உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்'', என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியரின் ஜாதி சான்றிதழ் குறித்த விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பாங்க் ஆப் பரோடா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்எஸ் சுப்ரமணியம், கே . ராஜசேகர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஜாதி சான்றிதழின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க கால வரம்பு நிர்ணயிக்க அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. பழங்குடியினரின் ஜாதி சான்றிதழ் வழங்க அரசு வகுத்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதி சான்றிதழின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழு அமைக்க வேண்டும். இக்குழு விரைந்து விசாரிக்க வேண்டும்.முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக ஆறு வாரத்திற்குள் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R.Varadarajan
மே 03, 2025 16:56

தமிழகத்தில் துட்டை நவுட்டினால் நடக்காத்து ஏதேனும் உண்டோ? ஆணையே பெண் என சான்று வாங்கிடமுடியுமே பணம் பாதாளம் வரை மட்டும் அல்ல அதற்கும் கீழே பாயுமே


தாமரை மலர்கிறது
மே 03, 2025 00:30

சாதியை ஒழிப்போம் ஒழிப்போம் என்று சொல்லிக்கொண்டே சாதியை வளர்த்து கொண்டு இருக்கிறார்கள்.


Ramesh Sargam
மே 02, 2025 22:07

ஜாதிகள் இல்லையடி பாப்பா, என்று கூறிய பாரதிக்கு என்ன மரியாதை?


GMM
மே 02, 2025 18:54

போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்ற விவகாரம். ?தனி நபர் மீது புகார் பற்றி வருவாய் துறை விசாரிக்க வேண்டும். கால எல்லை இருக்கும். இதில் அரசின் பங்கு இல்லை. ஜாதி சான்றிதழின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க மாநில, மத்திய போலீசுக்கு தான் அதிகாரம்?.


GoK
மே 02, 2025 18:37

சாதிச் சான்று யாருக்கு வேணும்...கருணாநிதி குடும்ப நிதிய பிரிச்சுக் கொடுங்க...வாயத் திறப்பானுங்களா?


சமீபத்திய செய்தி