உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரத்தம் உறிஞ்சிய அட்டைகள் சசிகலா, ஓபிஎஸ்: ஜெயக்குமார்

ரத்தம் உறிஞ்சிய அட்டைகள் சசிகலா, ஓபிஎஸ்: ஜெயக்குமார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் தொண்டர்களின் ரத்தம் உறிஞ்சிய அட்டைகள்'' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mv04ehoo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சேலத்தில் உள்ள இ.பி.எஸ் இல்லத்தில் அதிமுக.,வை ஒருங்கிணைக்க 6 முன்னாள் அமைச்சர்கள் 2 நாட்களாக ஆலோசித்ததாக தகவல் வெளியானது. இது பற்றி செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் தொண்டர்களின் ரத்தம் உறிஞ்சிய அட்டைகள். அவர்களை கட்சிக்குள் ஒருங்கிணைக்க இபிஎஸ் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பு என்ற மாயையை திரைக்கதை எழுதி, வசனமும் சேர்த்து யாரோ சிலர் பரப்புகின்றனர். ஓபிஎஸ்.,-ன் ஆரம்பகால அரசியல் வாழ்க்கை என்ன? என்னையும், இ.பி.எஸ்.,சையும் ஜெயலலிதா அடையாளம் காட்டினார். ஆனால் ஓபிஎஸ்.,சை தினகரன் அடையாளம் காட்டினார். கோயிலாக பார்க்கப்படும் ஒரு கட்சி அலுவலகத்தை தாக்கி உடைக்கலாமா? ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேடும் முயற்சியில் ஓபிஎஸ் இருக்கிறார். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Ms Mahadevan Mahadevan
ஜூலை 12, 2024 11:37

மொத்தத்தில் எவனும் அதிமுக நல்லா இருக்கணும் என்று எண்ணவில்லை தன் நல்லா இருத்தா போதும் என்று உள்ளனர்


Durai Kuppusami
ஜூலை 12, 2024 08:35

நீயெல்லாம் இருக்கும் வரை கட்சி உருப்படாது கட்சி கட்டுப்பாடு உனக்கு இல்லையா....


Rajasekar Jayaraman
ஜூலை 12, 2024 08:03

அரசியல் வாதிகளுக்கு அதுவும் திராவிட கூட்டதுக்கு ரத்தம் இருக்கிறதா.


Gowtham
ஜூலை 11, 2024 20:07

அந்த அட்டை காலடியில் விழுந்தது உருண்டது நியபகம் இருக்கட்டும்


Anand
ஜூலை 11, 2024 19:44

ஜெயலலிதா அம்மாவை ஏமாற்ற நினைத்த நபர் ஜெயக்குமார்


தனா
ஜூலை 11, 2024 19:33

அந்த அட்டை காலில் விழுந்து முதல்வரானவர் எங்க தலிவர்


Senthilvel G
ஜூலை 11, 2024 19:28

அம்மா இறந்த போது எடப்பாடி எங்க நின்றார். உம்மையும் ஈபீஸ் ரெண்டு பேரையும் எங்கே வசிருந்தாங்கன்னு தொண்டனாகிய எங்களுக்கு தெரியும். அம்மா நல்லா இருக்கும்போது நீங்க சி.ம். ஆக ஆசைப்பட்டு சபாநாயகர் பதவியை விட்டு துறந்ததை மறந்துட்டீங்களா.


பேசும் தமிழன்
ஜூலை 11, 2024 19:04

ஜெயலலிதா அவர்கள் உங்களை நம்பாமல்.... பன்னீர்செல்வம் அவர்களை தானே நம்பினார்.... அவரும் அதற்கு தக்கபடி விசுவாசமாக நடந்து கொண்டார்..... அப்போ அவரை தேர்ந்தெடுத்த ஜெயலலிதா அவர்களின் முடிவு தவறு என்று கூறுகிறீர்களா ???


Pandi Muni
ஜூலை 11, 2024 18:17

எப்படியோ திராவிட கட்சிகள் ஒவ்வொன்றாக தமிழகத்தை விட்டு ஒழிந்தால் சரி.


V RAMASWAMY
ஜூலை 12, 2024 19:26

கருத்து மிக நல்லது, ஆனால் தேர்தல் சமயத்தில் பிரியாணிக்கும் சாராயத்திற்கும் ஒரு வார குடும்ப சிலவுக்கும் போதாத காசுக்கும் ஏமாந்து போய் ஐந்து ஆண்டுகள் சந்தர்ப்பம் கொடுத்தீர்கள், அனுபவியுங்கள். இனி வரும் தேர்தலிலாவது சனாதனம் பெயரில் இந்து ஒழிப்பு பிராமண எதிர்ப்பு பெயரில் தமிழ் பெயரில், நீட் ஒழிப்பு, திராவிட மாடல் பெயரில் ஏமாறாமல் புத்திசாலித்தனமாக நல்லவர்களை உண்மையான தமிழர்களை அரியாசனத்தில் உட்கார வையுங்கள். தீயன ஒழிந்து நல்லன கிடைக்கட்டும் தமிழகத்திற்கு.


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 11, 2024 18:01

அதிமுக என்னும் ரதத்தை, ஒற்றை புளியமரத்தில் கொண்டுபோய் சாத்தி, குப்புற கவிழ்த்த போகிறார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை