உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மார்ச்சில் சென்னை - காஜியாபாத் விமான சேவை

மார்ச்சில் சென்னை - காஜியாபாத் விமான சேவை

சென்னை:சென்னையில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் நகரில் உள்ள ஹிண்டான் விமான நிலையத்திற்கு, நேரடி விமான சேவையை, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம் மார்ச்சில் துவங்க உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் நகரில், ஹிண்டான் விமான நிலையம் செயல்படுகிறது. உள்நாட்டு விமான நிலையமான ஹிண்டானுக்கு, குறைந்த கட்டண விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், சென்னையில் இருந்து ஹிண்டானுக்கு தினசரி விமான சேவை வழங்க, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திட்டமிட்டுஉள்ளது. வரும் மார்ச், 23ம் தேதி விமான சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து தினமும் காலை, 5:55 மணிக்கு புறப்படும் விமானம், காலை, 9:05க்கு ஹிண்டான் சென்றடையும். ஹிண்டானில் இருந்து தினமும் மாலை, 3:20க்கு புறப்பட்டு, மாலை 6:05 மணிக்கு சென்னை வந்தடையும். இதற்கு, 'போயிங் 737' வகை விமானம் இயக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை