உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடவுள் ராமர் பற்றிய அவதுாறு: வைரமுத்துவுக்கு பா.ஜ., கண்டனம்

கடவுள் ராமர் பற்றிய அவதுாறு: வைரமுத்துவுக்கு பா.ஜ., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சென்னை கம்பன் விழாவில், ஹிந்துக்களின் தெய்வமான ராமரை புத்திசுவாதீனமில்லாதவர் என குறிப்பிட்டு பேசிய பாடலாசிரியர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: சென்னையில் சமீபத்தில் ஆழ்வார் ஆய்வு மய்யம் சார்பில், வைரமுத்துவுக்கு கம்பன் விருது அளிக்கப்பட்டது. அப்போது பேசிய வைரமுத்து, ஹிந்து கடவுளான ராமர் குறித்து தவறான கருத்துகளை கூறியுள்ளார். 'திகைத்தனை போலும் செய்கை' என கம்பரின் வரிகளை குறிப்பிட்டு பேசிய வைரமுத்து, 'திகைத்தல் என்ற வார்த்தைக்கு, புத்திசுவாதீனமற்றவர் என்று பொருள். 'அதனால், புத்திசுவாதீனமின்றி வாலியை கொன்று விட்டார் ராமர் என கூறி, ராமன் என்ற குற்றவாளியை காப்பாற்ற கம்பர் முயன்றிருக்கிறார். இந்திய தண்டனைவியல் சட்டம் 84ன்படி, புத்திசுவாதீனம் அற்றவர் செய்கிற குற்றத்துக்கு தண்டனை இல்லை' என்று கூறியுள்ளார். திகைத்தல் என்ற சொல்லுக்கு புத்திசுவாதீனம் அற்றவர் என்ற பொருளை, புத்தியுள்ள யாரும் சொல்ல மாட்டார்கள். திகைத்தல் என்றால், வியப்படைதல், தடுமாறுதல், மயங்குதல் என்றே பொருள். வேண்டு மென்றே ராமரை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற வன்மத்தோடு வைரமுத்து அவதுாறாக பேசியுள்ளார். திகைத்தல் என்ற சொல்லுக்குக்கூட பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என சிலர் அழைப்பது திகைப்புக்குரியது. சோழ மாமன்னர்களின் முன்னோர் ராமர் என சோழர் கால செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அதனால், ராமரை திட்டமிட்டு விமர்சித்த வைரமுத்து, தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். இவ்வாறு அஸ்வத்தாமன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

கா. ரவிச்சந்திரன், புதுக்கோட்டை
ஆக 10, 2025 21:04

இவர் சார்ந்திருக்கும் கட்சித் தலைவர் திரு.ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் இந்த மழை காலத்தில் கூட இங்கு அலை கடல் வெள்ளமென திரண்டிருக்கும் பெருந் திரளான மக்களைக் கண்டு நான் திகைத்து நிற்கிறேன் என பேசினால் அதன் அர்த்தம் ஆச்சரியமா? இல்லை புத்தி சுவாதீனமா? இதை திரு.ஸ்டாலினிடமே கேட்டு வைரமுத்து தெரிந்து கொள்ளட்டும்.


PT Sridharan
ஆக 10, 2025 18:52

வயிற்றுப் பிழைப்புக்காக....சேராத இடம் சேர்ந்து....சில சமுதாயத்தை தூக்கிப் பிடிக்க வேண்டிய நிர்பந்தத்தில்.....சிக்கிக் கொண்டுள்ள இந்த நபரைப் போன்றவர்கள்.....சாதனத்தை பாடுவது ஒன்றும் புதிதல்ல....யார் வேண்டுமானாலும் யாரை எதிர்த்தும் போட்டியிடலாம் என்பது ஜனநாயகத்தில் உரிமை..... பிரபலமான தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டால் தற்காலிக சலுகைகள் அனுபவிக்கலாம்... செய்திகளில் பெயரும் புகைப்படமும் வரும் ......அது போலத்தான்....இத்தகு ஈனர்களின் செயல்பாடு.....ஸ்ரீராமரின் காலம் எங்கே....இந்த அற்பப் பதர் கூறும் சட்ட நிகழ்வுகள் எங்கே....அடிமுடி காண முடியாத அண்ணாமலையார் என்னுமா போலே.....ஆதி அந்தம் அற்ற சாதனத்தை தொடுவதன் மூலம் தொட்டவன் தான் பயன் அடைகிறான். சானாதனம் மேன் மேலும் பொலிவுடன் வளர்து கொண்டுதான் இருக்கிறது. இறைவன் மிகப் பெரியவன்......இத்தகு ஜென்மங்களைப் படைத்தவனும் அவனே. இடையில் ஒட்டிய தூசு போல தட்டி விட்டு நல்வழியில் செல்வோம். we can be proud , that such lunatic persons have also read in total our great epics including Ramayana....Thanks to our Lord supreme. to that extent jaisriram....jaihind


உண்மை கசக்கும்
ஆக 10, 2025 17:10

ஆமாம். மனைவி பொன்மணி எங்கே இப்போது? மிக பெரிய ரகசியம்.


suresh p
ஆக 10, 2025 16:48

பெரிய ப்ரொட்டெஸ்ட்ஸ் to be ஆர்கனிஸ்ட் அகைன்ஸ்ட் ஹிம் நேஅர் ஹிஸ் House


M Ramachandran
ஆக 10, 2025 13:58

இந்த குண நலன்கள் இருப்பதால் பகுத்தறிவு பாசறைக்கு ஒத்து போவுது. இவர்கள் முன்னவர்கள் தனி மனித ஒழுக்கம் கேள்வி குறி அதனால் அந்த பாதையில் பயணித்தல் இவருக்கு மிக பிடித்திருக்கிறது


M Ramachandran
ஆக 10, 2025 13:55

சினிமா பாடலாசிரியர் கண்ணதாசன் இப்படி இருந்து விட்டவர் தான். அனால் உண்மையை அறிந்து திராவிட மாயை மற்றும் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் எழுதினார். இவர் கருணாநிதிக்கு ஜால்றா தட்டி பிழைப்பு நடத்தினார். இப்பொழுது ஸ்டாலினை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார்.


ManiK
ஆக 10, 2025 13:52

தமிழ் அறிவற்ற ஒரு திமிர்பிடித்த தற்குறி ஆளை, இந்த திமுக கும்பல் சமூக பரிவினையை ஏற்படுத்த பயன்படுத்துகிறது. நம்மை நல்வழியில் நடத்தும் தெய்வங்களான ஆண்டாள், முருகன்,ராமர் எல்லாரையும் இழிவுபடுத்தியாச்சு. இன்னும் மேடையில ஏறி உலறுகிறார்.


SASIKUMAR V K
ஆக 10, 2025 13:35

போலி வாக்காளர்களை வைத்து பிழைப்பு நடத்தும் உங்களை பாராளுமன்ற எதிர் கட்சி தலைவர் திரு ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு உங்களுக்கும்,உங்கள் கைப்பாவை தேர்தல் ஆணையத்திற்கும் பதில் கூற வக்கில்லை. இவ்வளவு பெரிய மோசடியை மறைக்க எதாவது ஒரு துப்பில்லாத சின்ன விஷயத்தைக் கொண்டு ஊரை ஏமாத்த பாக்கிறார். மக்கள் நம்ப மாட்டார்கள்.


Sridhar
ஆக 10, 2025 15:48

போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்குவதற்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் செய்ய முற்படும்போது அதை எதிர்த்த ஆள் தானே இந்த ராகுல் ? அவர் பெங்களூரில் இருப்பதாக கூறிய அணைத்து விஷயங்களும் ரே பரேலியிலும் இருக்கிறது. அப்போ இவர் ஜெயிச்சதும் பிராடா கோபால்? சாரி சசிகுமார்?


sridhar
ஆக 10, 2025 17:02

சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் உளறாதே , உன் கருத்தை குப்பையில் போடு.


Barakat Ali
ஆக 10, 2025 13:30

இவரே ஒரு வழக்கறிஞர்தானே???? வைரமுத்து மீது வழக்குத் தொடரலாமே??? சனாதனத்தை கொசுவைப்போல ஒழிப்போம் என்றும், கிறிஸ்தவனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்றும் சொன்னவர் மீது நீதிமன்றங்கள் பாசம் காட்டின..... அதுதான் அஸ்வத்தாமன் வைரமுத்து மீது வழக்குப்போடாமல் விட்டதற்குக் காரணமா ????


ஆரூர் ரங்
ஆக 10, 2025 12:47

இந்த ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையம் நடத்துவது திமுக சாராயக் கம்பெனி முதலாளி ஜெகத்ரட்சகன். இழிவு படுத்தும் திட்டம் பலமாக தெரிகிறது.


திகழ்ஓவியன்
ஆக 10, 2025 13:09

கடவுளை வாங்குகிறவர்களால் பிரச்சனை இல்லை கடவுள வெச்சி பிழைக்கும் இவர் போன்றவர்கள் தான் பிரச்சனை


புதிய வீடியோ