உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறைக்குள் கஞ்சா, அலைபேசி: விசாரிக்க குழு

சிறைக்குள் கஞ்சா, அலைபேசி: விசாரிக்க குழு

சென்னை : சிறைக்குள் அலைபேசி, கஞ்சா பறிமுதல் தொடர்பாக விசாரிக்க, தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.கொலை வழக்கில் கைதான பிலால் மாலிக், 35, சையது முகமது இஸ்மாயில் என்ற பன்னா இஸ்மாயில், 48மற்றும் யோகேஷ், 40 ஆகியோர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.சிறையில் உள்ள பிலால் மாலிக்கின் தாய் மும்தாஜ், பன்னா இஸ்மாயிலின் மனைவி சமீம் பானு, யோகேஷின் சகோதரர் பிரகாஷ் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில், தனித்தனி மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், 'சிறைத்துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதில், மூவரும் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை இதுவரை வழங்கப்படவில்லை.சிகிச்சை அளிக்கக் கோரிய மனுக்களை பரிசீலிக்க வேண்டும். தாக்கிய சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று, கூறப்பட்டுள்ளது. இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, கைதிகள் மூவரின் உடல்நிலை தொடர்பாக, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் அளித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.மேலும், ''சிறையில் அலைபேசி, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டது குறித்து விசாரிக்க, உளவுத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அடங்கிய பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வேலுார் சரக டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் பி.புகழேந்தி ஆஜராகி, ''மருத்துவ அறிக்கையில், பிலால் மாலிக் உடலில் பலத்த காயங்களும், மற்ற இரு கைதிகளின் உடலில் லேசான காயங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.இதை பதிவு செய்த நீதிபதிகள், வேலுார் சரக டி.ஐ.ஜி.,யின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஜன., 30ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ராமகிருஷ்ணன்
ஜன 22, 2025 09:57

நடப்பது விடியல் அரசு. சிறை கைதிகளின் அடிப்படை உரிமையை பறிக்க வேண்டாம்.


அப்பாவி
ஜன 22, 2025 08:39

தத்திங்க. சிறைத்துறை ஆபீசருங்களை டிஸ்மிஸ் செய்து வூட்டுக்கு அனுப்புங்க. புதுசா வர்ரவங்களுக்கு முன்கூட்டியே வார்னிங் குடுத்து வேலைக்கு அமர்த்துங்க.


நிக்கோல்தாம்சன்
ஜன 22, 2025 08:30

பிலால் மாலிக் தாக்கிய காவலர் குறித்த தகவல்கள் வெளியாகுமா


Kasimani Baskaran
ஜன 22, 2025 06:33

பாரபட்சமற்ற, அனைவரிடமும் நட்பு பாராட்டும் அப்பாவுவை இந்த விசாரிக்கும் குழுவுக்கு தலைமை தாங்க வைக்கலாம்.


Padmasridharan
ஜன 22, 2025 06:26

பணத்துக்காக எதையும் செய்யும் "அதிகார பிச்சைக்காரர்கள்" காவல் துறையில் இருக்கும்வரை நாட்டில் நல்லவர்கள் கெட்டவர்கள் ஆக்கப்படுவார்கள். கெட்டவர்களிடமிருந்து பணத்தை வாங்கி வாழ்வார்கள். சட்டத்தை இவங்க தவறா பயன்படுத்திட்டு இளைஞர்களின் மேல் குறைகள் சொல்லுவார்கள். இவங்க அட்டூழியம் தான் அரசாட்சி செய்யுது


D.Ambujavalli
ஜன 22, 2025 05:56

முதலில் சிறைகள் காவலர்களின் உள்ள கருப்பு ஆடுகளை விசாரித்தால் போதுமே குழு வெளியில் அங்கும் இங்கும் சுற்றிவிட்டு யாராவது ஒரு ஏமாளி தலையில் குற்றத்தை சுமத்தும், இந்த கஞ்சா etc., போக்குவரத்து தடையின்றி நடந்துகொண்டுதான் இருக்கும்


Mani . V
ஜன 22, 2025 05:48

காமெடி


ram
ஜன 22, 2025 04:36

கட்டுப்பாடு நிறைந்த சிறைக்குள்ளே கஞ்சா சாதாரணமா கிடைக்கும் போது, பொது இடங்கலில் எவ்வளவு தாராளமாக புலக்கத்திலே இருக்குமென நினைத்துப்பாருங்க... நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை எப்படியெல்லாம் குழி தோன்டி புதைக்குது இந்த திருட்டு திராவிடம்... இவங்களுக்கு தேவை பணம் சொத்து சேர்ப்பது.. அதைத்தவிர மக்கள் எப்படி நாசமாப்போனாலும் இவனுங்களுக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லை.. இதுதான் இந்த திராவிட மாடல் திருட்டுக்கூட்டத்தின் லட்சியமே.


சம். பா
ஜன 22, 2025 04:12

எதுக்கு குழு காசு குடுத்தர உட்டுருப்பானுக இல்ல மிரட்டபட்டிருப்பானுக