உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை சூட்ட உத்தரவிட முடியாது: ஐகோர்ட்

 தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை சூட்ட உத்தரவிட முடியாது: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை தான் சூட்ட வேண்டும்' என உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீ திமன்றம் தெரிவித்து உ ள்ளது. தி ருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள செட்டி தெரு என்ற பெயர், ஜாதியை முன்னிலைப்படுத்தும் வகையில் உள்ளதால், அதை தாய் -தந்தை கோவில் தெரு என மாற்ற உத்தரவிடக் கோரி, அதே பகுதியைச் சேர்ந்த ஆர்.கே.வெங்கடேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 'ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற மனுதாரரின் முயற்சி பாராட்டத்தக்கது. எனினும், அவர் விருப்பப்படி தெருவுக்கு பெயர் வைக்க வேண்டும் எனக் கோருவதை ஏற்க முடியாது' எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து, வெங்கடேஷ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு , 'தெருவுக்கு குறிப்பிட்ட பெயரை தான் சூட்ட வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ' மனுதாரரின் ஆலோசனையை அரசின் சட்டப்பூர்வ கடமையாகக் கருத முடியாது என்பதால், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை' எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செ ய்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !