| ADDED : ஜன 09, 2024 12:50 PM
சென்னை: ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று(ஜன.,09) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். அதேபோல் தென்காசி, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கலெக்டர் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள், பாதுகாப்பாக இருக்குமாறு துாத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.