உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து ஒற்றுமையை தடுக்கவே ஜாதி, மொழி பிரச்னை: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் குற்றச்சாட்டு

ஹிந்து ஒற்றுமையை தடுக்கவே ஜாதி, மொழி பிரச்னை: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மொழி பிரச்னையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை விடுத்தார்.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் தலைவர், பொதுச்செயலருக்கு அடுத்த அதிகாரம் மிக்கவர்கள் மாநில அமைப்பாளர்கள்தான். ஆண்டுதோறும் மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள்தான், ஆர்.எஸ்.எஸ்., செயற்குழு, பொதுக்குழுவில் விவாதித்து செயல்படுத்தப்படும்.இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த, ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளர்கள் கூட்டம், டில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே, தமிழகத்தைச் சேர்ந்த மாநில அமைப்பாளர்கள் பிரஷோபகுமார், ஆறுமுகம், இணை அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல், சமூக சூழல், சந்திக்கும் சவால்கள், சாதித்தவை குறித்து மாநில அமைப்பாளர்கள் எடுத்துரைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிகள், ஆப்பரேஷன் சிந்துார், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.பா.ஜ., ஆளும் மஹாராஷ்டிராவில், பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தியை கட்டாயமாக்கியது பெரும் சர்ச்சையானது. இதனால், இந்த முடிவை அம்மாநில பா.ஜ., அரசு கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பா.ஜ., அரசு ஹிந்தியை திணிப்பதாகக் கூறி, சிவசேனா மிகப்பெரிய பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. பிரிந்து கிடந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே சகோதரர்களை இணைத்துள்ள இந்த விவகாரத்தை, பா.ஜ.,வும், சங் பரிவார் அமைப்புகளும் பெரும் பின்னடைவாக பார்க்கின்றன.இது குறித்து, கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதம் நடந்துள்ளது. அப்போது, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே ஆகியோர் பேசியதாவது:ஆரம்ப காலம் தொட்டே ஹிந்து ஒற்றுமையை சிதைக்க, ஜாதி, மொழி பிரச்னையை நம் எதிரிகள் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதை எதிர்கொண்டுதான், கடந்த 100 ஆண்டுகளாக நாம் வளர்ந்திருக்கிறோம். எனினும், ஜாதி, மொழி பிரச்னைகளை வைத்து, ஹிந்து ஒற்றுமையை அவ்வப்போது சிதைத்து வருகின்றனர். அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மொழி பிரச்னையில் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், ஹிந்து ஒற்றுமையில் மட்டுமல்ல, தேச ஒற்றுமையிலும் பின்னடைவு ஏற்படும். இவ்வாறு அவர்கள் பேசியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venugopal s
ஜூலை 12, 2025 13:00

தமிழர்கள் மொழியின் அடிப்படையில் ஒற்றுமையாக இருப்பது இவர்கள் கண்களை உறுத்துகிறது!


ஆரூர் ரங்
ஜூலை 12, 2025 14:48

ஆனா ஆளும் கட்சி தெலுங்கு?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2025 11:03

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகள் திராவிட கட்சிகள் வளர்ப்பதற்கு காரணமே இந்துக்களின் ஒற்றுமை சிதைக்கவே.


Haja Kuthubdeen
ஜூலை 12, 2025 18:23

திராவிட கட்சிகளால்தான் கொட்டாங்கச்சியில் டீ கொடுத்த பழக்கம் ஒழிந்தது... கல்வி அனைவருக்குமானது என்பது சாத்தியமானது...வெறும் காலோடு தெருவில் நடந்தவர்களை காலணி போட்டு நடக்க உரிமை வாங்கி கொடுத்ததும் திராவிட கட்சிகள்தான்.


Vijayaraghavan L
ஜூலை 12, 2025 09:28

Well Said. Already europe has becoming muslim majority


AMMAN EARTH MOVERS
ஜூலை 12, 2025 09:09

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை பிரிவினைகளை கொண்டு வந்தவர்களே நீங்கள்தான் அதை திராவிட கும்பல் மேலும் ஊத்தி பெரிதாக்கிவிட்டது


Dandanakka
ஜூலை 12, 2025 09:05

தல கரெக்ட்டா தானே சொல்லுதூ


V RAMASWAMY
ஜூலை 12, 2025 09:03

முதன் முதலில், மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எதிர்ப்பையும் மீறி, மொழிவாரி மாகாணங்களை சுதந்திர பாரதத்தில் அறிமுகப்படுத்தியது KHANGRESS தான், அதன் தீய விளைவுகளுக்கு அஸ்திவாரம் அமைத்த கட்சி அதனை நாட்டுக்கு பாதகமாகவும் தங்களுக்கு சாதகமாகவும் எடுத்துக்கொண்டு அதற்குமேல் சாதிப்பிரச்சினையையும் கையில் எடுத்துக்கொண்டு சமூக நீதி, தமிழர்கள் உரிமை, அது இது என்று இல்லாதது பொல்லாதெல்லாம் சொல்லி வாய் ஜாலம் செய்து ஏமாற்றி மக்களை மடையர்களாக ஆக்கிவிட்டார்கள். அந்த மோகத்தில் மக்களும் ஏமாந்து இப்பொழுது அவஸ்தையோ அவஸ்தை. 2006 வழி காட்டட்டும்.


pmsamy
ஜூலை 12, 2025 08:48

ஆர் எஸ் எஸ் போன்ற தீவிரவாத இயக்கத்தோடு இணக்கமாக செயல்படும் பாஜகவை கண்டிக்காத இந்திய மக்களுக்கு பல சோதனைகள் வரும். பாஜக இருக்கும் வரை இந்திய மக்களுக்கு சந்தோஷம் என்பதே இருக்காது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 12, 2025 07:52

மூர்க்கன்ஸ் ஹிந்து மத சாதி வேறுபாடுகளைக் கிளறுவதற்கும் அதே காரணம்தான் .....


Haja Kuthubdeen
ஜூலை 12, 2025 18:06

மூர்க்கங்க மதம் புதியயு..உலகம் தோன்றிய முதல் பழமையானதுன்னு பெருமை கொள்கிறீர்.அப்ப முதலே ஜாதி பிரிவினை..முற்பட்டோர் பிற்பட்டோர்னு வழக்கம் இருந்துள்ள போது மற்ற மதங்களின் மீது ஏன் பாய்கிறீர்கள்.உங்களுக்கு ஆசைன்னா அங்கேயும் ஜாதிகள் இருக்குன்னு சொல்லி சந்தோசப்பட்டு கொண்டு இருக்கலாமே...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 12, 2025 07:50

இவர் சொல்வது முற்றிலும் உண்மை ....... திமுக செய்வது இதைத்தான் ........


தியாகு
ஜூலை 12, 2025 07:30

மூர்க்க கும்பலிடமும் மதம் மாற்றும் கும்பலிடமும் இருக்கும் ஒற்றுமை இளிச்சவாய இந்துக்களிடம் இருந்திருந்தால் கட்டுமர திருட்டு திமுக என்ற கட்சியே டுமிழகத்தில் இருந்திருக்காது. தேர்தல்களில் அந்த இரு கும்பலும் மதம் பார்த்து ஓட்டு போடுவார்கள். இளிச்சவாய இந்து நடுநிலை என்று சொல்லி தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு கட்டுமர திருட்டு திமுக போன்ற கட்சிகளுக்கு ஓட்டு போடுவார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.


Haja Kuthubdeen
ஜூலை 12, 2025 18:11

மூர்க்ஸ் பாவாடைகளிடம் ஒற்றுமை மத நம்பிக்கை இருக்குன்னு புலம்புவதை விட்டு அனைத்து ஜாதிகளையும் ஒழித்து அனைவரும் சமம்..அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற மாற்றத்தை கொண்டு வரலாமே..யார் உங்களை தடுப்பது...உலகில் ரெண்டே ஜாதிதான் ஒன்று ஏழை ஒன்று பணக்காரன்...


Haja Kuthubdeen
ஜூலை 12, 2025 18:15

முஸ்லிம்..கிருத்தவர்களுக்கு எதிரா பேசுபவர்களுக்கும்..அவர்களை அழிக்கனும் என்று நினைக்கும் கட்சிகளுக்கும் அவய்ங்க எப்டிப்பா ஓட்டு போடுவாங்க...


புதிய வீடியோ