உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு எதிராக வழக்கு

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு எதிராக வழக்கு

சென்னை:தமிழக அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அசோக் நகரை சேர்ந்த இனியன் ஆகியோர், பொது நல மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் விபரம்: இந்த திட்டத்துக்கு, 54.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு முத்திரையுடன் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ள இந்த திட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அரசின் திட்டத்தை, தனி மனித சாதனை போல் விளம்பரப்படுத்துவது தவறானது. அரசியல் உள்நோக்கத்துடன், கோடிக்கணக்கான ரூபாய், அரசு பணம் செலவு செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தன்னார்வலர்கள் வாயிலாக திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறினாலும், இதில் தி.மு.க.,வினர் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு, தேர்தல் பரப்புரை நடத்தப்படுகிறது. எனவே, இந்த திட்டத்தின் விளம்பரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம், ஸ்டாலின் என்ற பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும், தி.மு.க., மீது, தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விசாரணைக்கு வர உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ