உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வனத்துறையினரை தாக்கிய வி.சி., நிர்வாகிகள் மீது வழக்கு

வனத்துறையினரை தாக்கிய வி.சி., நிர்வாகிகள் மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே முட்டல் ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சி, வனத்துறை சூழல் சுற்றுலா திட்டத்தில் செயல்படுகிறது. நேற்று முன்தினம் மதியம், அம்மம்பாளையத்தை சேர்ந்த வி.சி., கட்சி ஆத்துார் ஒன்றிய செயலர் ராஜீவ்காந்தி, 40, கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி துணை செயலர் நேசத்தமிழன், 42, இரு கார்களில் வந்தனர்.உள்ளே செல்ல, நுழைவு சீட்டு வாங்க மறுத்து வனத்துறையினருடன் வாக்குவாதம் செய்து, தகாத வார்த்தைகள் பேசினர். வனத்துறையினர் அனுமதிக்க மறுத்த நிலையில் ஏரி, பூங்காவுக்குள் சென்று குடிலில் அமர்ந்து சாப்பிட்டனர். மாலையில் வந்த, ஆத்துார் வனச்சரகர் ரவிபெருமாள் உள்ளிட்ட குழுவினர், 'இங்கு குடிக்கக்கூடாது; உள்ளே வர டிக்கெட் எடுத்திருந்தால் காட்டுங்கள்' என, கேட்டனர். அப்போது, இருவரும் ரவிபெருமாள் உள்ளிட்ட வனத்துறையினரை தகாத வார்த்தை பேசி, சீருடையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளனர். இதில், தற்காலிக பணியாளர் குன்னுார் முருகன், 27, காயமடைந்தார். இந்நிலையில், வனத்துறையினரை தாக்கிய வீடியோ பரவியது. வனவர் முருகேசன் புகார்படி, ராஜீவ்காந்தி, நேசத்தமிழன் மீது எட்டு பிரிவுகளில், ஆத்துார் ஊரக போலீசார் வழக்குப்பதிந்தனர்.அதேபோல், நேசத்தமிழன் அளித்த புகாரில், 'ஏரி குடிலில் அமர்ந்து சாப்பிட்டபோது, வனச்சரகர் உள்ளிட்ட அலுவலர்கள், 'மாட்டுக்கறி எடுத்து வந்து சாப்பிடக்கூடாது' என இழுத்துச்சென்று தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Lion Drsekar
அக் 14, 2024 13:22

ஒரு தொண்டன் என்றால் என்ன , அவர்கள் சட்டைப்பைகளில் தலைவர்களின் புகைப்படம் வெளியே தெரியும் வகையில் வைத்துக்கொண்டு, செல்லும் வானங்களில் அவர்களது அங்கீகாரக் கொடியை வைத்துக்கொண்டு சென்றால் , அதன் ஜாலியாய் அனுபவிக்கவேண்டும் என்றால் , அதை ஓட்டுபவர்கள் மற்றும் அதில் பயணம் செய்யும் தொண்டர்களுடன் பணித்தாள் மட்டுமே தெரியும் , அது ஒரு தனி உலகம், வாழ்த்துக்கள், வந்தே மாதரம்


Parthasarathy Badrinarayanan
அக் 14, 2024 06:34

அவனுங்கள அங்கேயே சுட்டு இருக்கணும். சட்டத்தை மதிக்காத மிருகங்கள்


வைகுண்டேஸ்வரன்
அக் 13, 2024 10:42

பிஜேபி யின் கட்டளைப் படி இந்த வி சி க நடக்க ஆரம்பித்த போதே, இப்படியெல்லாம் நடத்துவார்கள் என்று நினைத்தேன். நடத்தி விட்டார்கள். இனி டோல் கேட், பிரியாணி கடைகள், டிராபிக் போலீஸ்காரர் என்று விசிக வினரின் நிறைய அடாவடிகள் நடக்கும். அப்போ தானே திராவிட மாடல் சரியில்லை, விடியல் அரசு சரியில்லை என்று பேசமுடியும்?


vadivelu
அக் 13, 2024 14:24

மது ஒழிப்பு மாநாடு நடத்தும்போதே நீங்கள் சொன்னேர்கள், இவர்கள் ஆளும் கட்சி சொல்படி செய்வார்கள் என்று.


Kanns
அக் 13, 2024 10:05

Detain these Goondas under Goondas Act for Goondaism & False Complaints against Society


raja
அக் 13, 2024 09:40

அப்புறம் நாங்க யாரு


Bala
அக் 13, 2024 09:17

.... என்று மத ரீதியாக திசை திரும்பும் எருதுகள்.


Bala
அக் 13, 2024 09:15

இந்த ரவுடிகளின் நடவடிக்கை அயோக்கியத்தனம். சட்டப்படி பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசிக வின் ஏமாற்று மது ஒழிப்பு மாநாடு மகா வெற்றி. கட்சியிலிருந்து இவர்களை நீக்குவாரா திருமா???


நிக்கோல்தாம்சன்
அக் 13, 2024 08:04

குடிக்க கூடாது என்று அதிகாரிகள் சொல்லியுள்ளனர் , ஆனால் மாட்டுக்கறி என்று திசை திருப்பும் விசி கட்சியினர் குறித்து கடுமையான நடவடிக்கையை ஸ்டாலின் எடுக்க வேண்டும் , இதில் தயவு தாட்சண்யம் பார்க்கக்கூடாது


sankaranarayanan
அக் 13, 2024 08:00

வனத்துறையினரை தகாத வார்த்தை பேசி, சீருடையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளனர். இவைகளை இவர்கள் செய்தால் நீதி மன்றமே கண்டுகொள்லாது அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது ஆனால் அதேபோன்று மற்றவர்கள் இவர்களுக்கு செய்தால் உடனே வன்கொடுமை என்றும் ஆச்சா போச்சா என்றும் தலித் மீது தாக்கிவிட்டார்கள் என்ற வன்கொடுமை சட்டம் பாயும் மக்களும் வேடிக்கை பார்ப்பார்கள் எப்போது இந்தியாவில் இட ஒதுக்கிடு ஒழியுமோ எல்லாரும் சமம் என்ற நியதி கடைபிடிக்கப்படுமோ அப்போதுதான் நமது ஜனநாயகம் தழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் முன்னேறுவார்கள்


N Sasikumar Yadhav
அக் 13, 2024 07:24

அடங்க மறு அத்துமீறு என்பதையே கொள்கையாக வைத்துள்ளவனுங்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் திருட்டு திராவிட மாடலுடன் கூட்டணி வைத்திருக்கிற மனபிராந்தியில் அரசு ஊழியர்களை தாக்க துணிந்திருக்கிறானுங்க . இவனுங்க மீதாவது நடவடிக்கை எடுத்து கைதுசெய்து சிறையில் அடைக்க தைரியமிருக்கிறதா ஸ்காட்லாண்டு யார்டு காவல்துறையினருக்கு


புதிய வீடியோ