மேலும் செய்திகள்
ஜி.பி.எஸ்., பொருத்திய பருந்தால் பரபரப்பு
11-Nov-2024
உத்தரகன்னடா, கர்நாடக மாநிலம், உத்தரகன்னடா, ஹளியாலாவின், ஜோகனகொப்பா கிராமத்தை சேர்ந்த சிறுவன் நவீன் நாராயணா பவுகாவ்கர், 13.கிராமத்தில் உள்ள அரசு துவக்க பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.சிறுவன் நேற்று முன்தினம் இரவு, பலுான் ஊதி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பலுான் எதிர்பாராத விதமாக, சிறுவனின் தொண்டையில் சிக்கிக் கொண்டது.மூச்சுவிட திணறிய அவனை, பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.டாக்டர்கள், சிறுவனின் தொண்டையில் சிக்கிய பலுானை எடுத்து சிகிச்சை அளித்தும், பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
11-Nov-2024