுகொலைகள் நடக்காத ஒருநாளே இல்லை. பாலியல் வன்முறையே நடக்காத ஒரு நகரமே இல்லை. ஊழல் இல்லாத எந்த ஒரு அரசுத்துறையுமே இல்லை. இதை தினமும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இதை எல்லாம் முதல்வர் பேசவில்லை.திட்டங்கள் இன்றைக்கு இன்னொரு விஷயத்தையும் முதல்வருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் சொல்லி வருகின்றனர். தமிழகத்தில் ஜாதி அடிப்படையில் எத்தனை பேர் இருக்கின்றனர் என்ற கணக்கு எடுக்க வேண்டும். அதன்பிறகு தமது திட்டங்களை கொண்டு போய் சேர்க்கிற முயற்சி எடுக்க வேண்டும்.என்ன நியாயம்? இன்று தெலுங்கானாவின் முதல்வர் வந்திருக்கிறார். அவரது மாநிலத்தில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடந்திருக்கிறது. எடுத்த பின்னர் ரிப்போர்ட்டையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். ஆனால் தமிழகத்தின் முதல்வர் என்ன சொல்கிறார். நாங்க எடுக்க வேண்டும் என்று இல்லை, மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்று. அது எப்படி நியாயம்? முதல்வரின் பல பொய்கள் இன்று வெளி வந்திருக்கிறது.முல்லை பெரியாறுதெலுங்கானா முதல்வர் ஜாதிவாரி கணக்கெடுத்து இருக்கிறார். ஆனால் தமிழக முதல்வர் மத்திய அரசு தான் எடுக்கணும் என்கிறார். அதையும் தெலுங்கானா முதல்வரிடம் கற்றுக் கொள்ளுங்கள். இதில் தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசுங்க, பேசாமல் போங்க, ஆனால் தமிழர்களின் உரிமை தொடர்பான முல்லை பெரியாறு அணை, மருத்துவக்கழிவு கொட்டுவது பற்றி பேசுங்க.என்ன பிரச்னை? பிரதமர் மோடி தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாது அணையை கட்ட முடியாது என்று சொல்கிறார்.அப்படி இருக்கும் போது தமிழக முதல்வர் வாயை திறந்து எதிர்ப்பு தெரிவிப்பதில் என்ன பிரச்னை? இதை எல்லாம் முதல்வர் செய்ய வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம்.அரசியல் டிராமாவுக்காக அந்த மீட்டிங் இருந்தாலும் கூட. ஒரு டீ, பஜ்ஜி, பிஸ்கட் சாப்பிட்டு தமிழகத்தின் உரிமையையும் நிலைநாட்டி அந்தந்த முதல்வரிடம் பேசி அனுப்புங்கள் என்று நாங்கள் சொல்கிறோம். மத்திய அரசு இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அண்ணாமலை பதிலளித்தார். அவர் பேசியதாவது; காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு இதில் எங்கேயும் பொறுப்பு இல்லை. 2018ல் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இதை தெளிவாக சொல்லிவிட்டது. தமிழகம், கேரளா, கர்நாடகா இந்த 3 மாநிலங்கள் அனுமதி இல்லாமல் எங்கே நீர் உற்பத்தி செய்து வருகிறதோ, குறிப்பாக கர்நாடகாவில் சொல்லிய பிறகு, டி.கே. சிவகுமார் பேச்சை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.அணை கட்ட முடியாது யார் அனுமதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இனிமேல் அணை கட்ட அனுமதி தேவையில்லை, மேகதாது அணை கட்டியே தீருவேன் என்று டி.கே. சிவகுமார் சொன்னார். ஆனால் மத்திய அரசு அணை கட்ட வேண்டும் என்றால் எல்லா மாநிலத்தையும் கலந்து பேசு என்று கூறியது. யாராவது ஒருவர் அப்ஜெக்ட் செய்தாலும் கூட அணை கட்ட முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்ட பிறகு, அரசியல் பிரச்னையாக கொண்டு செல்லப்பட்ட பின்னர், தமிழக முதல்வர் எதிர்த்து ஒரு குரல் கொடுத்தாரா? எதிர்ப்பு எங்கே? இன்றைக்கு டி.கே. சிவகுமாரை அழைப்பதற்காக இங்கிருந்து பெங்களுருவுக்கு மந்திரியை முதல்வர் அனுப்புகிறார். போன அமைச்சர்கள், 39 எம்.பி.க்கள் இருக்கின்றனர், யாராவது போய் சித்தராமையாவையோ, டி.கே. சிவகுமாரையோ சந்தித்து எதிர்ப்பை பதிவு செய்தார்களா? எங்கேயும் செய்யவில்லை. எல்லா இடத்திலும் உரிமையை விட்டுக் கொடுத்துள்ளனர்.1953, 1973 என பல காலக்கட்டத்தில் பிரச்னை வந்த போது, காமராஜர் முதல் பிரச்னையை தீர்த்தார். 2வது பிரச்னை வந்த போது, எம்.ஜி.ஆர்., தமிழகத்தின் பணத்தை அணையை ரிப்பேர் செய்து கொள்ள கொடுத்தார்.ஆதங்கம்தி.மு.க., தமது தேர்தல் வாக்குறுதியில் 84வது பாயிண்ட் சரி செய்வோம் என்று சொல்லி இருக்கின்றனர். எங்கேயாவது அதை பற்றி பேசினார்களா? ஒரு மாநிலத்தின் முதல்வர் இன்னொரு மாநிலத்துக்கு போய் முதல்வரை சந்தித்தால் என்ன பேசினார்கள் என்பது பற்றி ஊடகங்களுக்கு செய்திக்குறிப்பு கொடுப்பார்கள். செண்பகவள்ளி அணை பற்றி 4 முறை கேரளா சென்ற பிறகும் பேசவில்லை. அதுதான் எங்களின் ஆதங்கம். தி.மு.க., வாயை திறந்து எதிர்ப்பை பதிவு செய்வதில் என்னதான் பிரச்னை? 543 தொகுதிகள் 1971ல் கடைசியாக சென்செஸ் நடந்தது. அதாவது இந்த தொகுதி மறுசீரமைப்பை பொறுத்தவரை. சுதந்திரத்தின் போது மொத்தமாக இருந்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 469. பின்னர் 20 ஆண்டுகளில் 543 ஆக ஏற்றியிருக்கிறோம். எப்படி என்றால், ஒவ்வொரு 10 ஆண்டுகால சென்செஸ்சை வைத்து.நியாயம்இன்றைக்கு நீங்கள் மறுபடியும் 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து கொண்டு சென்றாலும் கூட, தமிழகம் போன்ற மாநிலங்கள் நாம், மக்கள் தொகை கட்டுப்பாட்டை எப்போதோ அடைந்துவிட்டோம். இன்றைக்கு நாம் கேட்பது, மொத்தம் 543 தொகுதிகளில் 7.17 என்றால் 39 தொகுதிகள் அன்றைய காலக்கட்டத்தில் நியாயமாக கிடைத்துள்ளது. பிரதமர் இன்றைக்கு உ.பி. போன்ற மாநிலங்கள் போனால் 28, 30 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி., இருக்கின்றனர். தமிழகத்தில் 18 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி., இருக்கிறார். மக்கள்தொகை அடிப்படையில் இதை கொடுக்க ஆரம்பித்தீர்கள் என்றால் எம்.பி.க்கள் அதிகம் ஆகிவிடும். அதனால் தான் பிரதமர் இதை காங்கிரஸ் கணக்கு மக்கள்தொகை அடிப்படையில் என்று. நாங்கள் அதை செய்யப் போவது இல்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தி உள்ளார்.சரியானது இன்றைக்கு 543ல் 7.17 சதவிதம், நாளைக்கு ஒருவேளை தொகுதிகள் எண்ணிக்கை 800 ஆனாலும் ,அதே 7.17 சதவிதம். உ.பி..க்கு என்ன விகிதாச்சாரமோ அதே விகிதாச்சாரம். எந்த ஒரு மாநிலத்திற்கும் ஏற்றமும் இல்லை, எந்த ஒரு மாநிலத்திற்கு இறக்கமும் இல்லை. எங்களை பொறுத்தவரை இது சரியானதாக இருக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம். தமிழகத்தை பொறுத்தவரை விகிதாச்சார அடிப்படை மட்டுமே நல்லது.காரணம் தவறுமக்கள்தொகை அடிப்படையில் விகிதாச்சாரம் வராத போது, தி.மு.க., சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? 1971ல் இருக்கும் அதே விகிதாச்சாரத்தில் எண்ணிக்கை இருக்கும் என்று சொன்ன பிறகு, தி.மு.க., சொல்லும் அந்த காரணமே தவறுதானே. இதே தி.மு.க., வடக்கில் இருக்கும் இந்தியர்களை எத்தனை முறை தவறாக பேசியிருக்கின்றனர். எனவே வெறும் ஏமாற்று, பித்தலாட்ட வேலையை இந்த தி.மு.க., செய்து அரங்கேற்றம் செய்து கொண்டு இருக்கின்றனர்.கைது உண்டுடாஸ்மாக் ரூ.1000 கோடி விவகாரத்தில் நிச்சயம் கைது நடவடிக்கை இருக்கும். ரெய்டு நடந்தபோது டாக்குமெண்டேஷன் எடுத்துட்டாங்க, இன்பர்மேஷன் எடுக்கிறாங்க. செந்தில்பாலாஜி விவகாரத்தில் ரெய்டு எப்போதோ நடந்தது. ஆனால் கைது ஒரே நாளில் நடந்ததா? எனவே தி.மு.க.,வினர் இதுபோல் பகல்கனவு கண்டுவிட்டு நாம் ஊழல் பண்ணி விட்டோம், தப்பித்துவிட்டோம் என்று யார் நினைத்தாலும் கூட அமலாக்கத்துறை விடக்கூடாது என்பது எங்கள் கோரிக்கை.சம்பந்தம் நிச்சயமாக டாஸ்மாக் ஊழல் இந்தியாவையே உலுக்கக்கூடிய ஊழலாக தமிழகத்தின் அரசியல் சரித்திரத்தையே மாற்றக்கூடிய ஊழலாக இருக்கும் என்பது எங்களின் நம்பிக்கை. கோர்ட்டில் அமலாக்கத்துறையின் அபிடவிட்டில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த 2021க்கு பின்னர் பல எப்.ஐ.ஆர்.,களை அதில் குறிப்பிட்டுள்ளனர். அதையே மறைத்து எங்களுக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை என்று திமுகவினர் சொல்கின்றனர்.ஊழலின் பரிணாமம் தமிழகத்தில் இன்று எல்லோரும் 10, 20 ரூபாய் ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு எக்ஸ்டிரா வாங்குகின்றனர் என்கின்றனர். அப்படி இருக்கும் தி.மு.க.,வினர் எங்களின் போஸ்டர்களை ஒட்டி நாங்கள் எம்.ஆர்.பி., ரேட்டுக்குதான் விற்கிறோம் என்கின்றனர். அதை எங்களுக்கு பெருமையாக கருதுகின்றோம். பா.ஜ., இதை கையில் எடுத்த பிறகு யார் டாஸ்மாக்கிற்கு போனால் எம்.ஆர்.பி., ரேட்டுக்கு கிடைக்கிறது என்று சொன்னால் கூட அதற்கும் பா.ஜ., தான் காரணம். வருகின்ற காலத்தில் இந்த ஊழலின் பரிணாமத்தை நீங்களும் பார்க்கத்தான் போகின்றீர்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

PR Makudeswaran
மார் 23, 2025 09:14

தி மு க வை நம் மக்கள் நம்பும் வரை நம் வாயில் மண்ணு தான். மு க காலத்தில் இருந்து இது தான் நடை முறை. காசுக்காக நம் நலனை குழியில் போடும் கட்சி மு க கட்சி.


sankar
மார் 23, 2025 06:23

டாஸ்மாக் மெகா ஊழலை மறைக்கவே ஸ்டாலின் காற்றில் கம்பு சுற்றுகிறார்


pmnr pmnr
மார் 22, 2025 19:27

நோ குட் அண்ணாமலை


Bala
மார் 22, 2025 16:13

மேகதாது அணைக்கு கர்நாடக துணை முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழக முதல்வருக்கு பயம். நடுக்கம். கேரளா மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் தொடர்ந்து கொண்டு கொட்டுவதை கேள்வி கேட்க துப்பில்லை. திராவிட மாடல் 2026 தேர்தலில் துடைத்து எறியப்படும்


T.sthivinayagam
மார் 22, 2025 15:25

அண்ணாமலை பையாஜீ பாரத்த்தை ஆண்ட தமிழர்கள் பூமி இது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று மக்கள் கூறுகிறார்கள்


Bala
மார் 22, 2025 16:30

அண்ணாமலை என்ற சிங்கத்தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள தகுதியுள்ளவன். ஓங்கோலர்களுக்கு இங்கு வேலையில்லை. திராவிட மாயைக்கும் திராவிட மாடலுக்கும் இடம் குப்பைதொட்டிதான்


PR Makudeswaran
மார் 23, 2025 09:16

அதற்கும் தி மு க வுக்கும் என்ன சம்பந்தம் ?? அதை சொல்லுங்கள் ப்ளீஸ்


Madras Madra
மார் 22, 2025 15:25

காவேரியில் அணை கட்ட அனுமதித்தோம் கச்ச தீவை தாரை வார்த்தோம் இலங்கை தமிழர்களை காட்டி கொடுத்தோம் முல்லை பெரியாறில் விட்டு கொடுத்தோம் ஜல்லிக்கட்டை தடை செய்தோம் மீத்தேன் ஹைட்ரொ கார்போன் அனுமதித்தோம் அவ்வளவு ஏன் ? ஸ்டர்லிட் ஆலையும் கட்ட அனுமதித்தோம் இதெல்லாம் எதற்க்காக ? குடும்ப நலன் கருதி தானே தவிர என் நலம் கருதி ஒரு நாளும் இல்லை இரக்கமற்ற அண்ணாமலை இதை ஏன் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து போராட்ட்டம் நடத்தி எங்களை கலங்க வைக்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இப்படிக்கு திமுக


Mediagoons
மார் 22, 2025 15:10

தமிழகத்தை வஞ்சித்த மத்திய இனவாத மோடிக்கு தெருத்தெருவாக சென்று காவடி தூக்கியதல்லாமல் , அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அண்ணாமலை இப்படியெல்லாம் அழலாமா ?


PR Makudeswaran
மார் 23, 2025 09:18

அண்ணாமலை எங்கே அழுதார் நாம் எதிர்காலத்தில் அழாமல் இருக்க வழி சொல்கிறார்??


Mediagoons
மார் 22, 2025 15:09

தமிழகத்தை வஞ்சித்த கர்நாடக பாஜவுக்கு கர்நாடகாவிற்க்கே சென்று காவடி தூக்கியதல்லாமல் , அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் தேய்த்து கொத்தடிமை வேலை செய்த அண்ணாமலை இப்படியெல்லாம் அழலாமா ?


PR Makudeswaran
மார் 23, 2025 09:21

இப்பவும் என்ன அங்கெ நடக்குது? வஞ்சிக்காமல் ? பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விடாது.


Bala
மார் 22, 2025 14:45

கெட் அவுட் திராவிட மாடல்


S.Martin Manoj
மார் 22, 2025 13:38

ஆருத்ரால 100 கோடி ஆட்டய போட்டது மறந்துறுசா மல,நாங்க மறக்கல மல.இன்னும் வாட்சுக்கு ஒரிஜினல் பில் கொடுக்காம வீட்டுக்கு நண்பர்கள் வாடகை கொடுக்குறாங்க,காய்கறி வாங்கி கொடுக்குறாங்க, அரிசி வாங்கி கொடுக்குறாங்க பீல விட்டுட்டு திரியுற


M R Radha
மார் 22, 2025 15:47

ஒனக்கு 200ரூவா வந்துச்சா? போயி ஓர் குவடெர் அடிச்சிட்டு தூங்கு


S.Martin Manoj
மார் 22, 2025 17:02

கோமியம் குடிச்சிட்டு சாணியை சாப்பிட்டு மல்லாக படுங்க


புதிய வீடியோ