உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேட்ச் ஒர்க் செய்யும் திமுக அரசை மக்கள் மன்னித்து விடுவார்களா: நயினார் நாகேந்திரன் கேள்வி

பேட்ச் ஒர்க் செய்யும் திமுக அரசை மக்கள் மன்னித்து விடுவார்களா: நயினார் நாகேந்திரன் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேர்தல் நெருங்கும் சமயத்தில் கவர்ச்சிகரமாகப் பெயர்களை மாற்றி “பேச் ஒர்க்” செய்யும் திமுக அரசை, மக்கள் அத்தனை எளிதாக மன்னித்துவிடுவார்களா? என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை; ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் ஸ்டாலின்?தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் இல்லை. முறையான லேப் வசதிகளும் மருந்துகளும் கிடைப்பதில்லை. சிறு மழை பெய்தாலும் மேற்கூரை ஒழுகுகிறது நோயாளிகளை வெள்ளம் சூழ்கிறது. சில மருத்துவமனைகளில் தெரு நாய்கள் சாவகாசமாக சுற்றித் திரிகின்றன. டார்ச் வெளிச்சத்தில் வைத்தியம் பார்க்கப்படுகிறது. மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். தரமற்ற சிகிச்சைகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று கேட்டால், நோயாளிகளை இனி “மருத்துவப் பயனாளிகள்” என அழையுங்கள் என்று அரசாணை வெளியிட்டு தனது வழக்கமான மடைமாற்று அரசியலைக் கையிலெடுத்துள்ளது இந்த திமுக அரசு. இதெல்லாம் என்ன பிழைப்பு?ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அரசின் அனைத்துத் துறைகளையும் அங்குலம் அங்குலமாக சிதைத்து சீரழித்துவிட்டு, தேர்தல் நெருங்கும் சமயத்தில் கவர்ச்சிகரமாகப் பெயர்களை மாற்றி “பேச் ஒர்க்” செய்யும் உங்களை மக்கள் அத்தனை எளிதாக மன்னித்துவிடுவார்களா?, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Vasan
அக் 08, 2025 23:06

இப்படியே போனால் நாம் அனைவரும் "மன மருத்துவ பயனாளிகள்" ஆகி விடுவோம்.


T.sthivinayagam
அக் 08, 2025 21:33

தவேகாவோ பாதிக்கப்பட்ட மக்களோ சிபிஐ விசாரணை கேளாத போது பாஜக ஏன் அவசரப்பட வேண்டும்


Svs Yaadum oore
அக் 08, 2025 20:33

காஞ்சியில் தகர கொட்டகை வீட்டில் செயல்பட்ட ஸ்ரீசன் பார்மா என்ற என்ற இருமல் மருந்து நிறுவனம் .. இவர்கள் தயாரித்த மருந்தை சாப்பிட்டு மத்திய பிரதேசத்தில் 20 குழந்தைகள் உயிரிழப்பு..இந்த நிறுவனத்தில் 364 விதிமுறை மீறல்கள் உள்ளதாக அறிக்கை .....இத்தனை ஆண்டுகளாக இவ்வளவு அசுத்த நாற்றம் அடிக்கும் வீட்டில் எப்படி இந்த நிறுவனம் செயல்பட விடியல் அனுமதித்தது ??.....வடக்கன் மாநிலம் மொத்தமும் இந்த மருந்துக்கு தடை ..இந்த நிறுவனத்தின் உரிமையாளரை தேடி மத்திய பிரதேச போலீஸ் சென்னை வருகை.....படு கேவல லஞ்ச ஊழல் விடியல் ஆட்சி ....வடக்கன் படிக்காதவன் ......விடியல் தமிழ் நாட்டை படித்து முன்னேறிய மாநிலமாக மாற்றியுள்ளது ...விடியல் இப்பொது பாலஸ்தீன காசா பிரச்சனையில் ரொம்ப முனைப்பு


ஆரூர் ரங்
அக் 08, 2025 20:02

கண்ணே தெரியாதவருக்கு கண்ணப்பன் ன்னு பேரு மாற்றினா கண்ணு தெரிய ஆரம்பிக்கும்.அதுபோல் காது கேட்காதவருக்கு சவுண்டப்பன் கால் விளங்கலன்னா நடராஜன் இப்படியெல்லாம் பெயர மாற்றினா போதும்.ட்ரீட்மெண்ட்டே தேவையில்ல. விடியலின் கண்டுபிடிப்பு.


Mario
அக் 08, 2025 19:57

பேட்ச் ஒர்க் செய்யும் பிஜேபி அரசை மக்கள் மன்னித்து விடுவார்களா முதலில் சொல்லுங்கள்.


முக்கிய வீடியோ