உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனியும் முதல்வர் மூடி மறைப்பது நல்லதுக்கில்லை; எச்சரிக்கும் அண்ணாமலை

இனியும் முதல்வர் மூடி மறைப்பது நல்லதுக்கில்லை; எச்சரிக்கும் அண்ணாமலை

சென்னை: 'தி.மு.க., அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. இனியும் முதல்வர் இதனை மூடி மறைக்க முயன்றால், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித உறுதியும் இல்லை,' என்று பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sazh1rgx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது அறிக்கை; ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தனியாக வசித்து வருபவர்களைக் குறிவைத்து, தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 2023ம் ஆண்டும், பல்லடம் பகுதியில், ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.அனைத்துக் கொலைகளுமே, சுமார் 50 கி.மீ. சுற்றளவில்தான் நடைபெறுகின்றன. ஆனால், இதுவரை ஒரு குற்றவாளி கூடக் கைது செய்யப்படவில்லை. தமிழகக் காவல்துறை செயலிழந்து போய்விட்டதா என்ன? பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில குற்றங்கள் மட்டுமே நடைபெறுகின்றன என்று சட்டமன்றத்தில் சாதாரணமாகக் கூறுகிறார். ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடப்பதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமா? தி.மு.க., அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. இந்த ஒட்டு மொத்த வழக்குகளையும் சி.பி.ஐ.,க்கு மாற்ற ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். இனியும் முதல்வர் இதனை மூடி மறைக்க முயல்வாரேயானால், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித உறுதியும் இல்லை என்பதுதான் பொருள், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராக்கியப்பன், பாக்கியம் ஆகியோரை கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு, 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகத்தில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த நவம்பர் 28ம் தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நடந்து 150 நாள்களுக்கு மேலாகியும் இதுவரை துப்பு துலங்கவில்லை.அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை மாற்றி மக்களிடம் நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். இதை உணர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

M.Sam
மே 02, 2025 19:34

முதல்ல நீங்க ஆருத்ரா கோல்டு ஊழலை பற்றி வாயை திறங்க பார்க்கலாம்.உங்க வாய் சவடால் எல்லாம் ஓய்ந்து போயாச்சு .


Ramesh Sargam
மே 02, 2025 18:58

இனியும் முதல்வர் மூடி மறைப்பது நல்லதுக்கில்லை. ஆம், முதல்வர் தன் தலையில் அணிந்திருக்கும் விக்கை கழட்டி, தன்னுடைய உண்மையான வழுக்கை தலையை காண்பிக்கவேண்டும். விக் அணிந்து தான் இன்னும் ஒரு வாலிபன் என்று கூறுவது சரியல்ல.


ramesh
மே 02, 2025 17:03

உங்களால் காஷ்மீரில் 26 பேர் படுகொலையை தடுக்கமுடியவில்லை .படுகொலை நடந்து 10 நாட்களுக்கும் மேல் ஆகி விட்டது . பயங்கரவாதிகளை வேரோடு அழிப்போம் என்று வாய் போர் மட்டும் தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள் .குறைந்த பட்ச நடவடிக்கையாக தீவிர வாத முகாம் கள் மீது கூட தாக்குதல் நடத்தவில்லை . அப்படி இருக்கும்போது எப்படி உங்கள் ஆட்சியில் பாகிஸ்தான் மீது பதிலடி கொடுக்கவில்லை என்று பொது மக்கள் நினைக்கிறார்கள் . இதுவும் நல்லதுக்கு இல்லை அண்ணாமலை


krishna
மே 02, 2025 16:59

ANNAMALAI SIR IDELLAM SEVIDAN KAADHIL OODHIYA SANGU POLA.VILAI PONA RED LIGHT OODAGANGAL ADMK AATCHIYIL ONNUM ILLADHA PRACHNAIKKU VAANATHUKKUM BHOOMIKKUM KUDITHU KADHARINAR.IPPO THURU PIDITHU IRUMBU KARAM VEESI ERICADHAI PORUKKI KONDU COMAVIL ULLANAR.


thehindu
மே 02, 2025 16:55

பித்தலாட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே வெளிச்சத்துக்கு வந்துவிட்டது . காஸ்மீர் தாக்குதலும் மாநிலம் உழுவதும் 48 சுற்றுலா தளங்களை மூடியபோதும் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்துவிட்டது இனியும் இப்படி ஒரு பொருமல், வசனம், தனக்குத்தானே சவுக்கடி வேண்டியுள்ளது


தமிழ்வேள்
மே 02, 2025 16:24

இந்த மாதிரி கொலை கொள்ளைகளில் ஈடுபடுவதே திமுக உப்பிக்கள் என்பதால் ,குறைந்த பட்சம் மவுனம் காக்கவேண்டிய கட்டாயத்தில் திரு .சுடாலினார் வேறு வழியின்றி இருக்கிறார் -என்பதே உண்மை .


Kasimani Baskaran
மே 02, 2025 16:23

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா வரும் என்பது பழமொழி. அதே போல அரை நூற்றாண்டாக அடி மட்டத்தில் இருப்போரது கல்வியை நாசம் செய்து பணத்துக்கு வாக்குரிமையை வாங்கக்கூடிய வகையில் வைத்திருந்தால் ஆயிரம் ஆண்டுகள் ஆனால் கூட தீம்க்காதான் ஜெயிக்கும். அண்ணாமலை போன்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியை ஒப்பீடு செய்ய தீம்க்காவில் ஒருவனும் இல்லை - ஆனால் ஊரை அடித்து உலையில் போட்டு பல்லாயிரம் கோடிகளை வைத்து இருக்கும் திராவிட மன்னர் குடும்பம் உயர்ந்தது என்று உருட்ட பாமர உடன்பிறப்புக்கள் இருக்கிறார்கள்.


thehindu
மே 02, 2025 16:13

மோடிக்காக மொக்கை போடும் அண்ணாமலை. ஒரு IPS அதிகாரிக்கான அணைத்து அம்சங்களையும் குழிதோண்டி புதைத்து விட்டு இப்படி ஒரு கொத்தடிமை, ரவுடி வேலையை வீர்யர்களைப் போல் செய்யவேண்டியுள்ளது . அனைத்தும் பதவிக்காக


angbu ganesh
மே 02, 2025 16:37

நீ இந்துவா தேச துரோகி


Kumar Kumzi
மே 02, 2025 16:43

ஹிந்து பெயரில் பதுங்கியிருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி


M R Radha
மே 02, 2025 18:06

நீ 200 ரூவா வந்தேரிக் கூட்டம்


vivek
மே 02, 2025 21:40

hindu பெயரில் நீ ஒரு ஈனபிறவி


Rengaraj
மே 02, 2025 15:08

திமுக காரன் கொடுக்கிற காசை வாங்கிட்டு வோட்டு போட்டாச்சு. முப்பத்து ஒன்பது எம்பிக்களை கொடுத்துவிட்டு இப்போ லபோதிபோ ன்னு அடிச்சிக்கிறதுல ஒரு லாபமும் கிடையாது. சட்டம் ஒழுங்கு இருக்கிற இந்த லட்சணத்துல அடுத்த எலெக்ஷன்ல இருநூறுக்கு அதிகமாக ஜெயிக்கணுமாம் . அண்ணாமலை மட்டுமே பேசுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. இங்கு இருக்கும் மக்கள் கொறைஞ்சபட்சம் ஒரு ஐம்பது காசு கார்டுல மோடிக்கு கடிதம் எழுதி போட்டா அவர் எதுவாச்சும் செய்வார்.


sundarsvpr
மே 02, 2025 14:42

அரசு அலுவலங்களில் திறமையான நிர்வாகத்திற்கும் ஊழல் இல்லாமல் தடுத்திட மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊர் மாற்றம் சீட் மாற்றம் செய்வார்கள். இப்போது இந்த விதி கடைபிடிப்பதாக தெரியவில்லை. காரணம் மாற்றம் செய்திட அதிகாரம் உள்ளவரே தன பதவியில் பல ஆண்டுகள் இருப்பார். அரசு அமைச்சர்களும் சம்பளம் பெறும் அரசு அலுவலர். இவர்கள் பணி மாற்றங்கள் நடைபெறுவதில்லை. உதாரணத்திற்கு அறநிலை துறை அமைச்சரை எடுத்துக்கொள்ளுங்கள் இவர் எத்தனை ஆண்டுகளாக உள்ளார். தலைமை அமைச்சர்தான் அறிவார்.


முக்கிய வீடியோ