உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பராமரிப்பு பணிகளால் ரயில் சேவைகளில் மாற்றம்

 பராமரிப்பு பணிகளால் ரயில் சேவைகளில் மாற்றம்

மதுரை:மதுரை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பகுதி ரத்து * ஆக. 7 (இன்று), 8, 9, 10, 12ல் ஈரோடு - செங்கோட்டை (16845), ஆக. 8, 9, 10, 11, 13ல் செங்கோட்டை - ஈரோடு (16846) ரயில்கள் திண்டுக்கல் - செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன. * ஆக. 11, 18, 25, 26, 27, 28ல் மதுரை - ராமேஸ்வரம் - மதுரை ரயில்கள் (56711/56714), மண்டபம் - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகின்றன. * ஆக. 12, 13ல் பாலக்காடு - திருச்செந்துார் - பாலக்காடு ரயில்கள் (16731/16732), திருநெல்வேலி - திருச்செந்துார் இடையே ரத்து செய்யப்படுகின்றன. மாற்றுப் பாதை * ஆக. 8, 9, 10, 11, 13, 20, 27ல் செங்கோட்டை - மயிலாடுதுறை (16848), ஆக. 9, 13, 20, 27ல் நாகர்கோவில் - மும்பை எல்.டி.டி., (16352), ஆக. 8ல் கன்னியாகுமரி - ஹவுரா (12666) ஆகிய ரயில்கள் மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படுகின்றன. * ஆக. 12ல் குருவாயூர் - தாம்பரம் (16128), ஆக. 22, 29ல் நாகர்கோவில் - கச்சிகுடா (16354) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படுகின்றன. * ஆக. 17, 22, 25, 27, 29, செப். 1ல் நாகர்கோவில் - கோவை (16321), செப். 3ல் கோவை - நாகர்கோவில் (16322) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில் ஈரோடு - செங்கோட்டை - ஈரோடு ரயில்கள் (16845/16846) பகுதி ரத்து செய்யப்பட்ட நாட்களில், மதுரை - செங்கோட்டை இடையே கோவில்பட்டி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில், அதிகாலை 5:20 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு காலை 9:25 மணிக்கு மதுரை வருகிறது. மறுமார்க்கத்தில் மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு இரவு 10:30 மணிக்கு செங்கோட்டை செல்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை