உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநிலங்களே இருக்க கூடாது என பா.ஜ., அரசு செயல்படுகிறது: முதல்வர் ஸ்டாலின்

மாநிலங்களே இருக்க கூடாது என பா.ஜ., அரசு செயல்படுகிறது: முதல்வர் ஸ்டாலின்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த அரசு விழாவில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும்

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக மீனவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை இலங்கை கடற்படை தாக்குதல். இதனை தொடர்ந்து கண்டிக்கிறோம். போராட்டம் நடத்துறோம். ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, நம் மீனவர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவை மீட்பதுதான் சரியான தீர்வாக அமையும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். இதை வைத்து இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஒரு கோரிக்கை வைத்திருக்க வேண்டும்; அதை செய்யக் கூட பா.ஜ., அரசு மறுக்கிறது. இலங்கை சென்ற பிரதமர் மோடியும் இதை வலியுறுத்த மறுக்கிறார். தமிழக மீனவர்கள் என்றால் மட்டும் அவர்களுக்கு இளக்காரமாக போய்விட்டது. நாம் இந்தியர்கள் இல்லையா. தமிழர்கள் என்றாலே பா.ஜ அரசுக்கு ஏன் கசக்கிறது. ஜி.எஸ்.டி.,யால் நிதி உரிமை போய்விட்டது. நிதிப் பகிர்விலும் ஓரவஞ்சனை. சிறப்புத் திட்டம் எதையும் அறிவிக்க மாட்டார்கள். பள்ளிக் கல்விக்கான நிதியை தரமாட்டார்கள். பிரதமர் பெயரில் இருக்கின்ற மத்திய அரசு திட்டங்களுக்கும் நாம் தான் படியளக்க வேண்டும். இதெல்லாம் போதாது என்று நீட், தேசிய கல்விக் கொள்கை என்று கல்வி வளர்ச்சிக்கும் தடை, கீழடி அறிக்கைக்கு தடை, எல்லாவற்றிற்கும் மேல் தொகுதி மறுவரையறை, இப்படி தமிழகத்துக்கு வஞ்சகம் செய்வதையே மத்திய அரசு வழக்கமாக செய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை மூன்று முறை பேரிடர் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் வராத, நிதி தராத மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துகளுக்கெல்லாம் உடனே விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ., கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறது என்றால், தமிழக மக்கள் மீது இருக்கின்ற அக்கறையால் கிடையாது. அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. இதில் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா,இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா என்று பார்க்கின்றனர். மாநில நலன்களை புறக்கணித்து, மாநில உரிமைகளை பறித்து, இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மாநிலங்களே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு கூட்டத்திற்கு கூட்டம், மேடைக்கு மேடை, தெருவுக்கு தெரு சென்று கூட்டணிக்கு ஆள் சேர்ப்பதற்கான அசைன்மென்ட்டை பா.ஜ., வழங்கி உள்ளது. அவரோ மைக் கிடைத்தால் போதும் என்று தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல திட்டிக் கொண்டிருக்கிறார். தமிழக மக்களின் மேல் உண்மையாக அக்கறை கொண்ட யாரும் பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு சேர மாட்டார்கள். அதிலும், மூன்றாவது முறை மக்களின் ஆதரவு குறைந்து ஒரு சிலரின் ஆதரவோடு ஆட்சி அமைத்த பிறகு, ஆர்.எஸ்.எஸ்., பாதையில் வேகமாக நடைபோட ஆரம்பித்திருக்கிறது மத்திய பா.ஜ., அரசு. இவ்வாறு முதல்வர் பேசினார்.

மயங்கி விழுந்த போலீஸ்காரர்

ராமநாதபுரத்தில் முதல்வரின் வருகையை முன்னிட்டு துாத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பாதுகாப்பு பணியில் மட்டும் 1,500 போலீசார் ஈடுபட்டனர். விழா பகுதியில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சரவணக்குமார், 30, என்ற போலீஸ்காரர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். காலை 10:30 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சரவணக்குமார் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்து ஆம்புலன்சில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

VENKATASUBRAMANIAN
அக் 18, 2025 08:01

மொழி சாதி பிரவினை வைத்து எத்தனை காலம்தான் ஏமாற்று வீர்கள். இதுதான் திராவிட மாடல் போலும்


Matt P
அக் 08, 2025 13:06

தமிழர்கள் என்றாலே பா.ஜ அரசுக்கு ஏன் கசக்கிறது? அப்படி எல்லாம் இருப்பதாக தெரியலை. திமுக என்றாலே தமிழர்களுக்கு கசக்கிறது என்ற நிலை ஆகி விட்டது.


Matt P
அக் 08, 2025 12:57

நிதி தராத மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார்...நம்ம மாநிலத்துக்கு மத்திய அமைச்சர் வருகிறாரென்றால் நாம் தான் மகிழ்ச்சிச்சி அடையணும் உண்மை கண்டறிய முயற்சிக்கிறார்கள் என்கிறபோது உங்களுக்கு ஏன் நடுங்குகிறது? மாநிலங்களே இல்லாமலிருந்தால் எப்படி கொள்ளையடிக்க முடியும்? என்ற உங்கள் வாதம் நியாயமானது தான். முடிஞ்சா மத்திய அமைச்சரவையில் ... வழி உண்டா என்று பாருங்க.


V Venkatachalam
அக் 04, 2025 20:14

மத்திய அரசை மிரட்ட கட்டு மரம் எப்பவுமே கையில ஒண்ணு வச்சிருக்கும் . அதுக்கு பேரு டெஸோ.மத்திய அரசை மிரட்ட நினக்குறப்ப டெஸோ மீட்டிங் போடுவாரு. மத்திய அரசு தன்னோட நிலைப்பாட்டுக்கு வந்த பிறகு அதை தூக்கி ஓரம் கட்டிடுவாரு. அது மாதிரி சாராய யாவாரியும் பண்ணி பாக்கலாம்.


SIVA
அக் 04, 2025 15:04

GST வரியில் 50% நேரடியாக வரி வசூலிக்கும் மாநிலத்திற்கு செல்கின்றது , மீதி உள்ள 50% இல் 20% முதல் 30% வரை மத்திய அரசு திட்டம் மூலம் மாநில மக்களுக்கு கிடைக்கின்றது , GST வரி கொடுமையானது என்றால் மாநில அரசு மக்களிடம் உள்ள GST வரி பில் களை மாநில அரசிடம் காண்பித்து அவர்களின் வங்கி கணக்கிற்கேய் அந்த GST இல் கொள்ளையடித்த வரியை மக்களிடமே திரும்ப கொடுத்து மக்களை காப்பாற்றலாம் , மாநில அரசு ஏன் GST கொள்ளை வரியில் ஆட்சி நடத்துகின்றது ....


SIVA
அக் 04, 2025 14:53

பாபர் மசூதி இடிப்பிக்கு பின் , பிஜேபி உடன் கூட்டணி , குஜராத் கலவரம் நடந்த போது பிஜேபி உடன் கூட்டணி ஆட்சி இது தான் இவரக்ளின் மதசார்பின்மை , மணிப்பூர் கலவரத்தில் ராக்கெட் லாஞ்சர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது , ராக்கெட் லஞ்சர் ஒன்று ஒரு நாடு ராணுவத்திடம் இருக்கும் , இல்லை ராணுவ பலம் உள்ள தீவீரவாதிகளிடம் இருக்கும் அங்கு அந்த அளவிற்கு அந்நிய சக்திகள் உள்ளேய புகுந்து உள்ளனர் ....


சிந்தனை
அக் 04, 2025 14:53

ஜவஹர்லால் நேரு மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கும் வரை நாடு நல்லா தான் இருந்தது அதற்கு பிறகு தான் மொழி அடிப்படையில் ஒரே சண்டை சச்சரவு குழப்பம்


Chandradas Appavoo
அக் 04, 2025 14:45

இது மத்திய அரசுக்கு எதிரான அவதூறு இல்லையா.


SIVA
அக் 04, 2025 14:39

எல்லை தாண்டி தமிழர்கள் மீன் பிடித்தபோது அவர்களை பேராசைக்காரர்கள் என்று இலங்கை காரன் கூட விமரிசனம் செய்யவில்லை அப்படி விமர்ச்சனம் செய்த்தது கட்டுமரம் ..., பிஜேபி ஆட்சிக்கு 800 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டார்கள் , பிஜேபி ஆட்சிக்கு பின்பு கொல்லபவர்களின் எண்ணிக்கை பத்து வரை இருக்கலாம் ...


SIVA
அக் 04, 2025 14:31

கட்ச தீவு இலங்கையிடம் கொடுக்கப்பட்டபோது மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது தீயமூக நீட் சட்டம் GST சட்டம் கொண்டு வரப்பட்ட போது , மாநிலம் மற்றும் மத்தியில் ஆட்சியில் இருந்தது தீயமூக , இவர்களின் அல்லக்கை காங்கிரஸ் தீயமூக கூட்டணி ஆட்சியில் தான் இரண்டு லட்சம் தமிழ் குடும்பங்களும் , தமிழக மீனவர்களும் கொல்லப்பட்டனர் .... தமிழனுக்கு எங்காவது கெடுதல் நடந்தால் அதில் கட்டாயம் தீயமூகவின் பங்கு கண்டிப்பாக இருக்கும் ...


புதிய வீடியோ