உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமலை கோவிலில் ஜனவரி சேவைகளுக்கு முன்பதிவு அறிவிப்பு

திருமலை கோவிலில் ஜனவரி சேவைகளுக்கு முன்பதிவு அறிவிப்பு

சென்னை: திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் நடக்கின்றன. அவற்றில், வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்யாண உத்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு, நாளை காலை 10:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது. 'ஆன்-லைன்' வாயிலாக தரிசிக்கும் கல்யாண உத்சவம், ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான முன்பதிவு, நாளை மாலை 3:00 மணிக்கு துவங்குகிறது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் முன்பதிவு, நாளை மறுநாள் மாலை 3:00 மணிக்கு துவங்குகிறது. ஜனவரி மாத சிறப்பு தரிசனம், 300 ரூபாய்க்கான முன்பதிவு, வரும், 25ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. அன்று மாலை 3:00 மணிக்கு, திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவு துவங்குகிறது. திருச்சானுார், பத்மாவதி தாயார் கோவிலில், நவ., மாதத்திற்கான சிறப்பு தரிசனம், 200 ரூபாய்க்கான முன்பதிவு, 25ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை