தெருக்களில் புகைப்படம் எடுப்பதில் தான் மும்முரம்
முதல்வரும், துணை முதல்வரும் சென்னையில் உள்ள தெருக்களில் புகைப்படம் எடுப்பதிலும், அதை சமூக வலைதளங்களில் பரப்பி பெருமைபட்டுக் கொள்வதிலும் தான் மும்முரமாக இருந்தனர். அதேசமயம், சென்னையில் மழை குறைந்த நிலையில், மற்ற மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணிக்கவில்லை.தி.மு.க.,வின் அறிவிக்கப்படாத ஊடக பிரிவாக, தமிழக அரசின் செய்தித் துறையினர் நடந்து கொள்வதுடன், வெள்ள பாதிப்புகளில் இருக்கும் உண்மைகளில் இருந்து மக்களை திசை திருப்ப, கோபாலபுரம் வாரிசுகளை விளம்பரப்படுத்துவதிலேயே மும்முரமாக செயல்படுகின்றனர்.இது அரசின் அலட்சியத்தை தெளிவாக காட்டுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி மீது மக்களின் கோபம் அதிகரித்துள்ளது. இது, தி.மு.க.,வுக்கு அடுத்து என்ன நடக்கும் என்பதை எச்சரிக்கையாக நினைவூட்டுகிறது.- அண்ணாமலைதமிழக பா.ஜ., தலைவர்