உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்லடத்தில் 3 பேர் கொடூர கொலை வழக்கு; சி.பி.சி.ஐ.,டிக்கு மாற்றம்

பல்லடத்தில் 3 பேர் கொடூர கொலை வழக்கு; சி.பி.சி.ஐ.,டிக்கு மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த சேமலைக் கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி டி.ஜி.பி., உத்தரவிட்டார்.திருப்பூர் மாவட்டம், சேமலைக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 78. விவசாயி. இவரது மனைவி அலமேலு, 75, மகன் செந்தில்குமார், 46 ஆகியோருடன், கடந்த, நவ., 28ம் தேதி இரவு தெய்வசிகாமணி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ewp7yva3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க டி.ஐ.ஜி., - எஸ்.பி., கண்காணிப்பில், 14 தனிப்படை மற்றும் கைரேகைகளை ஆய்வு செய்ய, 12 எஸ்.ஐ., கள் நியமிக்கப்பட்டனர். 5கொலையாளிகளை போலீசார் கண்டறிய இயலவில்லை.கொலை நடந்த தினத்தில் இருந்து தற்போது வரை, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தோட்டத்தில் வேலை செய்தவர்கள், பழைய தொழிலாளர்கள், அவர்களுடன் கருத்து வேறுபாட்டில் இருந்தவர்கள் என, நுாறுக்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரித்தனர். சந்தேகப்படும் நபர்கள் அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், இன்று (மார்ச் 18) இந்த வழக்கை சி.பி.சி.ஐ.,டிக்கு மாற்றி டி.ஜி.பி., உத்தரவிட்டார்.நவம்பர் 28ம் தேதி 3 பேர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு 110 நாட்களை கடந்துள்ளது. 110 நாட்களாக விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
மார் 18, 2025 20:53

கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? பிடிபட்டால் அவர்களுக்கு உடனே தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் எதிர்பார்ப்பில் மண் விழும். அவ்வளவுதான்.


மாறன்
மார் 18, 2025 19:03

மதிப்பு இருந்ததது இப்ப அல்ல: முன்பு இப்ப. நாறுது


Padmasridharan
மார் 18, 2025 16:47

இந்த 100 நாட்களில் எவ்வளவு செலவு_வரவு நடந்திருக்கும். Well Dome keep iit up TN Public Officers for LICE


Oru Indiyan
மார் 18, 2025 16:45

அண்ணாமலை சொன்னது சரி தானே 200 ரூ உ பி. காவல்துறைக்கு வேலை பா ஜ க தலைவர்கள் வீட்டில் முன்பு தவம் செய்து கைது செய்தது.


என்றும் இந்தியன்
மார் 18, 2025 16:24

110 நாட்களாக விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.???இதிலிருந்து தெரிவது என்ன????திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் ஏவல் துறை தனது கடமை செய்ய முடியாத ஒரு வெத்துவேட்டு?? வெறும் திமுக எதிர்ப்பாளர்களை குறிப்பிட்டு கைது செய்ய மட்டும் தான் அவர்கள் இப்பணியில் சம்பளம் / கிம்பளம் வாங்குகின்றனர்.


முக்கிய வீடியோ